Tuesday, June 23, 2015

உயரம் கம்மியா இருக்கும் ஆண்களுக்கு உயரமான காதலி அமைந்தால் .....

1  அன்பே! கமர் கட் மிட்டாயை நீ காக்கா கடி கடிச்சு எனக்குக்கொடுத்தாக்கூட அது மயில் கடி என்றே அழைக்கப்படும்.

==========


2 தமிழ் நாட்டுத்தமிழன் தூங்கிட்டு இருக்கும்போது ஃபாரீன் நெட் தமிழன் முன் கூட்டியே வந்து துண்டைப்போட்டு உள்ளேன் லேடி சொல்லிடறார்

============

3 நீ ஒரு கோடி ரூபாய் மோசடி செய்தால் 3,வருச சிறை தண்டனை ,அதுவே 66 கோடி எனில் விடுதலை #,சரிதாநாயர் ,ஜெ - குமாரசாமி குழப்படிகள்=============


4 சரிதாநாயரை ஜெயிலில் போட்டுட்டு கண்காணிப்பு கேமரா வைங்கப்பா.ஜெயிலர்ஸ் புகுந்து விளையாடிடப்போறானுங்க


==============

5 வானம் மேகமூட்டமா இருந்தா இதான் சாக்குன்னு சூரியனே 2ு நாளா விடுமுறைல இருக்கு நாம மட்டும் எதுக்கு வேலைக்கு போகணும்.."னு எஸ் ஆவான் தமிழன்


=================


6 தன் அபிமான நடிகரின் போட்டோவை டிபியா வெச்சிருந்தா அவன் எப்பேர்ப்பட்ட ஆளா இருந்தாலும் நல்லவன்னு நம்பி ஏமாறுவாள் நெட் தமிழச்சி

==============


7 உயரம் கம்மியா இருக்கும் ஆண்களுக்கு உயரமான காதலி அமைந்தால் லிப் கிஸ் லக் கிட்டக்கா


==============


8 காதல் என்பது சிம்பு பட ட்ரைலர் மாதிரி அடிக்கடி வரும்.ஆனா கல்யாணம்கறது சிம்பு பட ரிலீஸ் மாதிரி.வருடக்கணகில் இழுத்தடிக்கும்


=============

9 கடவுளே எழுதிய கவிதை - பெண்...
இதுல சோகம் என்னான்னா அது சாத்தானிடம் இருந்து காபி பேஸ்ட் பண்ணப்பட்டது


============

10 ஒரு நாளும் இல்லாத திருநாளா செந்தமிழ்ல நெட் தமிழன் எழுத ஆரம்பிச்சா ஏதோ செந்தமிழ்த்தேன்மொழியாளை கரெக்ட் பண்ணப்போடும் ஒத்திகை என அறிக


============

11 அந்தக்காலத்துல மான் கொழுப்பில் இருந்து தான் லிப்ஸ்டிக் தயாரிச்சாங்களாம்.அப்போ மான் இதழாள்னு சொல்லலாமா?லிப்ஸ்டிக் லில்லிகளை?


==============

12 புலி பட ட்ரெய்லருக்கு விஜய் ரசிகர்களை விட அஜித் ரசிகர்கள் தான் அதீத ஆர்வமா இருக்காங்க.#,ஐ ஆம் வெய்ட்டிங் பார் ஓட்டிங் னு நினைப்பாங்க்ளோ?


==========


13 கைக்கு எட்னது வாய்க்கு எட்டலைன்னு லிப் கிஸ் மேட்டர்ல ஒரு பயலும் புலம்பரதில்லை.


=============


14 மூக்குத்தி போட்டோ போடனும்னாக்கூட பொண்ணுங்க பியூட்டி பார்லர் போய் புருவத்தை ட்ரிம் பண்ணி.பேசியல் முடிச்ட்டு கிராண்டாதான் செலவு பண்றாங்க


=============

15 ஸ்கூல்ல /காலேஜ்ல/ ஆபீஸ்ல தூங்குனாலும் தியேட்டர்ல தூங்கமாட்டான் தமிழன்


============


16 இப்பவெல்லாம் குடிக்கற பசங்க படிக்க.ஆரம்பிச்ட்டாங்க.படிக்கற பொண்ணுங்க குடிக்க ஆரம்பிச்ட்டாங்க.#,3ஷா இல்லைன்னா.9தாரா


==============


17 உங்களை யாராவது இனிமையானவர்னு சொன்னா உடனே புளகாங்கிதம் அடைஞ்சிடாதீங்க, சுகர் இருக்குனு சூசகமா சொல்றாரோ என்னவோ?


==============


18 டீ, காபி குடிக்கற பழக்கம் இல்லைன்னா காப்பி அடிச்ட்டோமோன்னு உறுத்தல் இல்லாம வாழலாம், காபி பேஸ்ட் ட்வீட்ஸ், உல்டாஅ ரீமிக்ஸ் போட்டாக்கூட


=================


19 அன்பே! நீ எத்தனை வளையல் போட்டு உன் கைக்கு அழகு பார்த்தாலும் நீ ஒரு வளையா மாரி என்றே கவிதை எழுததோணுதே அது ஏன்?


=================

20 ஒரு பொண்ணு தன்னோட பேரின் ஒவ்வொரு எழுத்தையும் ஒரு கட்டத்துக்குள் போட்டிருக்கு.ஆல்ரெடி காதலன் கட்டம் கட்டிட்டான்னு அர்த்தமா ?


=================

0 comments: