Wednesday, June 10, 2015

நான் எந்த அளவுக்கு பரிசுத்தமான சைவம்னா

தமிழக அரசியலில் கலைஞர் போல் தீவிர உழைப்பாளியை நாம் கண்டதும் இல்லை.இனி காணப்போவதும் இல்லை #92


==========2 நாட்டு மக்களின் நன்மைக்காக 10% ம் ,தன் வீட்டு மக்கள் நலனுக்காக 90%,ம்.உழைத்தவர் தான் எங்கள் தானைத்தலைவர்
===========
3 டியர்.ஐ லவ் யூ சொன்னா ஒன்னா சரி சொல்லு.இல்ல நோ சொல்லு.டிராபிக் ராமசாமியை கலைஞர் அலைக்கழிப்பது போல் அலைய விடாதே!
================
4 பொண்ணுங்க சாதாரணமா ஒத்த ஜடையோ ரெட்டை ஜடையோ பின்னி இருந்தாக்கூட ஹேர் ஸ்டைல் டாப்.பின்னட்டே.ன்னு சொல்லலாம்
===============
5 வெளிநாட்டில் நீ சம்பாதிக்கும் ஒரு லட்ச ரூபாய் சம்பளமும் உன் தாய்த்திரு நாட்டில் சம்பாதிக்கும் 25,000 ரூ வும் 1

அக்கரைப்பச்சைக்கு ஆசைப்படாதே!


=============


6 இந்தியா முழுவதும் 100 Smart Cityக்களை உருவாக்குவோம்-மோடி.#,கிராமங்களை மறவாதீர்
அது தாய் வீடு.நகரம் மாமியார் வீடு


===============

7 நான் குடிக்கிர மைண்ட் ல இருக்கேன்.

நீ ஒரு ஹாய் சொன்னா.
குடிக்க மாட்டேன்னு டாஸ்மாக் வாசல்ல நின்னு மெசேஜ் அனுப்புவான் மப்புத்தமிழன்============

8 5 வருசத்துக்கு முன்னால செஞ்ச ஒரு சின்னத்தப்புக்கு சம்சாரம் இப்போ நினைவு வெச்சிருந்து திட்டிட்டு இருக்கு , இந்தப்பொண்டாட்டிங்களே இப்டித்தான்


==========


9 வினோதினி, நந்தினி , சாந்தினி இந்தப்பேரு உள்ளவங்க எல்லாம் நொறுக்குத்தீனிப்பிரியைகளா இருந்தா வினோதீனி, சாந்தீனி, நந்தீனிஅப்டினு கூப்பிடலாமா?

===============


10 பெண்களால் டயட்டில் இருக்க முடியாமல் போவதற்கு 2 முக்கிய காரணங்கள் :

1 எப்போதும் கிச்சன் ரூம்ல இருப்பதால்
2 சும்மாவே இருப்பதால்


===============

11 அன்பே! எந்த டிபி வைத்தாலும் உன் அழகுக்கு அது நிகர் இல்லை, பக்கா ஃபிகர் நீ உன் சொந்த டிபியேவெச்சுடேன்


===============

12 உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அசலூரில் ஒரு சின்ன  வீடு கட்டிரனும். மாசத்துக்கு ஒரு தடவை வருகிறோமோ இல்லையோ கட்டிரனும்.# எ கீ  கற்பனை


=================


13 கள்ளக்காதல் என்பது  மேகி நூடுல்ஸ் மாதிரி,நாக்குக்கு ருசியாதான் இருக்கும், ஆனா ஆபத்து  தொடர்ந்து வரும்=================


14 வாசிப்புப்பழக்கம்  எனக்கு  ஆரம்பத்தில் இருந்தே  இருக்கு. ரோட்ல எந்த ஃபிகர் என்ன டி சர்ட்/பனியன் போட்டிருந்தாலும் கூச்சப்படாம போய் வாசிப்பேன்=================


15 டிபி ல பேபி போட்டோ போட்டிருந்தாலும் 3 முத்தக்கறை இருந்தா அந்த ஆளுக்கு 3 லவ்வர்ஸ் இருக்காங்கனு அர்த்தம் # ட்விட்டர் கிசு கிசு


================

16 காதலி கிட்டே எதைக்கேட்டாலும் கோபமா சொல்ல முடியாதுன்னு சொல்லுதா? சொல்ல முடியும் என்பதற்கு எதிர்ப்பதம் என்ன?னு கேட்கவும். மாட்டிக்குவா


===========

17 ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதை விடப்பெரிய அவமானம் அன்பு கொண்ட நெஞ்சம் தன் உள்ளத்தில் இருந்து நம்மை ஒதுக்கி வைப்பது


===========

18 மதியாதார் தலை வாசல்( காதலி என்றாலும்) மிதியாதே!


=================

19 ஐ டெக்ஸ் மை டப்பா 5ரூபாக்கு கிடைச்சாலும் அது ஒரு பொண்ணுக்கு கண்ணுக்கு இட்டுக்க 2 மாசத்துக்கு வரும் என்பதால் சிறுமை கண்டு எள்ளல் வேணாம்


===============

20 நான் எந்த அளவுக்கு பரிசுத்தமான சைவம்னா காக்கா முட்டை படம் கூட பார்க்காத அளவு.

===============

0 comments: