Tuesday, June 09, 2015

சிம்புவோட ரசிகை மா வி க்கு ஒரு எச்சரிக்கை

1  டாக்டர்,ஃபில்டர் காஃபி, ப்ரூ காஃபி  எது நல்லது?


பொதுவா  காபியை/டீயை  தவிர்ப்பது  உடல் நலனுக்கு நல்லது


==============


2 ஜட்ஜ்  =  எதுக்காக மிஸ்டர்  எட்டப்பனை கொலை செய்ய முயற்சி செஞ்சே?

கைதி=  லைசன்ஸ் வேணும்னா  எட்டை போட்டுக்காட்டுன்னாரு


==================

3 எதுக்காக  ஆடியன்ஸ்  மேல குப்பை அள்ளிக்கொட்டறீங்க?

  மாசு  செலிபரேஷன்====================


4 ஒரு படம்  ரிலீஸ் ஆன  முத நாள் 8 கோடி வசூல்  பண்ணுச்சுன்னா 12 நாள்  கழிச்சு எவ்வளவு  வசூல் ஆகி இருக்கும்?
குத்து மதிப்பு குமாரசாமி =96 கோடி


=================


5  மேடம், ராடன்  டிவி  பெயர்க்காரணம்  என்ன?

 ரா  ஃபார்  ராதிகா  டன்  ஃபார்   டன்.

ஆனா ஊர்ல  நாடார் ( NADAR) என்பதைத்தான் RADAN-னு சொல்றாங்க?


=================

6  டியர்,தாடியை  ஷேவ்  பண்ணி  கால் கிலோ  வெயிட் குறைச்ட்டேன்

அப்டியே  தலை  ஹேர்கட் பண்ணிட்டா 2 கிலோ  வெயிட்டும் குறையுமே?


================


7  ஸ்கூல்ல டீச்சர்  போர்டுல எழுதிப்போட்டதை   உன் நோட்ல எழுத  மாட்டேண்ட்டியாமே? ஏன்?


காபி பேஸ்ட்  பண்ணா  எனக்குப்பிடிக்காது=================

8  டியர்.எங்க அப்பா உங்க ட்வீட்சை 10 நாள் செக் பண்ணிட்டு லவ் க்கு ரிசல்ட் சொல்றாராம்.
ஓஹோ!அப்போ டெய்லி 50 குறள் மட்டும் போட்டுடறேன்.


==========

9 ஜட்ஜ் = 200 கோடி ரூபா திருடிய்து நிரூபணம் ஆனாலும் குற்றவாளி வயதை கருத்தில் கொண்டு மன்னித்து விடுதலை செய்கிறோம்.2000ரூ அபராதம்.20 தவணையில்================

10 டியர்.முத்தம் வாங்கத் தெரியுது ஆனால் திருப்பி தரனும் என்ற இங்கிதம் .?
டியர்.முத்தத்தில் எதுக்கு இங்கிதம்?எப்டி கொடுத்தாலும் இதம் தானே?


================

11 நீங்கள் கேட்கும் Personal. கேள்விக்கு எதுக்கும் விளக்கம் கூற முடியாது.
மேடம்.இன்ட்டர்வ்யூக்கு வந்துட்டு போன் நெம்பர் தர மாட்டேன்னா எப்டி?


============


12 நித்தி= ஹலோ! ரஞ்சிதாவா? என்கிட்டே சொல்லவே இல்லை? ரஜினி கூட இணைஞ்சு படம் பண்றியாமா?
ரஞ்சி= சுவாமி! ஆசிரமத்தில்தான் இருக்கேன்,அது ரஞ்சித்


===========

13 அமிதாப் = ஜி, ரஞ்சித் கூட படம் பண்றீங்களா?
ரஜினி = ஜி ஹாங் ஷூட்டிங்க் எங்கே? ஹாங்க் காங்


=================

14 இன்ட்டர்வ்யூவில் லேடி எம் டி
உங்களைப்பத்தி சுருக்கமா 10 நிமிஷத்தில் சொல்லுங்க. மேடம்.சுருக்கம் எனக்குப்பிடிக்காது.அயர்ன் பண்ணி சொல்லவா?


=============

15 மிஸ் ! உங்க லவ்வர் பேரு என்ன?
சொல்ல மாட்டேன் ரொம்ப நீளமான பேரா இருக்கே? யோவ். எனி க்ளூ? நாய் வெச்சிருப்பாரு. நாயோன்? அவரு மேரீடுமேன்?


===============


16 கோபம் அதிகமா வந்தா அந்த இடத்தை விட்டு 2 நிமிடம் நடந்துட்டு வந்தா கோபமே போயிருது 


அது  சும்மா  வாக் போய் இருக்கும், மீண்டும் வரும்


==============


17 டாக்டர், கோபம் வரும்போது 2 நிமிசம் அந்த  இடத்தை விட்டுப்போய்ட்டா  கோபம் போய்டுமா?


இல்ல, அந்த இடம் தான் போகும்


================


18 இன்னிக்குதா மொத தடவை ஒரு பொண்ணு சிகரெட் குடிக்கறத பாக்கறேன்..:((
அங்கேயே வெயிட் பண்ணுங்க , சரக்கும் அடிக்கும் அடுத்ததா


===========


19 நான் சிம்புவோட ரசிகைங்கறது ஊர்ல யாருக்கும் தெரியாது
முதல்ல இது சிம்புக்குத்தெரியாம பார்த்துக்குங்க, டேஞ்சர்


===============

20 கற்பூர புத்தி என்கிறார்களே, சீக்கிரம் exhaust ஆகிவிடாதா?!
அடேங்கப்பா , உங்களுக்கு கற்பூர புத்திங்க

======================

0 comments: