Friday, June 05, 2015

எப்போதும் ஏதோ ஒரு பிகரிடம் கடலை போட்டுக்கொண்டே இருக்கும் MOOD

1  பஸ்ல ஒரு பிகரு டைப்பிங் ஸ்பீடு பார்த்து அரண்டுட்டேன்.டைப்ரைட்டர் போல் 10 விரல்ல டைப்புது.காதலனுக்குத்தான்

===========

2 ஓவர் ஸ்பீடு ஓமனா காதலனுக்கு டைப்பிய செய்தி = டேய்.மழை வருது.ஸ்டாப்பிங்க்கு குடையுடன் வா # 22 விநாடில டைப்பிடுச்சு.


============


3 என்னவளால் என் குலதெய்வமான ் ஸ்மார்ட்போன்" குள தெய்வமானது.தெப்பக்குளத்தில் தூக்கிப்போட்டுட்டா

=============

4 பேங்க்ல லோன் வாங்கிட்டு மல்லையா போல் ஏமாத்த நினைக்காதே! வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்துட்டு கோர்ட்டில் கேவலப்பட்டு நிக்காதே!


=============


5 அன்பே! காலை டிபனாக தினம் 8 இட்லி சாப்பிடும் என்னை விட 3 அல்லது 4 இட்லி சாப்பிடும் நீ குண்டாக இருக்கிறாயே?அது எப்படி ?


============

6 அன்பே! நீ அவ சரமா வெளியே கிளம்பினாலும் கூந்தலில் சரம் சரமா மல்லிகைப்பூ மறக்காம வெச்சுக்கறியே அது எப்படி?


===========


7 #Vijay #Atlee #விஜய் ஜூலை 20-ல் துவங்குகிறது விஜய்-அட்லி படம்! # 20/7/2015= 2+0+7+2+0+1+5 = 17= 1+7=8 ,அஷ்டமத்தில் சனி.கஷ்டம் தான்

===========

8 பலரும் மாஸ் படத்தை அஞ்சான் போல் ஆகும் என நக்கல் அடிக்கின்றனர்.என் கணிப்பின் படி அது ஒரு த்ரில்லர் மூவி.வெங்கட் பிரபு காப்பாத்திடுவார்


==========

9 Be Indian, = இந்தியனாக இரு(ந்து மெகா ஊழல் செய்)
Buy Indian = வக்கீலோ ,ஜட்ஜோ இந்தியனையே விலைக்கு வாங்கு .நீ (இப்போதைக்கு)ஜெ யிப்பாய்!


===========

10 நீங்கள் லட்சாதிபதி ஆக வேண்டுமா?கோபமாக இருக்கும் காதலியை/சொந்த சம்சாரத்தை சமாதானப்படுத்துவது எப்படி?என ஒரு புத்தகம் எழுதவும்


=================


11 கடவுளே என் வாழ்க்கைக்கு சப்டைட்டில் குடுக்காட்டியும் பரவால்ல, BGM குடுக்காட்டியும் பரவால்ல.. ஜோடி யா ஒரு லேடி மட்டுமாவது கொடு


=============

12 ரயில்வே ஸ்டேஷன் 2 கிமீ தான்.் பஸ் டிக்கெட் 3 ரூபாதான்.சரி அதை மிச்சம் பண்ணலாம்னு பாதிதூரம் வந்தபின் ஆட்டோக்காரர் 50 ரூபாதான் ஏறிக்கோங்கறார்


==============

13 சம்சாரத்தை சென்ட் ஆப் பண்ண வந்தவன் என்னைப்பார்த்ததும் பக்கத்து கம்ப்பார்ட்மென்ட்க்கு ஷிப்ட் பண்ணிட்டான்.என் நெத்தில எதுனா எழுதி இருக்கா?


================

14 1 மனக்கணக்கு
2 காந்தி கணக்கு
3 தப்புக்கணக்கு
4 குமாரசாமி கணக்கு
என கணக்கு பல வகைப்படும்

============


15 நம்மிடையே காமராஜர் யாரும் இல்லை.பெரும்பாலும் காம ராஜர்களே இருக்கிறார்கள்


=============

16 இந்த தனலட்சுமி புள்ள வாசல்ல கோலம் போடறதைத்தவிர வீட்ல எந்த வேலையும் செய்யறதில்லையாம்.ட்விட்டர் ்.கிசுகிசு


=============

17 நயன் தாரா வும் ப்ரனிதா வும் சம அளவு திறமையைக்காட்டி இருக்காங்களாம்.அதெப்டி.ப்ரணிதா நயனை விட குண்டாச்சே? # மாஸ்


==============

18 என் மொபைலில் 4 வாலு பொண்ணு போன் நெம்பர் (FB மூலம்?)பதிவாகி இருக்கு.4க்கும் நெம்பர் குடுத்துட்டேன்.வாலு1,2
3,4


==================

19 எப்போதும் ஏதோ ஒரு பிகரிடம் கடலை போட்டுக்கொண்டே இருக்கும் MOOD உடன் இருப்பவன் மூடன்.mooddone


============


20 கருத்து வேறுபாட்டால் பிரிந்திருக்கும்போதும் வன்மத்தைக்காட்டாமல் மாறாத அண்பு கொண்டிருப்பதே உண்மைக்காதல்


===============

0 comments: