Monday, June 29, 2015

நெட்டில் அறிமுகமே இல்லாம " தங்கச்சி தங்கச்சி சாப்ட்டியா தங்கச்சி?"

சாதா தமிழன் சாதா கவிதை எழுதறான்.நெட் தமிழன் தான் போலோ பண்ணும் பொண்ணுங்க பேர் வர்ற மாதிரி ஒரு தொகுப்புக்கவிதை எழுதிடறான்.

============

2 அம்மாவின் அன்பு வாழை  இலை போன்றது. அப்பாவின் அன்பு பலாப்பழச்சுளைபோன்றது. மேலோட்டமாக  முள்ளாகவும் உள்ளே இனிப்பாகவும் 


=============

நம் எல்லோருக்கும் நம் அப்பா தான் ரோல் மாடல், நாமெல்லோருமே நம் வாரிசுக்கு  ரோல் மாடல் 


===============


இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவின்  புதிய  காதலி  எமி ஜாக்சன்  என  தகவல் # அறிவோம் கிசுகிசு==================

நெட் தமிழன் நேரம் காலமே பார்க்கறதில்ல, சாயங்காலம் 6 மணிக்கு பொண்ணுங்க வந்தாக்கூட சாப்பிட்டியா?னு நலம் விசாரிக்கறான்.சாப்டலைன்னா சமைப்பானோ?


==========

6 ஒரு பொண்ணு டிபி அப்டேட் பண்ண மறந்துடுச்சு.கறுப்புக்கட்டம் தான் தெரியுது.அப்போ கூட அசரலையே நெட் தமிழன்.டிபி செம.மார்வலஸ்ங்கறான்.யப்பா


===============


7
சுஹாசினி ,வடிவேலு ,லிங்குசாமி கள் எதிர்காலத்தில் பாசிட்டிவ் ரிவ்யூ மட்டும் தான் போடனும்னு கொடி பிடிப்பாங்களோ?


=============


8 காதலுக்கு /கல்யாணத்துக்கு 1008 கண்டிஷன் போடும் பெண்களே…எனக்கு 1,2,3,,, 100 நெம்பர்சே.100 வரை தான் எண்ணத்தெரியும்.இப்போ நான் என்ன செய்ய?


==================


9 FB ல ஒரு பொண்ணுக்குஃபிரண்ட்ரெக்குவஸ்ட் கொடுத்தேன். ஆல்ரெடி யூ கிவன். ஷி ரெஃப்யூஸ்டுன்னு வந்துச்சு. நல்ல வேளை, இந்தமேட்டர்யாருக்கும்தெரியாது

============

10 தமிழ்அகராதிலபோய்கன்னல் =?தேடுனா அது டக்னு கரும்புன்னு பதில் குடுக்கும், ஆனா நெட் தமிழன் ஒரு இன்னல். அதை அந்த பொண்ணு கிட்டதான் கேட்பான்

================

11 வாட்டர் பில்டர் கேன் பேங்க் ல வெச்சிருந்தா கீழே திருகிக்குடிக்காம டாப் மூடியைக்கழட்டி டம்ளர்ல மொண்டு குடிப்பான் தமிழன்


=============

12 பேங்க்ல டோக்கன் சிஸ்டம் வெச்சிருந்தா முறைப்படி ,வரிசைப்படி அழைப்பாங்கனு தெரிஞ்சும் சார்.என் நெம்பர் வந்திருச்சா?னு அவசரப்படுவான் தமிழன்


=============

13 யாராவது பேனா கடன் கேட்டா மூடியைக்கழட்டி தன் கையில வெச்சுக்கிட்டு பேனா பாடியை மட்டும் தர்ற முன் ஜாக்கிரதை உலகத்துலயே தமிழன் கிட்டேதான்


============

14 பேங்க் வரும்போது செலான் பில்லப் பண்ண பேனா தேவைப்படும்னு தெரிஞ்சும் வெறும் கையை வீசிட்டு வந்து சார் பென் ப்ளீஸ் னு கேட்பான் தமிழன்

============

15 MRP ரூ 100 என ஒரு சேலை/சட்டையில் இருந்தால் அதில் 45 ரூபா ஷோ ரூம் லாபம் ,25 ரூபா தயாரிப்பாளர் லாபம்.அடக்க விலை 30 ரூபாதான். 70% அதிகம்

===========

16 நீங்க வில்லங்கம் பிடிச்சவரா?
ஆமா.வில் (போல்)அங்கம் யாருக்கு இருந்தாலும் மனசுக்கு பிடிச்சவன்.உதா பானுப்ரியா ,மாதவி ,கஜோல் ,ஆன்ட்ரியா


==============

17 சாதா பேச்சு ,கடலை என்ன வித்தியாசம்?
ரத்த சம்பந்தம் இல்லாத ஒரு ஆணும் பெண்ணும் எப்போ எங்கே என்ன பேசுனாலும் அது கடலைதான்.


================

18 கடலை சாப்டா ரத்தம் ஊறும்.
கடலை போட்டா எச்சில் ஊறும்

=================


19 நெட்டில் அறிமுகமே இல்லாம " தங்கச்சி தங்கச்சி சாப்ட்டியா தங்கச்சி?" என கேட்பதும் எதிர்கால உள்நோக்கம் கொண்ட கடலை வகையே!- மனோவியல் நிபுணர்


================


20 அக்கா/தங்கை/அண்ணா/தம்பி என உறவு வைத்துக்கூப்பிட்ட்டுக்கொள்வதும் தன்னை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்துக்கொண்ட கடலை தான்


==============

0 comments: