Thursday, June 11, 2015

விஜய் ரசிகர்களும், கலைஞரும் ஒரே மாதிரியா? எப்படி?

தனிமையிலோ ,பொதுவெளியிலோ நம் அன்புக்குரியவர் நம்மை அவமானப்படுத்தினால் அது தான் உலகின் சிறந்த வலி


==========

2 ரோமியோ ஜூலியட் மாதிரி 2 பேரும் ஜோடியா சுத்தினீங்க்ளே?இப்போ தாடியோட சுத்தறே?
லேடியை நம்பினா எல்லோருக்கும் இனிமே இப்படித்தான்


===========

3 ஒரு நெட் தமிழன் காக்காமுட்டை போய் பாருங்க.பிரமாதமான படம்னு காக்காமுட்டை தயாரிப்பாளருக்கே மென்சன் போடறாரு.அவரும்
ஆர்டி.அவரே பாக்கல போல

============


4 அன்பை விலைக்கு வாங்க முடியாது.ஆனா அன்பே வா வை விலைக்கு வாங்கிடலாம்.பழைய படம் தானே?கம்மி ரேட்க்கு கிடைக்கும்


============

5 சோளிக்கே பீச்சே க்யா ஹை ? ன்னு கேட்டப்ப அப்டி ஒரு பீச் இருக்கா?எனக்கு மெரீனா பீச் கோவளம் பீச் தான் தெரியும்னு சொன்ன அப்பாவி தான் நான்


==============

6 திமுக வில் இல்லாதபோதும் நானும் ஒரு மொழிப்போராளிதான்.தேன் மொழி ,தமிழ்மொழி,கனிமொழி னு ஏரியால எந்த மொழி குடி வந்தாலும் அவங்களுக்காகப்போராடுவேன்


=============

7 ஹிந்திமொழியை எதிர்த்த தானைத்தலைவர் மகன் ,பேரன் ,பேத்தி ,மருமகள்,மகள் எல்லாருக்கும் ஹிந்தி தெரியும்.தமிழன் வழக்கம் போல் ஏமாந்துட்டான்

==============

8 மகனுக்காக ஒதுக்கும் நாள் சன்டேன்னா
மகளுக்காக ஒதுக்கும் நாள் டாட்டர்.டே/ சாட்டர்டே வா?


===============


9 காட்டில் எலி ஓடுனா புலி கண்டுக்காது.ஆனா தமிழ் நாட்டில் எலி ஓடிட்டா புலி வயிற்றில் புளியைக்கரைச்சது போல் இருக்கும்.கவுரவப்பிரச்னை


=============

10 சார்.ராஜ்மவுலி யோட மோதலாமா?கெத்தா இருக்கும்?சிம்பு தேவன் = டைட்டில் பாத்தீங்க இல்ல?பாகுபலி.குறியீடு.புலி பலி ஆகிடும்


=============
11பஸ்சோ ,ரயிலோ தொலை தூரப்பயணங்களில் முன்னோக்கிப்பயணிக்கும்போது நம் நினைவுகள் பின்னோக்கிப்பயணிக்கும்


===========


12 நான் சின்னப்பையனா இருக்கும்போது பொண்ணுங்க போட்டு வரும் மணிபர்ஸ் மாடல் ஹேர் ஸ்டைல் கூந்தலுக்குள் கை விட்டா காசு இருக்கும்னு நினைச்ட்டேன்==============


13 கேரள நாட்டிளம் பெண்களிடம் என்னைக்கவர்ந்த முதல் விஷயம் தினமும் தலைக்குக்குளித்தல் ,லூஸ் ஹேர் கோடாலி முடிச்சு ,அலட்டில்கொள்ளாத அழகு

==============


14 வாய்க்காலில் ஓடி வந்து கத்தி அடிக்கையில் மொத்தத்தண்ணீரும் வற்றி விட்ட அதிர்ச்சி போல் உன் அருகாமை இல்லாமை


============

15 பஸ் ல பொண்ணுங்க நம்ம மேல வந்து பட்டுட்டு சாரி சொல்லும்போது உதடு இட்ஸ் ஓக்கேன்னும் உள்ளம் ஒன்ஸ்ம்மோர் ம் கேட்கும் (கற்பனை)=========


16 தெனாவெட்டாக ஆர்ப்பரித்துத்திரியும் என் ஆணவம் திமிர் எல்லாம் உன் முன் பணிவாய் கைகட்டிக்கொள்ளும் செப்படி வித்தை எப்படி நீ கற்றாய்?


==========

17 டைரக்டர்ங்க எல்லாம் எ பிலிம் பை னு டைட்டில்ல போட்டுக்கறமாதிரி ஒவ்வொரு ட்வீட்க்கும் கீழே எ ட்வீட் பை சி பி னு போடலாம்னு இருக்கேன்.
==========


18 இளைய தளபதி ட்வீட் போட்டா எப்டி பில்டப் தருவாரு?
இந்த ட்வீட்டை உங்களுக்கு வழங்குவது உங்கள்.விஜய்


==========

19 விஜய் ரசிகர்களும், கலைஞரும் ஒரே மாதிரி. அவங்களுக்குத்தேவைன்னா  யார் கூட வேணாலும் கூட்டணி வெச்சுக்குவாங்க#சூர்யா,தனுஷ், விக்ரம் FANS பாவம்================


20 பொதுவா மெல்லிசான  கொடிகளுக்கு  படர்வதற்கு ஒரு  ஆதாரம் தேவைப்படும், ஆனா  ஆலமரம் ஆண்டாண்டு காலம்  ஆனாலும் தனியா கோலோச்சி நிற்கும்===================

0 comments: