Friday, June 12, 2015

எலி , புலி,இனிமே இப்படிதான் எது டாப்?

1  பேஷன் ஷோக்களுக்கு சவுதி அரேபியாவில் தடை..# நல்ல வேளை, நம்ம ஊர்ல எஃப் டிவி , கலைஞர் டிவி மானாட மயிலாட எல்லாம் வந்துட்டுதான் இருக்கு


===========

2 குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம் மாஸ்-வெங்கட்பிரபு # ஷேம் ஷேம் பப்பி ஷேம், இதே டயலாக்கை அஞ்சான் அவுட் ஆனப்போ லிங்குசாமி சொன்னாரு


===========

3 பங்குச் சந்தையில் ரூ.10,000 கோடி போச்சு... மேகி சர்ச்சையில் நெஸ்லே-வுக்கு அடி # சோனாமுத்தா போச்சா? கோடிக்கணக்கான உடல் ஆரோக்யம் போச்சே


==========

4 ஸ்டாலினுக்கு தலைவர் பதவி? கருணாநிதி சூசகம்! # இன்னும் 10 வருசம் புரட்சித்தலைவி ஆட்சிதான்னு தெரிஞ்சுக்கிட்டாரு போல


===========

5 விளம்பரத்தில் சொல்லும் கருத்துக்கு நடிகர் பொறுப்பில்லை : குஷ்பு # காசு கொடுக்கறாங்க.கூவறோம் மொமெண்ட்


============

6 காரில் இடித்தவர்களுடன் ரோட்டில் சண்டை போட்ட நடிகை நஸ்ரியா தீயாக பரவும் காட்சி... # ரோட்ல போறவன் வர்றவன் எல்லாம் இடிச்சிடப்போறான்மா.


===========

7 நான் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை என உங்களுக்கு தெரியுமா?: ட்வீட்டிய குஷ்பு #அதானே.DMKன்னாDMனு தெரியல.சின்னப்பசங்க

===========

8 கோவா போன்ற பிசி சுற்றுலாத்தலத்தில் பலாத்காரம் நடக்கத் தான் செய்யும்: அமைச்சர் திலிப்# இதுக்கு ஏன் அமைச்சர்னு வெள்ளையும் சொள்ளையுமா அலையனும்?


=============


9 சொகுசு கார் வாங்கினார் ஸ்ருதி# ஸ்ருதி கார் வாங்கிட்டாரு.சிவகார்த்திகேயன் வீடு.வாங்கிட்டாரு
நாம கெட்டபேர்தான் வாங்கிட்டிருக்கோம்


=========

10 மேகி நூடுல்சில் சர்ச்சைக்குரிய ரசாயனம் எதுவும் இல்லை: மே.வ. முதல்வர் மமதா பானர்ஜி #,அப்டியா மேடம்.டெய்லி அதை ஒரு வேளை சாப்பிட ரெடியா?


===========

11 பாஜக போட்டியிடாவிட்டால்RK.நகரில் நாங்கள் போட்டியிடுவோம்: பாரிவேந்தர் # பேங்க் லோனை எப்போ கட்டுவே? சம்பளம் வந்தா.எப்போ வரும்?வேலைக்குப்போனா

==============

12 ஷங்கரை நான் மிஞ்சிவிட்டதாகக் கூறுவதை ஏற்க முடியாது! - ராஜமவுலியின் தன்னடக்கம் # விஜயை வெச்சு எடுத்தாதான் ஒத்துக்குவோம்

==============

13 இனிமே இப்படிதான் எலி படத்திற்கு போட்டியா?: சந்தானம் பேட்டி..#,நல்ல வேளை.புலி படத்தோட போட்டி போடலை.

=============

14 வங்கதேசத்திற்கு ரூ.12,800 கோடி கடனுதவி - மோடி #  வட்டி கூட கட்டமாட்டாங்க, நட்டக்கணக்கில் தான் எழுதனும்=================


15 தமிழ் சினிமாவில் பேய் தான் இப்போ 'சூப்பர் ஸ்டார்'... 'டெரர்' கிளப்பும் சந்தானம்!  # இனிமே  யார் அடுத்த  சூப்பர் ஸ்டார்னு கேப்பே நீ?


==================

16  "பூனைக்குட்டிவெளியே வந்து விட்டது" - ஜெ. சொத்து பற்றி கருணாநிதி ஆராய்ச்சி!!!! பொறுங்க,சீக்கிரம்  உள்ளே  போக வாய்ப்பு இருக்கு


====================


17 மக்கள் வேலை கேட்டால் யோகா பற்றி பேசுகிறாரே  மோடி: ராகுல் தாக்கு# வேலை கிடைக்கலைன்னு டென்ஷனா இருக்காதீங்க, யோகா பண்ணி கூல் அப்டிங்கறாரு

===================


18  இனி குழம்ப வேண்டாம்.. வேட்பாளர் போட்டோ பார்த்து ஓட்டு போடலாம் #  தமிழன்  எந்தக்காலத்துல  ஆளைப்பாத்து  ஓட்டுப்போட்டான், இலை இல்லை சூரியன்


==================

19 கொசுக்களின் உயிரைப் பறிப்பதற்கு பதிலாக மனிதர்களின் உயிரைப் பறிக்கும் கொசுவர்த்தி- அதிர்ச்சி தகவல் #  மேகி  நூடுல்ஸ்க்கு  அடுத்து இதானா?


==============20 4000 கோடி ரூ வங்கிக்கடன் மோசடி: ஒடிசாவில் டெக்கான் கிரானிக்கிள் துணைத்தலைவர் பி.கே.அய்யர் கைது  # அய்யர் த கிரேட்னு இனி சொல்ல முடியாது


====================

0 comments: