Saturday, July 25, 2026

அனந்தன்காடு(2026)- தமிழ் - சினிமா விமர்சனம் (பொலிடிக்கல் ஆக்சன் திரில்லர்)

 
a

மலையாளம்,தமிழ் ஆகிய இரு மொழிகளில் உருவான படம் என விளம்பரம் செய்திருந்தாலும் இது ஒரு மலையாளப்படம் தான்.தமிழில்  டப் செய்திருக்கிறார்கள்.


முரளி கோபியின் திரைக்கதையில் ,ஜி யென் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில்  ஆர்யா நடித்திருக்கும் இந்தப்படம் எப்படி வந்திருக்கிறது என்று பார்ப்போம்.

                              


ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன் கேரள மாநிலத்தின் முதல்வர்.தனது அரசியல் எதிரிகளைப்பழி வாங்க ஒரு  ஐ ஜி யுடன் சேர்ந்து கொண்டு நான்கு பேர் கொண்ட குழுவை வைத்துத்தனக்கு வேண்டாத ஆட்களை எல்லாம் போட்டுத்தள்ளுகிறார்.

ஒரு கொலைக்கேஸ் சிபி ஐ விசாரணைக்கு வர இனிமேல் அந்த நான்கு  பேர் கொண்ட குழு இருந்தால் நமக்கு ஆபத்து என்று வில்லனான முதல்வர் நினைக்கிறார்.சிபி ஐ  விசாரணையில் அந்த நால்வரும் மாட்டினால் நாமும் மாட்டிக்கொள்வோம்.நம்மைக்காட்டிக்கொடுத்து விடுவார்கள் என நினைக்கிறார்.


நாயகன் ஒரு போராளி.1989ல் இலஙகையில்  நடந்த ஒரு கொடூரத்தாக்குதலில் தன் அம்மாவையும் ,சகோதரியையும் இழக்கிறான்.பின் அங்கிருந்து தப்பித்து இந்தியா வந்து தமிழக ,கேரள பார்டரில்  வில்லனின் அடியாட்களான நான்கு பேர் கொண்ட குழுவில் இணைகிறான்.


வில்லனான முதல்வர் + ஐ ஜி ,நாயகன் இரு தரப்புக்கும் எப்படி மோதல் ஏற்படுகிறது? யார் ஜெயித்தார்கள் ?என்பது மீதித்திரைக்கதை


நாயகனாக ஆர்யா நடித்து இருக்கிறார்.தன் கண் எதிரே சகோதரி சிதைக்கப்படும்போதும் ,அம்மா கொலை செய்யப்படும்போதும் ஆக்ரோஷமான நடிப்பை  வெளிப்படுத்தி இருக்கிறார்.


வில்லனாக இந்திரன்ஸ் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.க்ளைமாக்சுக்கு முன் வரும் ஒரு முக்கிய சீனில் அதகள நடிப்பு.


ஐ ஜி யாக சுனில் கொடூரமான இன்னொரு வில்லன் ரோல் செய்திருக்கிறார்.


நிகிலா விமல் ,சாந்தி பாலச்சந்திரன்,தேவமோகன்,முரளி கோபி ,போஸ் வெங்கட் என மற்ற நடிகர்,நடிகைகளின் நடிப்பு கன கச்சிதம்.

எஸ் யுவா தான் ஒளிப்பதிவு.இரவில் நடப்பதாக காட்டப்படும் காட்சிகளில் உயிரோட்டமான ஒளிப்பதிவு.


இசை அஜனீஷ் லோக்நாத்.பின்னணி இசை தெறிக்கிறது.சண்டைக்காட்சிகளை வடிவமைத்த  சக்தி சரவணனின் பங்களிப்பும் அருமை.


சபாஷ்  டைரக்டர்

1 போலீஸ் ஐஜி யைத்தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் இளைஞர்கள் ஓப்பனிங்க் சீனிலேயே எதிரார்ப்பைத்தூண்டுகிறார் இயக்குநர்.

2 வழக்கமாக குணச்சித்திரக்கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கும் இந்திரன்சை அதிரடி வில்லனாகக்காட்டியது  நல்ல ஐடியா

3 இண்ட்டர்வெல் பிளாக் சீன் அருமை.

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 ஒரு மாநில முதல்வர் வெறும் நான்கு பேர்கள் கொண்ட குழுவை மட்டும் நம்பி இருப்பாரா?ஆல்ட்டர்நேட்டிவ் ஆட்களே கிடைக்க மாட்டாங்களா?

2  எமோஷனல் கனெக்டே  இல்லை.யாருக்கு என்ன ஆனால் நமக்கென்ன?என்று தேமே என்று பார்த்துக்கொண்டிருக்கும் நிலை தான்.

3 யூகிக்கக்கூடிய திரைக்கதை ,அடுத்தடுத்து இப்படி தான் நடக்கும் என்று நாம் நினைப்பது போலவே காட்சிகள் நகர்வது சலிப்பு .

4 மாநில முதல்வரையும் ,போலீஸ் ஐஜி யையும் காட்டும்போது பாதுகாப்பு விஷயஙகள் எவ்வளவு பக்காவாகக்காட்ட வேண்டும்? ஏதோ ரசிகர் மன்ற உறுப்பினர் ரேஞ்சுக்குக்காட்டுகிறார்கள்.நம்பகத்தன்மையே வரவில்லை

5 மெயின் வில்லனான முதல்வரை முதலில் போட்டுத்தள்ளி விட்டு இன்னொரு ஐ ஜி வில்லனை கிளைமாக்சில் தீர்த்துக்கட்டுவதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். 18+ வன்முறைக்காக 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஒழுஙகற்ற திரைக்கதை ,எமோஷனல் கனெக்ட் ஆகாத சம்பவங்கள் இவற்றால் விழலுக்கு இரைத்த நீர் தான் இந்தப்படம். ரேட்டிங்க் 2/5