Sunday, June 07, 2015

ட்விட்டர்கள் தீபாவளி கொண்டாடிய காக்கா முட்டை - சுஹாசினி அதிர்ச்சி

மணிகண்டன் இயக்கத்தில் குழந்தை நட்சத்திரங்கள் ரமேஷ், விக்னேஷ் ஆகியோர் நடித்து ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியாகிருக்கும் படம் காக்கா முட்டை. விருதுகள் பலவற்றை வென்று குவித்துவிட்டபோதிலும் 'காக்கா முட்டை' விருதுக்கானப் படம் என்ற பிம்பத்தை தாண்டி வெகுஜனங்களையும் ஈர்த்துவிட்டது என்பதை இணையவாசிகளின் கருத்துக்களே நிரூபிக்கின்றன.
படம் பார்த்த ரசிகர்கள் தங்களது அனுபவத்தை மிகவும் ருசீகரமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். காக்கா முட்டை படம் பார்த்த ரசிகர்கள் அள்ளிக் கொட்டிவரும் கருத்துக்கள் இன்றைய ட்வீட்டாம்லேட்டில்...
பால்சாமி ‏@samy5990 - தமிழ்சினிமாவை பார்த்து உலக சினிமா காப்பி அடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.#காக்கா_முட்டை.
காக்கா முட்டை! ! ‏@girikaalan - ஜிகர்தாண்டாக்கு பின், தியேட்டர் விட்டு வந்த பிறகு படத்தின் காட்சிகளை முதலில் இருந்து கடைசி வரை அசை போட்டு கொண்டிருக்கிறோம். #KakkaMuttai.
svenkadesh ‏@svenkadesh - காக்கா முட்டை - செமையா இருக்கு, கதாபாத்திரங்களின் தேர்வு அருமை! நல்ல தமிழ் படம், dont miss.must watch movie.
Kutty Naveen ‏@naveenlegend7 - காக்கா முட்டை கான்செப்ட்...என்ன தான் நீ புது ட்ரஸ் போட்டுட்டு பிஸ்ஸா தின்னாலும்...அது ஆயா சுடுர தோசைக்கு ஈடாகாது.. #KaakaMuttai.
கேப்டன் வேலு ‏@Thalapathy_8787 - தமிழ் சினிமாவை மட்டுமல்ல தமிழ் சினிமா ரசிகர்களையும் அடுத்த நிலைக்கு அழைத்து செல்லும் ஒரு முக்கியமான படம்.
Sa.Na. Kannan ‏@sanakannan - மவுஸ் பிடிக்கறவங்கதான் காக்கா முட்டையைத் தலையில தூக்கிவைச்சு கொண்டாடுறாங்க. இதுவரை படத்தைக் குறை சொல்லும் ஒரு விமரிசனமும் இல்லை. cc சுஹாசினி
srinivasan ‏@sathishvasan - காக்கா முட்டை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என நம்புகிறேன். அறிவுஜீவிகளின் கண்களில் எந்தவிதக் குறியீடும் படக்கூடாது என்று உளமாற வேண்டுகிறேன்.
பால்சாமி ‏@samy5990 - கௌவி செத்தப்பிறகு தன்னுடைய ஆசைக்காக சேர்த்து வைத்த காசை பாடை கட்ட கொடுக்கும் போது அந்த பையனை விட பலர் அழுது விட்டார்கள். #காக்காமுட்டை.
ஆல்தோட்டபூபதி ‏@thoatta - சிட்டி சென்டர்ல, சத்தியமா நம்மள உள்ள விட மாட்டான்னு சின்ன காக்கா முட்டை சிரிச்சுக்கிட்டே சொல்றான், நமக்கு பதறுது.
Yoda ‏@iamVariable - ரொம்ப நாள் அப்பறம் டவுன்லோட் பண்ணாம ஒரு தமிழ்படம் பார்க்க தியேட்டர்க்கு. நவ் காக்கா முட்டை. ஐயம் வெயிட்டிங். ஆங்.
Suresh KS ‏@Suresh_0703 - பிட்சா'வை படத்தின் முக்கிய கதாபாத்திரமாக்கி இறுதிக் காட்சியில், அந்தச் சிறுவர்களின் வசனமும், ரியாக்்ஷன். செம :-) :-).
மென்டல் மனது ;) ‏@R4_Rishi - எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்த படம் காக்கா முட்டை. தமிழ் சினிமா வைத்து கொண்டாட வேண்டிய படம் காக்கா முட்டை.
சுரேஷ்பால்ராஜ் ‏@ilakaathu - பீட்சா இரு வகைப்படும் 1. கார்த்தி சுப்புராஜ் சமைத்த "Horror pizza". 2.மணிகண்டன் சமைத்த "Humour pizza" "காக்கா முட்டை"
karthiAndiyappan ‏@karthikeyanA17 - வாழ்வின் எதார்த்தமும் சமூகத்தின் நிதர்சனமான உண்மை #காக்காமுட்டை.
ஷான் ‏@shanmugame - என்னய்யா இன்னும் காக்கா முட்டைய யாரும் திட்டலை.. எல்லாரும் பாராட்டியே பதிவு போட்டா, இது என்ன தமிழக சட்டமன்றமா.. .
கார்க்கிபவா ‏@iamkarki - இங்க்லிஷ் படத்துல சப் டைட்டில் இல்லைனாலும், தமிழ் படத்துல சப் டைடிட்ல் இருந்தாலும்கடுப்பாகுது. #காக்காமுட்டை
thirumurugan ‏@thiruja - ’காக்கா முட்டை’ நாம் ஏறி மிதித்துக்கொண்டிருக்கிற சென்னையின் பூர்வகுடி மக்களைப் பற்றிய படம்.
காக்கா முட்டை! ! ‏@girikaalan - சிம்பு சொன்ன 'மென்டலி சிக் தவிர எல்லார்க்கும் இப்படம் பிடிக்கும் ' உண்மையாலுமே பொருந்தறது இப்படத்துக்கு தான். . . #KakkaMuttai அருமை :-))).
ட்விட்டர் Newton ‏@twittornewton - காக்கா முட்டை: காக்கா முட்டை மார்க் வாங்கலை. நூத்துக்கு நூறு வாங்கியிருக்கு!
Kisshor Rithvik ‏@kisshorrithvik - Globalization should reach everyone.. Must watch movie ~ #promote it காக்கா முட்டை.
பால்சாமி ‏@samy5990 - இந்த மாதிரி பல அற்புதமான கதைகளை வைத்துக்கொண்டு,Producer இல்லாமல் கோடம்பாக்கத்தில் தெருதெருவாய் அலையும் இயக்குனர்கள் ஏராளம். #காக்கா_முட்டை.
சிந்தனைவாதி ‏@PARITHITAMIL - ”அவார்டு படம்”ன்னாலே தியேட்டர் பக்கம் தலைவெச்சுக்கூட படுக்கக்கூடாதுங்குறது பொதுவான ஐதீகம். அதை இது அப்பட்டமா தகர்த்திருக்கு.#காக்காமுட்டை
Keyser Söze ‏@IYamunai - எல்லாரும் கதைய சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. இனி தாங்காது. காக்கா முட்டை.., தோ வரேன்.
பேஸ்புக்கிலிருந்து.....
வால்டர் வடிவேல் - நல்ல படம் பாக்கனும்னு நெனைக்கிறவங்க இந்தப்படத்த பாத்துருங்க.. இயக்குனராகனும்னு நெனக்கிறவங்க இந்தப்படத்தப்பாத்து கத்துக்கங்க.. ஏற்கனவே இயக்குனரா இருக்குறவங்க இது மாதிரி ஒரு படமாவது எடுத்துருங்க.. ‪#‎காக்கா‬ முட்டை
Narayanan Selva - அப்பா சத்தியமா நம்மள உள்ள விட மாட்டாங்கடா !!!!!! Impressed dailog ‪#‎காக்கா‬ முட்டை
vaishnav Sangeeth - காக்கா முட்டை எனக்களித்த உற்சாகத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஏதோ ஓரு பல நாள் ஏக்கம் பூர்த்தியான திருப்தியோடு தூங்கச் செல்கிறேன்..!!! (Never felt before.. honestly) நன்றி மணிகண்டன்.
Vadi Vel - காக்கா முட்டை... நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு படம் பார்த்து கண் கலங்கினேன்... வாய்விட்டு சிரித்தேன்... ஆச்சர்யப்பட்டேன்... கலவையான மனநிலையுடன்தான் தியேட்டரில் இருந்து வெளியே வந்தேன்... நிஜமாகவே ஆச்சர்யப்படுத்திவிட்டார்கள் இந்த 'நிஜ' பசங்க... #காக்கா_முட்டை குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்... குறிப்பாக இயக்குனர் மணிகண்டனுக்கு...
Pon Vimala - படம் பார்த்து சில மணிநேரங்கள் ஆன பின்பும் தொடர்ந்து தூங்கவிடாமல் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது இந்த காக்காமுட்டை.அட போங்கப்பா...இன்னைக்கு தான் டிக்கெட் பாக்குறப்போ தோணுச்சு இந்த சந்தோஷத்துக்கு விலை வெறும் 120 ரூபாய் தான்னு யாருய்யா விலை வச்சது? Hats of u team #காக்காமுட்டை
Murugesan Nellai - #காக்காமுட்டை இந்த படத்துக்கு ஏன் இவ்ளோ விருது அப்டிங்கிறது படத்தை பார்த்தாதான் தெரியும்.


நன்றி - த இந்து

0 comments: