Wednesday, June 10, 2015

டாஸ்மாக்கிற்கு தடை ?!!

உதகையில் செந்நிறமாக மாறிய ஏரி நீர்: அதிர்ச்சியில் கிராமமக்கள் # கம்யூனிஸ்ட் ஏரி ஆகிடிச்சா? இனி அது கம்யூனிஸ்ட் ஏரியா?==================2 சொல்வதெல்லாம் உண்மை... லட்சுமி அவுட்.. "மயூரி" சுதா சந்திரன் இன்! # என்னம்மா இப்டிப்பண்றீங்களேம்மா?============3 புகைப்பிடித்தால் சர்க்கரை நோயின் தாக்கம் அதிகம் உள்ளதாம்- அதிர்ச்சி தகவல்!# எல்லாரும் கேட்டுக்கங்கப்பா, தம் அடிச்சா கதம் கதம்
=============4 RK.நகரில் போட்டி இல்லை,தமாகவினர் மனசாட்சியுடன் வாக்களிக்க வேண்டும்- வாசன் # 2000 ரூபாய்க்கு வித்திட்டுதானே வாக்குச்சாவடிக்கே வருவாங்க?
==============5 கத்தார் நாளிதழில் காம சூத்ரா படம்: பதவியை ராஜினாமா செய்தார் பொறுப்பாசிரியர் # இதுதான் சக்சஸ்க்கான ஃபார்முலான்னு நினைச்ட்டார் போல================
6திருச்சி சுங்க அலுவலகத்தில் 30 கிலோ தங்கம் மாயம்: அதிகாரிகளிடம் 5 மணி நேரம் சிபிஐவிசாரணை# பாலுக்குக்காவலா பூனையை வெச்சா பூனை என்ன செய்யும்?=============7 படங்களை எடுப்பது ஈஸி, ரிலீஸ் செய்வது கஷ்டம் - சந்தானம் ... # அதை விட கஷ்டம் ரிசல்ட் தெரியாமயே FDFS பார்ப்பது============8 விசு வின் மணல் கயிறு பாகம் 2 விரைவில் # ஹீரோயின் கண்டிஷன் போடற மாதிரி திரைக்கதையை மாத்துங்க, அப்போதான் நம்பற மாதிரி இருக்கும்
==============9 மேகி விளம்பரத்தில் நடித்தஅமிதாப், மாதுரி தீட்சித், பிரியங்கா சோப்ரா மீது கேஸ் # தண்டனையா 6 மாசத்துக்கு டெய்லி 3 வேளை மேகியே சாப்பிடக்குடுங்===========10 ராகுல் மீண்டும் பாத யாத்திரை: ஒடிசாவில் 5–ந்தேதி தொடங்குகிறார். # 40 வயசைத்தாண்டிட்டாலே வாக்கிங் நல்லதுதான், டாக்டர் சொன்னாரா>?=============11 ஜெயலலிதா வழக்கில் மேல் முறையீடு: அதிர்ச்சியில் கீரனூர் அதி.மு.க. நிர்வாகி சாவு # கல் தடுக்கி விழுந்து செத்தாக்கூட நிவாரண நிதி ஆசைல டூப்
===========12 திருப்பதி யில் முறைகேடாக #லட்டு விற்பனை : தேவஸ்தான ஊழியர் சிக்கினார் # சிக்குனவன் ஜெயிலுக்குப்போறான், சிக்காத திருடன் அரசியலுக்கு வாரான்===============

13 மாறன் சகோதரர்கள் மனு மீதான விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைப்பு # தீர்ப்பு நாள் தெரிஞ்சுட்டா ஊர் சுத்தற நாள் நரகம் ஆகிடும்=============14 சன் டிவி குழுமத்தின் ரூ742 கோடி சொத்துகளை அமலாக்கப்பிரிவு முடக்கியது # பொதுமக்களோட வாயைக்கட்டி வயித்தைக்கட்டி அடிச்ச பணம் எல்லாம் போச்சா?
=============
15 என்னை மறந்துவிட்டார்கள்அஜித்ரசிகர்கள் வெங்கட்பிரபு உருக்கம் # எதை மறக்கக்கூடாதோ அதை நீங்கதான் மறந்துட்டீங்க ,தூக்கிவிட்டவரை தாக்கிவிட்டுட்டு
==========16 மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர் மனித வெடிகுண்டுக்கு சமம்-கோர்ட் #,அப்போ மது விற்கும் அரசு வெடிகுண்டு மையம்?=============17 இரவு 12 மணி ஆனாலும் என்வீட்டு கதவைதட்டி உங்கள் பிரச்சனைகளை கூறலாம்-மோடி # எப்படியும் நீங்க உங்க வீட்லயோ நாட்லயோ இருக்கமாட்டீங்க==============

18 கருணாநிதி மகள் மு.க.செல்வி மீதான மோசடி வழக்கு -6 மாதத்துக்குள் முடிக்க ஹைகோர்ட் உத்தரவு! # செல்வின்னாலே மோசடி பண்ணுவாங்க போல


==================

19 மேகிக்கு தமிழகத்தில்
தடை முதலமைச்சர்
ஜெ அதிரடிஉத்தரவு # அப்டியே அந்த டாஸ்மாக்கையும் தடை பண்ணிட்டா புண்ணியமாப்போவும்


==============


20

திருமணத்துக்கு சவப்பெட்டியில் வந்த மணப்பெண்: மணமகன் அதிர்ச்சி # நல்ல வேளை, மாப்ளை பெட்டியில் போய் படுத்துக்கலை


================

0 comments: