Thursday, June 25, 2015

சிம்ம ராசி vs கேட்டை நட்சத்திரம்

சுவாமி ! பாம்பு படம் எடுத்து ஆடும்போது பார்த்துட்டேன்.இதனால் ஏதாவது ஆபத்து வருமா?
சிஷ்யா ! புலி படம் பாத்த்தாதான் ஆபத்து


============

2 டிக்கெட் கவுன்ட்டர் ல எதுக்கு +2 மார்க் ஷீட் செக்கிங்?
இது சயின்ஸ்பிக்சன் பிலிம்.மினிமம் 50 மார்க் சயின்ஸ்ல வாங்கி இருக்கனுமாம் # புலி


===========

3 லேடி எம்டி = நான் காலைல 10 டூ 11 கோபமா இருப்பேன்.அப்போ யாரும் என் கிட்டே வந்துடாதீங்க!
ஓக்கே.மேடம்.எப்போ நல்ல மூட் ல இருப்பீங்க?


=============


டாக்டர்.குடியினால் வரும் கேட்டை சொன்னா கேட்க மாட்டேங்கறாங்க.
சிம்ம ராசி சொல்லியே கேட்காதவங்களா கேட்டை நட்சத்திரம் சொல்லி கேட்கப்போறாங்க?


============

5 இன்னைக்கு என்ன சமையல்?

சேமியா உப்புமா

பூரிதான் உப்பும், சேமியா எப்படி உப்பும்?=============6 என்னை எதிர்த்துப்பேசி கிடைக்கும் சாப்பாட்டில் மண்ணள்ளிப்போட்டுக்காதீங்க
மண் சோறு சாப்பிட நான் என்ன அதிமுக அமைச்சரா?


=============


7 மிஸ்! பாடி ஸ்ப்ரே போட்டிருக்கேன்.எப்டி இருக்கு?
டெட் பாடி ஸ்ப்ரே மாதிரி இருக்கு?


===========

8 சாரி டியர்.யார் மேலோ இருந்த கோபத்தை உங்க கிட்டே காட்டிட்டேன்.இது தேவலை.என் மேல வெச்சிருக்கும் அன்பை வேற யார்கிட்டயாவது காட்டிடாத


==========

9 பயங்கரமா மழை பெய்யுது.நிக்கவே மாட்டேங்குது.
சரி.கொஞ்ச நேரம் உக்காரச்சொல்லுங்க


=============

10 குற்றவாளிக்கு உதவி செஞ்சீங்களா?சுஷ்மா= என் கணவர் தான் உதவினார்.நான் என் கணவருக்கு உதவினேன்.ஹிஹி


===============


11 டியர்.நெத்தில முத்தம் கொடுக்கத்தான் அனுமதி.எதுக்கு லிப் கிஸ் கொடுத்தீங்க?


சாரி அஞ்சலை.எனக்கு நெத்தி எட்டலை.அதான் உனக்கு முத்தம் கிட்டலை


================


12 கல்லுளிமங்கன் - பெயர்க்காரணம் யாருக்காவது தெரியுமா??"


எப்பேர்ப்பட்ட உளி கொண்டு செதுக்கினாலும் ஒரு செமீ கூட அடையாத கல் செஞ்சம் படைத்தவன் தான்


============


13 அப்புறம்.மேடம் .பாத்து ரொம்ப நாள் ஆச்சு.குக்கிங் எல்லாம் எப்டி போகுது?
அடடா.என் புருசன் இப்பத்தான் பைக்ல போகுது # குக்KING ,EAT QUEEN


================


14 உங்க கார்மென்ட்ஸில் நர்சுங்க ஏகப்பட்ட பேர் டெய்லரா இருக்காங்களே.ஏன்?
ஏன்னா இது டாக்டரோட சிஸ்டர் கன்செர்ன்


=================


15 தலைக்கு குளிச்சு சாம்பராணி போட்டுக்கிட்டா கூந்தலுக்கு நல்லதா?
சவுரி ராணிகள் தான் ஜாஸ்தி.இது கூடத்தெரியாம மடச்சாம்பி ராணியா இருக்கீங்க்ளே?


============

16 நான் இதுவரைக்கும் ப்யூட்டி பார்லர் போனதே இல்லை, கல்யாணத்தன்னிக்கு கூட.."
மேடம்.கல்யாணத்தன்னைக்கு மண்டபத்துக்குத்தானே போவாங்க?


==============

17 டாக்டர்! காலை வெயில் உடல் நலத்திற்கு நல்லது தானே!?ஆமா, அதுனாலதான் அதிகாலை 5 டூ 7 வாக்கிங் போகும் கூட்டம் அதிகமா இருக்கு, எந்திரிங்க
===========

18 மிஸ்! உங்க டி பி யை ஏன் தலைகீழா வைச்சிருக்கீங்க?
யோகா தின ஸ்பெஷல் டி பி அது


===========


19 டாக்டர், ஜலதோஷம் உடனே போக என்ன வழி?

  மூக்குதான்.===========

20 படத்தை  தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் பண்ணிடுன்னு எங்க அம்மா முடிவா சொல்லீடாங்க.

 ஓஹோ! நம்ம  அம்மா  என்ன  முடிவு எடுக்கப்போறாங்களோ?


=====================

0 comments: