Thursday, June 11, 2015

பண்டமாற்றுப் பாலுறவு: 'ஹைத்தியில் ஐ.நா. அமைதிப்படை அட்டூழியம்'

கோப்புப் படம்: ஏ.பி.
கோப்புப் படம்: ஏ.பி.
'பாலுறவுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வோம்' என்று கூறி, ஹைத்தி பெண்களிடம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதிப்படை வீரர்கள் 'பண்டமாற்றுப் பாலுறவு' செயல்களில் ஈடுபட்டதாக தகவல்கள் அம்பலமாகியுள்ளது.
வட அமெரிக்க நாடான ஹைத்தியில் வாழும் ஏழை மக்களுக்கான உதவிகளை கடந்த 2004-லிருந்து ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் அளித்த வந்தனர்.
இந்த நிலையில், தங்களது அமைதிக் குழு வீரர்கள் 'பண்டமாற்றுப் பாலுறவு' செயல்களில் ஈடுப்பட்டதை ஐ.நா. கண்காணிப்புக் குழு கண்டுபிடித்ததாகவும், அதன் விவரம் தங்களுக்கு தெரியவந்ததாகவும் 'தி அசோசியேடட் பிரஸ்' செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஐ.நா. அமைதிப் படைக் குழுவில் உலகெங்கும் சுமார் 125,000 பேர் பணியாற்றுகின்றனர். இவர்கள் உலக நாடுகளில் நடக்கும் மோசமான சூழல்களில் அதன் மக்களுக்காக சேவை செய்யும் பணிகளில் ஈடுபடுகின்றனர். அவர்களது பணியை கண்காணிக்கும் பொறுப்பில் ஐ.நா. மேற்பார்வை குழு செயல்பட்டு வருகிறது.
மேற்பார்வை குழுவின் ஆய்வின்படி, வட அமெரிக்க நாடுகளில் மிகவும் ஏழ்மையான நாடான ஹைத்தியில், அமைதிக் குழு பணியாற்றியபோது அங்கிருக்கும் பெண்களுக்கு உணவு, உடை, தண்ணீர், குழந்தைகளுக்கான வசதிகள் என அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு கைமாறாக தங்களுடன் பாலுறவு கொள்ள வலியுறுத்தியதை மேற்பார்வை குழு கண்டறிந்துள்ளது.
"கிராமப்புற பெண்களுக்கு பசி, வாழும் இடம், குழந்தைகளுக்கான தேவைகள், மருத்துவப் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் என எதுவும் இல்லை. இதுபோன்ற தேவைகளை அளிப்பதற்கு மாறாக அந்தப் பெண்களிடம் உறவுகொள்ளும் வழக்கத்தை அமைதிக் குழுவினர் வைத்துள்ளனர்.
அவை மட்டுமல்லாமல், செல்போன், லேப்டாப், பணம் உள்ளிட்ட பொருட்களையும் அந்தப் பெண்களுக்கு குழுவினர் அளித்தனர்" என்று மேற்பார்வை குழுவின் விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹைத்தியில் 231 பெண்களிடம் கடந்த வருடம் மேற்பார்வை குழுவினர் ஆய்வில் ஈடுபட்டதில் இந்த விவரம் அம்பலமானது. அதனை 'தி அசோசியேடட் பிரஸ்' செய்தி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
இந்தச் செயல் எந்த சமயத்தில் நடந்தது, அதில் ஈடுப்பட்ட குழுவினரது விவரங்கள் என எதுவும் தெரியாத நிலையில் இது குறித்து பேச ஐ.நா. அதிகாரிகள் மறுத்துவிட்டனர். ஆனால், இந்த அதிர்ச்சிச் தகவல் தொடர்பான அறிக்கையை ஒரு சில மாதங்களில் ஐ.நா. வெளியிடும் என்று எதிர்பார்ப்பதாக அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


நன்றி - த இந்து

 • எம் குலத் தமிழ் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகளை விடவா இது பெரிது???
  Points
  5100
  about 3 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
     
  SABARINATHAN · shri  Up Voted
  • Ashok  
   Very wost
   about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
   • உலகம் முழுவதும் பயணிக்கும் அமைதிப்படைகள் அந்த நாட்டில் அமைதியை நிலைநாட்டப் பாடுபடுவதில்லை.அந்த நாட்டின் பெண்களை சீரழிக்கவும்,இளைஞர்களை வேரறுக்கவும்,முதியவர்களை கொடுமைப்படுத்தவும் சொல்லோன்னாக் கொடுங்கோன்மையை கட்டவிழ்த்து விடவும் பாடுபடுகிறார்கள்.பொறுக்கவும் சகிக்கவும் வழி அடைபடும் போது பொங்கி எழும் மக்களால் நையப்புடைக்கப்பட்டு விரட்டப்படுகிறார்கள்.IPKF என ஈழ மக்களை சீரழித்த படையானாலும்,இராக்கிலும்-ஆப்கானிலும் அடிபட்டு திரும்பிக் கொண்டிருக்கும் அமெரிக்க-NATO படையாயினும் நிலைமை ஓன்று தான்.அமைதிப்படை என்றால் அமைதியாய் மக்களை அழிக்கும்/சீரழிக்கும் படை என்றர்த்தம்.பிற மக்களின் பிரச்சனைகளில் அவர்களின் வேண்டுதல்-தேடுதல் இல்லாமல் தலையிட நான் யார்?இது ஒவ்வொரு வல்லாண்மையை விரும்பும் தேசமும்-அந்த தேசத்தின் தனி மனிதர்களும் சிந்திக்க வேண்டியவை. தனிமனிதர்களின் அடக்கி ஆள எண்ணும் ஆர்வம் அவர்களையும் அவர்களுக்கு அடங்கி ஒடுங்கிடக்கும் எல்லா மனிதர்களையும் அமைப்பைகளையும் பொருளாதார வளங்களையும் வீண் விரயமாக்கி விடுகிறது.ஐ.நா.என்பதை விரித்தால் அமெரிக்க நாட்டு சபை என்று விரியும்.ஐ.நா.அயோக்கியர்களின் சபை.
    Points
    4050
    about 3 hours ago ·   (1) ·   (2) ·  reply (0) · 
    sulthan  Up Voted
    mano · vijai  Down Voted
    • மேற்கத்திய ராணுவம் ஈராக்கிலும் ஆப்கனிலும் செய்த அக்கிரமங்கள் இதைவிட அதிகம்......இனி இவர்களுக்கு அழிவுதான்....ஏழைகள் நுகர்வுப்பண்டஙகளா?????!!!!...
     about 3 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
     sulthan  Up Voted
     • வல்லான் வகுத்ததே வாய்கால் என்ற நிலை தான் இன்றளவும் இருக்கிறது .இது மாற்ற பட வேண்டும்
      Points
      29110
      about 4 hours ago ·   (0) ·   (1) ·  reply (0) · 
      vijai  Down Voted
      • Dandy  
       ஹி ஹி ஹி காலம் கடந்த செய்தி …..நீங்கள் பிரசுரிக்க வேண்டிய செய்தி Sierre Leone நாட்டில் UN இல் பணிபுரியும் இந்திய ராணுவத்தின் பெருமை கொள்ள வேண்டிய நிகழ்ச்சி . அந்த நாட்டில் வீதிகளில் இந்திய முகத்துடன் ஆப்ரிக்க குழந்தைகள் திரிவது சாதாரனம் .ஹி ஹி ஹி அங்கு இந்திய ராணுவம் உணவு பொருகளை காட்டி பெண்களை மயக்கு கின்றார்கள்
       Points
       29545
       about 4 hours ago ·   (5) ·   (6) ·  reply (0) · 
       vijai · Sekar · shri  Up Voted
       BelieveInGodNotReligion · senthil · BalaAnand · Vimal  Down Voted
       • ராணுவ வீரர்களை எவளவு மதிகிரோமோ , அந்த அளவு அவர்கர்லிடம் ஒழுக்க கேடு உள்ளது .........காஷ்மீர் , ஸ்ரீலங்கா மக்களிடம் போய் கேட்டல் குருவர்கள் ஐயெரம் சம்பவம் கலை ,,,,,,,,,,, தேசபர்டு எண்டு ஓரை சொல்லில் எல்லாம் மறைத்து விடுகிறார்கள்

       0 comments: