Tuesday, June 02, 2015

ட்விட்டர்ல இருக்கற ஆம்பளைங்க எல்லாம் எவ்ளோ நல்லவங்க தெரியுமா?

உங்களுக்கு அப்போ எப்டி ஃபீலிங்க் இருந்தது?னு ஆம்பளைங்க கிட்டே இந்க்த கோபிநாத் கேட்டதா சரித்திரமே இல்லை


=========


2 விநோதமான கனவுகள் உங்களுக்கு தொல்லை தருதா? தொடர்பு கொள்க அப்டினுஒரு ஃபோன் நெம்பர் விஜய்டிவில காட்றாங்க. ஏப்பா இப்டி எல்லாம் ?

==========================================================
3 உங்க கணவர் உங்க கிட்டே அன்பு செலுத்தாதப்போ உங்களுக்கு எப்படி இருக்கும்?னு கோபிநாத் கேட்கறாரு.இது புரோக்ராமுக்காக அஃபிசியல் கேள்விதானா?
===========4 உண்மையான அன்பை உணராமல் அலட்சியப்படுத்துபவர் பின் அதை எண்ணி எண்ணி மனம் வருந்தும் நாள் வரும்==========


5 நீ திருடுவது தப்பில்லை.திருடியதில் குறிப்பிட்ட பங்கை குறிப்பிட்ட சிலருக்கு பிரித்துக்கொடு.அரியணை உன்னைத்தேடி வரும்


===============

6 பொண்ணுங்க கரப்பான் பூச்சிக்கு /பல்லிக்கு/நாய்க்கு பயப்படுவாங்க.புருசனுக்கு பயப்படமாட்டாங்க


=============


7  தீ1=6 கோடி திருடுனதுக்கு 100 கோடி அபராதம்.4 வருசம் ஜெயில்
தீ 2 = திருடுன 66 கோடி + 100 கோடி அபராதம் = 166 கோடியை எனக்கு கொடு.நீ ரிலீஸ்


=============


8 காலைல 8 30 டூ 9 30 பீக் அவர் , பஸ்/ ரயில் ல போகும் டைம்னு தெரிஞ்சும் ஒரு பொண்ணு சாப்பிட்டீங்களா..ஆபீஸ் போயாச்சா..?னு கேட்டுட்டு இருக்


================


9 வெய்யில்ல வேலை செய்யும் விவசாயி கூட புன் சிரிப்போடு வேலை செய்யறார்.இந்த ஏசி ரூம்ல வேலை செய்யும் பேங்க் ஆபீசருங்க ரொம்ப சலிச்சுக்கறானுங்க.


==============


10 நடுரோட்டில் பெண்ணின் ஸ்கூட்டி ் ஸ்டார்ட் ஆகாமல் இருந்தால், முதல் கட்டமாக நீ ஸ்கூட்டியை ஓரம் கட்டு


===============

11 மற்றவர் கூறிய மேற்கோள்களை நீ மற்றவர்களுக்கு கூறிக்கொண்டிராதே! நீ புதிய மேற்கோள்களை உருவாக்கு


================

12 நன்னாரி சர்பத் கூட வாங்கித்தராதவனை நன்னாரிபயலே எனலாமா? கஞ்சப்பிசினாரிப்பயலே எனலாமா?


===============

13 ஹார்லிக்ஸ் குடிச்சா வளர்ச்சிக்கான 5 அடையாளங்கள் தெரியுமாம்.அன்பே! டோட்டலாவே நீ 5 அடி உயரம் தானே இருக்கே?==============

14 காஞ்சனா 2 பஞ்ச் சேஞ்ச்டு = நீ மாசிலாமணின்னா நான் பக்கா மாசிலாமணி


=============


15 ட்விட்டர்ல இருக்கற ஆம்பளைங்க எல்லாம் எவ்ளோ நல்லவங்க பாருங்க.ராத்திரி 11 30 ஆகியும் பொண்ணுங்க தைரியமா பயம் இல்லாம உலா வர்றாங்க


==============

16 ஸ்ரீ தேவியை போனிகபூருக்கு முன்பே அந்த டாக்டர் போனி பண்ணப்ப அப்டியே ஷாக் ஆகிட்டேன்


===========


17 ஸ்கூல் ல டெய்லி போர்டுல மொக்கை கவிதை எழுதி சக்க பிகரை படிக்க வெச்சதே பெரிய சாதனையா நினைச்சது்


===============

18 ஸ்கூல்ல பரத நாட்டியம் ஆடுன பொண்ணு கிட்டே பாட்டனி ரெக்கார்டு நோட் கொடுத்து ஆடச்சொல்லி இதான் ரெக்கார்டு டான்ஸ்னு மொக்கை போட்டது்


==================

19   நினப்பு தான் பொழப்பைக்கெடுக்கும் என்றாய்! உன் நினைப்பு தான் என் பிழைப்பு

==================

20 சாதா தமிழன் சத்த்ம் இல்லாம குளிச்ட்டு வந்துடுவான்.நெட் தமிழன் இப்பதான் மச்சி குளிக்கவே போறேன்"னு FBல ஸ்டேட்டஸ் போடுவான்


================

0 comments: