Sunday, January 11, 2015

ட்வீட் உலகின் மேஜர் சுந்தர்ராஜன் யார்?

1 ட்விட்டருக்கான சாகித்ய அகாடமி விருது அரசே தந்தா அது சா"கீச்சிய" விருது னு சொல்லலாம்


================


2 சூடான முத்தம் பெற்று 10 நிமிஷம் கழிச்சு காதலியிடம் பாட்டு - ஆறிய உதடுகள் உன்னுது.


==================


3 விக்ரம் = ஷங்கர் படத்தோட மோதுவதால் "ஐ"யையோ!னு உங்க ரசிகர்கள் அலர்றாங்களாமே?

 அஜித் = "என்னை அறிந்தால்" இப்டி பேசி இருக்க மாட்டீங்க


===============

4 முகம்மது பின் துக்ளக் நாடகம் so beautiful :-) சர்வர் சுந்தரம் நாகேஷ் பியூட்டிபுல்

================


5  டவுன் பஸ் ல பொண்ணுங்க டக் டக் னு முன்னால போய் நின்னுக்கறாங்க.முன்னால ஆளுயரக்கண்ணாடி வெச்சுடனும்.முகம் தெரியும்


==============


6 அலாரம் அடிக்கும் முன் குறித்த நேரத்தில் அதிகாலையில் நீ எழுந்து விட்டால் மூளை உன் கட்டுப்பாட்டில் என அர்த்தம்


===============


7 ஒரு ஹை கிளாஸ் பிகரு டிசர்ட் ல ஏணி படம் போட்டிருக்கு.ஏதாவது குறியீடா இருக்குமோ?


=============


8 சக போட்டியாளரின் திறமையைப்பொறுத்து உன் திறமை மேம்படும்


===============


9 அன்பே! நீயும் வெட்டி ! நானும் வெட்டி!,உன் பிறந்தநாளுக்கு ஒரு கேக் வெட்டி நாம் போலாமா ஊட்டி?


===============


10 மிஸ்! DP ல நீங்களா ? டாப். பெரியவர்கள் யாருமிருப்பின் சுற்றிப்போடச் சொல்லுங்கள்!"இல்லைன்னா அட்ரஸ்.சொன்னா.நானே வந்து சுத்திப்போடறேன்


=================


11 மார்கழித்திங்கள் அல்லவா? இல்லையே.இன்னைக்கு மார்கழி செவ்வாய் அல்லவா?


==================


12  பொண்ணுங்க கிட்டே கடலை போடுவதையே எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்ட்டிவிட்டியாக வைத்திருக்கும் அனைவரும் ஒரு வகையில் விவசாயினரே?


=================


13  20 வருடங்கள் கழித்து வரவேண்டிய படத்தை 10 வருடம் முன் தரும் நடிகர் கமல்.இயக்குநர் கே பாலச்சந்தர்


=====================


14  அர்த்தஜாமத்தில் ஆந்தைபோல் விழித்து தூக்கத்தை கெடுக்காமல் நீ உறங்கினால் அதிகாலையில் நீ சேவலுக்கு முன் எழுந்து சூரியனை எழுப்பலாம்


===============


15 நிமிஷத்துக்கு ஒரு் பஸ் வரும் னு தெரிஞ்சும் பஸ் ஸ்டாப் ல பக்கா பிகர் இருந்தா " மிஸ்.!11 ம் நெம்பர் பஸ் போயிடுச்சா?" னு கேட்பான் தமிழன்

===============


16 இந்தக்காலத்துப்பொண்ணுங்க வாசல் தெளிப்பது கூட சுடு தண்ணீர் ல தான் போல .


============


17 இன்று அகில உலக இசை தினம் .எனவே வீட்டில் உன் சம்சாரத்துக்கும் ,ஆபீசில் உன் உயர் அதிகாரிக்குக் ஜிங் ஜக் அடி.வாழ்வில் முன்னேறுவாய்!(24 12 14 )


==============


18 ட்வீட் உலகின் மேஜர் சுந்தர்ராஜன் ஆக ஆசையா? தமிழ் ல போட்ட ட்வீட்டை நைட்டில் இங்க்லீஷில் போடவும்.

============

19 காதலி நைலக்ஸ் புடவை அணிந்து உன்னுடன் சினிமா வுக்கு வந்தால் அது உன் லக்ஸ்

===============


20 கருணை மலர் க்கு KARUNAI malar தானே வரனும்? karunai male r னு இருக்கே? ஏதாவது குறியீடா இருக்குமோ?


=====================

0 comments: