Wednesday, June 17, 2015

தமிழ் நாட்டுப்புலி யும் ஆந்திரப்புலியும் சந்தித்தால்

உணவு பாதுகாப்பில் விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை!- மத்திய அரசு #  ராணுவப்பாதுகாப்பில்  விட்டுக்கொடுத்துடாதீங்க, இன்னும்  டேஞ்சர்===================
தமிழகத்தில் ஜீலை 1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம்-நீதிமன்றம் உத்தரவு# அப்போ தமிழ் நாட்டில் தலை பாதுகாப்புக்கு கேரண்டி? ம்ம் குட்
=================
3 போலி சான்றிதழ் விவகாரத்தில் டெல்லி சட்ட அமைச்சர் தோமர் கைது #சட்டம் தெரியாதவன் பண்ற தப்புக்கான தண்டனையைவிட இவருக்குதான் அதிக தண்டனை தரனும்
================4 தமிழன் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கமாக இருக்கிறது -EVKS இ#,தமிழன் கிட்டே ஓட்டு கேட்டு உங்க ஆளுங்க வரும்போது எங்களுக்கு வெட்கமா இருக்கு===============5 மு.கருணாநிதி இல்லத் திருமணத்தில் பட்டு வேட்டி, சட்டையுடன் நடிகர் விஜய்.

# போயஸ் ல புலிக்கு பொங்கல் உறுதி


============

6 சூரிய நமஸ்காரத்தை எதிர்ப்பவர்கள் கடலில் மூழ்கி சாக வேண்டும்: பாஜக MP # நிலாச்சோறு சாப்பிடாதவங்க பாலைவனத்தில் வெந்து சாகனுமா?்


===============


7 தரமற்ற பழநி பஞ்சாமிர்தம். தமிழக அரசு எச்சரிக்கை நோட்டீஸ்! # பழநிக்கே பஞ்சாமிர்தமா போல் பஞ்சாமிர்தத்துலயே கலப்படமா?

===============

8 பாமக ஆட்சி அமைத்தால் மாற்றம் கொண்டு வருவோம்: அன்புமணி ராமதாஸ்
# எத்தனை.வருசத்துக்கு திமுகவும் அதிமுகவும் சம்பாதிப்பது?பாமகவும் வாய்ப்பு

===============

9 திராவிட கட்சிகளை அவர்களே அழித்துக் கொள்வார்கள்- பொன்.ராதா #2 தலைவர்களும்.ஜெயிலுக்குப்போய்ட்டாலும்பினாமி தலைவர்களுக்கா பஞ்சம்?

================

10 மேகி விளம்பரத்திற்கு செலவிடப்பட்ட தொகை 450 கோடிகள்-செய்தி # அடேங்கப்பா, அப்போ லாபம் எவ்வளவு இருக்கும்? பாதிக்கப்பட்டவங்க எத்தனை பேரோ?


=============

11 நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான செல்பி புகைப்படம் # அதெப்டி வரிசையா டைரக்டர்சா மாட்றாங்க?சிம்பி ,பி தேவா


=============

12 நடிகை ஹேமமாலினி பாட்டி ஆகிறார் # மேட்சுக்கு மேட்சா பாட்டியாலா சுடி போட்டுக்குவாரா?


================

13 நயன்தாரா, சென்னையில் வீடு வாங்கினார்! #, சின்ன பங்களாவா?

=============

14 முதல் முறையாக தமிழ் படத்தில் நடிக்கிறார், மகேஷ்பாபு # புலி கடுப்பாகி இருக்குமே?


==============

15 முதன் முதலாக புவீஈர்ப்பு சக்தி இல்லாத விண்வெளியில் எடுக்கப்படும் ஆபாச படம் # எந்த கிரகத்துக்குப்போனாலும் இந்த கிரகத்தை விடமாட்டாங்களா?

===============

16 உண்மையை சொல்ல முயற்சிப்பதால் ஜெயேந்திரர் மிரட்டுகிறார் .../அப்ரூவர் ரவி சுப்பிரமணியம் மனு # நம்ம நாட்டில இன்னும் ஜட்ஜ் மட்டும்தான் மிரட்டல


===============

17 ஆர்யா என்னைப்பார்க்க சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கு சைக்கிளில் வருவார் # சைக்கிள் வீல் நல்லா சுத்தி இருக்குமே?காதுல ரீல் சுத்தறீங்களா?


===============


18 ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு தந்த உணவில் பல்லி ு # சாப்பாடு பிளைட்ல கில்லி மாதிரி இருக்கும்.
ஆ.இதென்ன பல்லி மாதிரி இருக்கு?


==================


19 தெலுங்கானாவிடம் தமிழகம் பாடம் கற்க வேண்டும்-டாக்டர் ராமதாஸ் ! தமிழன் எத்தனை பேர்ட்டதான் பாடம் கத்துக்குவான்? கலைஞர் ,ஜெ னு மாத்தி மாத்தி


================


20 தமிழகத்தில் ஊழல் தலை விரித்து ஆடுகிறது - ராமதாஸ்
# நீங்க ஆட்சிக்கு வந்தா ரப்பர் பேண்ட் போட்டு விட்ருவீங்க்ளா?


================

0 comments: