Friday, June 12, 2015

இனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்ஹீரோ  லவ் மேரேஜ் பண்ணிக்கனும்னு ஆசைப்படறாரு. அதுக்காக  பலபொண்ணுங்க கிட்டே  பிரபோஸ்  பண்றாரு.எதும்  செட் ஆகலை.அப்புறம்  ஹீ ரோயின் கிட்டே  நூல் விடறாரு. எடுபடலை.


இன்னொரு  டிராக்ல  ஹீரோவோட  அம்மா ஜோசியக்காரர்  சொன்னபடி 3 மாசத்துக்குள்ளே பையனுக்கு  மேரேஜ்  பண்ணி  வைக்கனும்னு நினைக்கறார். பொண்ணு  பார்க்கறாங்க.

  ஹீரோயின்  லவ்க்கு  ஓக்கே  சொல்லலைன்னதும்  ஹீரோ  போனாபோகுதுனு  மேரேஜ்க்கு  ஓக்கே  சொல்றாரு.இப்போதான் ட்விஸ்ட். ஆரம்பத்துல  வேணாம்னு சொன்ன  ஹீரோயின் இப்போ  லவ் க்கு  ஓக்கே சொல்லுது.இடைத்தேர்த்லில்  டிராஃபிக் ராமசாமியை  ஆதரிப்போம்னு  சொன்ன கலைஞர்  பின் திடீர்னு  அது  பத்தி  யோசிப்போம்னு  பல்டி  அடிச்சாரே அப்படி


இப்போ ஹீரோ  2  பொண்ணுங்க  கிட்டே  மாட்டிக்கிட்டாரு. சொத்துக்குவிப்பு வழக்கு ,வருமான வரி  ஏய்ப்பு வழக்குன்னு  புரட்சித்தலைவி  மாட்னாங்களே  அப்டி.


அப்பவும்  ஹீரோக்கு  ஒரு  நப்பாசை. அன்புமணி தான் அடுத்த முதல்வர்னு  அவரோட  அப்பா  அறிவிச்ச மாதிரி  ஹீரோவுக்கும் 2  பேரையும்  சமாளிக்க  ஆசை. எப்படி சமாளிச்சார்  என்பதே  மிச்ச மீதி  திரைக்கதை

ஹீரோவா  காமெடி சூப்பர் ஸ்டார் ( என பட்டம் போட்டுக்கிட்ட ) சந்தானம், சும்மா சொல்லக்கூடாது, ஆள்  செம ஸ்மார்ட். விஜய் , சூர்யா , சிம்பு க்கு சவால் விடும்  பர்சனாலிட்டி.காமெடியனாக ஆரம்பத்தில் வராமல்  ஹீரோவாக மணி ரத்னம் படத்தில்  இண்ட்ரோ ஆகி  இருந்தால்  துல்ஹர்  ரேஞ்ச்க்கு  போய்  இருப்பார். முதல்  படத்தை விட நல்ல டெவலப்மெண்ட்  நடிப்பில்  நடனத்தில்  . ஆங்காங்கே வழக்கமான  அவரது  ஒன் லைனர்கள் கலக்கல் ரகம்ஹீரோவே  தயாரிப்பாளர்  என்பதால்   2  ஹீரோயின்  புக்  பண்ணுவது  தமிழ்  சினிமா கலாச்சாரம் 


ஒரு  ஹீரோயின்  பேரு ஆஷ்மா சவேரி. சவுரியே  வைக்காத சாந்தமான கவுரியா இருக்கார்.பாடல்  காட்சியில்  லோ கட்  ஜாக்கெட்டில்  அவர் குதிக்கும்போது குதிங்க  குதிங்க  நல்லா  எம்பி எம்பி குதிங்கன்னு சொல்லத்தோணுது,சின்ன  வயசு, சின்னக்கண்ணு 


இன்னொரு  ஹீரோயின்  பேரு  அகிலா  கிஷோர். நயன்  தாரா சாயல் புருவம்  விழிகளெல்லாம் அச்சு அசல் அப்படியே. வேணும்னே  பார்த்து  பார்த்து  செலக்ட்  பண்ணி  இருக்காங்க

 இதுல  சோகம் என்னான்னா  குடும்பக்குத்து  விளக்கு  போல்  இருக்கும்  அகிலாவுக்கு  சீன்  கம்மி.  கும்தலக்கடி  கும்மாவா  இருக்கும் ஆஷ்மாவுக்கு சீன்ஸ்  அதிகம்.

இங்கே  நான்  சீன்ஸ்னு  சொன்னது  சாதா  சீன்ஸ்  தான்.
தம்பி  ராமய்யா மாமாவா  வர்றார். சுமாரா  காமெடி பண்றார். விடிவி கணேஷ்  ஓப்பனிங்கில்  கலக்கறார், பின்  சந்தானம் ஏனோ அவரை  இருட்டடிப்பு  செய்து விட்டார், 


சந்தனத்தின்  பாடி  லேங்குவேஜில் ஒரு  சராசரி  ஹீரோவுக்கு உண்டான   தெனாவெட்டு  வந்து  இருக்கு.அவரை காமெடியனாக  பார்ப்பதில்  தான்  மக்களுக்கு  ஆசை. இதை உணர்ந்து  அவர்  காமெடி சப்ஜெக்ட்டில்  நடித்த்தால்  தேவலை


 சராசரி  மசாலா  ஹீரோவா நடிக்கத்தான்  1000  பேர்  இருக்காங்களே?


இசை நல்லாருக்கு. 3  பாட்டு  ஹிட்டு.  பிஜிஎம்  கூட  ஓக்கே தான்/


இயக்கம்  இருவர்,  விஜய் டி வி யில்  லொள்ளு சபா இயக்கிய இயக்குநர்கள்
இருவர்  பெயரிலும்  எடுத்து  முருகானந்தம்னு  போட்டிருக்காங்க. 


மனதைக் கவர்ந்த  வசனங்கள்

பொண்ணோட அம்மா சரி இல்லையே?

பொண்ணு.நல்லாருக்கும்.
மரமே சரி இல்லைன்னா அதுல காய்க்கற காய் எப்டி இருக்கும்?,# இ இ2 நயன் தாரா வா இருந்தாலும் நைட்டில நார்மலாத்தான் இருக்கும் # இ இ

3 பொண்ணுங்க ஜீன்(ஸ்) போடலாம்.ஆனா சீன் போடக்கூடாது # இ இ


4 இவதான் என்னோட ஜுமாக்கா ஜூ # இ இ


5 சின்ன சின்ன சண்டைகளை மறந்துட்டு வாழ்க்கைல எல்லாரும் சந்தோஷமா இருக்கனும்னுதான் கடவுள் நமக்கு ஞாபகமறதி யைத்தந்திருக்கார் # இ இ


6 ஏன் இவ்ளவ் கேவலமா சிரிக்கறே?

நீங்க ரொம்ப லேட்
இல்லையே நீ சிரிச்சதுமே சொல்லிட்டனே? # இ இ

7 என்னடா மண்டை இது? டீக்கடைல டைல்ஸ் போட்ட மாதிரி ?# இ இ


8 யாருங்க இவன்.?அடிக்கற வெய்யிலுக்கு 5 சொக்கா போட்டிருக்கான்? # இ இ


9 எம் ஜி ஆர் க்கு பிடிச்சது அண்ணா.

இதெல்லாம் ஒரு பொண்ணா ? # இ இ


10 என்ன பிரச்னை?

சொன்னா கிழிச்சிடுவியா?
ஏற்கனவே உன் டிரஸ் கிழிஞ்சா மாதிரி தானே இருக்கு?,# இ இ
akila kishore
Add caption
11 ஸ்பீடுபிரேக்கர்ல ஏறுன ஸ்கூட்டி மாதிரி என்னமோ பண்ணிட்டிருக்கியே? என்னது?


தோப்புக்கரணம்.
ஓ.முழுசா போடு.சாமியை ஏமாத்தாத # இ இ

12 எங்க ஜோடிப்பொருத்தம் எப்டி?

பழைய சொம்பு ல பாரீன் சரக்கை ஊத்துனா மாதிரி # இ இ


13 ஹலோ.அப்பா இருக்காரா?

குளிச்ட்டு இருக்காரு.நீங்க?
காலைலயே குளிச்ட்டேன்.

அய்யோ.நீங்க யார்?னு கேட்டேன் # இ இ


14 லவ் பண்றதை நிரூபிக்க பசங்க மட்டும் எது வேணாலும் செய்றாங்க.லவ் இல்லைனு நிரூபிக்க பொண்ணுங்க எதுவுமே செய்யறதில்லையே ஏன்? # இ இ


15 சம்சா  எவ்ளவ்?
 200 ரூபா
 என்னடா> சமோசா கேட்டா சாம்சங் ஃபோன் ரேட்  சொல்றே?  இ 


16 இந்த சீனி  சிரிப்பு காட்டி தானே  பார்த்திருக்கே? சீன்  காட்டி  பார்த்ததில்லையே? ஃபைட் பஞ்ச்  பை சந்தானம் # இ இ 17  அங்க்கிள் லுங்கி  டான்ஸ்  ஆடறேன்னு  சொல்லிட்டு  மங்கி டான்ஸ் ஆடிட்டு  இருக்கீங்க? # இ இ 


18  இவன்  நார்மலா  பேசுனாலே  புரியாது , ஹஸ்கி  வாய்ஸ்ல  பேசறான்  # இ இ 19   4  சுவருக்குள் கிஸ்  பண்றதை  விட  பீச்ல 400  பேர்  முன்னால  அடிக்கும் கிஸ்க்கு  கிக் அதிகம் # இ இ


20 ''என்ன லவ் பண்ண வந்தியா?''
''பின்னே லாண்டரிக்கு துணி போடவா வந்தேன். டிரஸ் பண்ணி வந்திருக்குறதைப் பார்த்தா தெரியல...''
*
21  ''திரும்பிப் பார்க்கிறாளா பாரு...''
''இல்லையே...''
''இப்போ... ''
''சட்டை கூட பண்ணலை...''
''அப்போ கன்ஃபார்மா லவ் தாண்டா ''
''திரும்பிப் பார்த்தாதானே லவ்வு...''
''எப்படியும் அவ திரும்பிப் பார்க்க மாட்டா. எதுக்கு மனசு கஷ்டப்படணும். அதான் நமக்கேத்த மாதிரி மாத்திக்க வேண்டியதுதானே... ''
*
22 ''உனக்கு கொஞ்சம் கூட சூடு சொரணையே இல்லையா...''
''வெளியே போறேன்னு எங்க அப்பா வாங்கினு போய் இருக்காரு...''
*
23  ரெண்டு பொண்ணுங்களை மெயின் டெய்ன் பண்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?''
''அதை விட கஷ்டம் உன் மூஞ்சை கிட்ட பார்க்குறது...''
 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

தியேட்டருக்கு வந்திருக்கும் ஜோடி ல எது நல்ல ஜோடி?எது கள்ளக்காதல் ஜோடி? னு பாயிண்ட் சேர்த்தி விளையாடிட்டு இருக்கோம்


2 இவன் மாஸ் இல்லை.தமாஷ னு ஒரு டயலாக்.சந்தானத்துக்கு சூர்யா மேல என்ன கோபமோ?

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1   தம்பி  ராமய்யா வுக்கு  சாமி  வந்தது  போல்  போடும்  டிராமாவும், அந்த  சீனில்  அவருக்கு அலகு  குத்தும் சீனும்  கலக்கல்  காமெடி


2  பின் பாதி  முழுக்க  காமெடிகாட்சிகள்  ஃபேமிலியுடன்  பார்ப்பது  போல்  டீசண்ட்டா  இருக்கு


இயக்குநரிடம்  சில கேள்விகள்

1  பின் பாதியில்  வரும்  டிராமா  டூயட்  சீனில்  க்ரூப் டான்சர்ஸ்  லோ ஹிப்பில்  டான்ஸ்  ஆடறாங்க. தப்பில்லை  ஆடட்டும், ஆனா  தொப்பையோட  3  பேரு  இருக்காங்க. இதெல்லாம்  கவனிக்க  மாட்டீங்களா?


2  பீச்ல  லவ்வர்ஸ்  இருக்கும்போது   சமோசா  விற்கும்  ரவுடி  மிரட்டிப்பணம்  பறிக்கும்  சீன்  ஆல்ரெடி இப்போதான்  ரோமியோ  ஜூலியட் படத்துல வந்திருக்கே?  யார்  முதல்ல  சுட்டது?

3 அறிமுகமே இல்லாத   2  ஹீரோயின்சும்  எப்படி மீட்  பண்ணி கரெக்டா ஹீரோவை  மாட்டி விடறாங்க?


4  ஹீரோயின்  போட்டிருக்கும் ஹை ஹீல்சை  ஹீரோ  வாங்கி கால்ல  போட்டுக்கிட்டு  போடும்  ஃபைட்  சகிக்கலை.  புதுமையா யோசிக்கவேண்டியதுதான்  அதுக்காக  இப்படியா?  அதை  போட்டுக்கிட்டு  ஒழுங்கா நடக்கவே  முடியாது.பேலன்ஸ்  பண்ணி ஃபைட்டா/?சி  பி  கமெண்ட் =இனிமே  இப்படித்தான் =  முன் பாதி  சுமார்  பின் பாதி  காமெடி - விகடன்  மார்க் = 40 , ரேட்டிங்  2.5/ 5 ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 40குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = ஓக்கே ரேட்டிங் = 2.5 / 5

-டிஸ்கி -JURRASIC WORLD -ஜூராசிக் வோர்ல்டு - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2015/06/jurrasic-world.htmlரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்


http://www.adrasaka.com/2015/06/blog-post_68.html0 comments: