Sunday, June 21, 2015

புலி டீசர் - காமெடி கும்மி

புலி டீசர் வந்ததும் முதலில் நியாயமான விமர்சனம் வழங்கப்படும், பின் கலாய்க்கப்படும்.=============
2 விஜய் மைண்ட் வாய்ஸ் = பாகுபலி தான் புலியா வருது. எத்தனை நாளைக்குத்தான் மகேஷ்பாபுவை ஃபாலோ பண்றது? இந்த டைம் பிர்பாஸ்===========3 சார், டூயல் ரோல்னு சொன்னீங்க, ஒரு ரோல் இங்கே இருக்கு, இன்னொரு ரோல் எங்கே?

அந்த இன்னொண்ணுதாங்க இது # புலி

============

4 சார், படத்துல நீங்க மன்னனா வர்றீங்களா?ஆமா, மன் ஆதி மன்னன்===============


5 புலி FDFSக்கு டிரஸ் கோடு ரொம்ப டஃப்ஃபா இருக்கும் போலய்யே


============

6 துப்பாக்கி, கத்தி , ஜில்லா வரிசையில் புலி யின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குட்


==========

7அந்தக்காலத்தில் வாண்டுமாமா எழுதிய வீரப்பிரதாபன் கதைகளில் வரும் இளவரசர் ஓவியம் போல் விஜய் கெட்டப் அமைக்கப்பட்டுள்ளது. சார்மிங் & க்யூட் லுக்


=================


8  தமிழ் நாட்டின் பெரும்பாலான  பெண்கள், குழந்தைகள்,இளைஞர்கள்  மனம் கவர்ந்த வசீகரன் இளைய தளபதிக்கு பிறந்த நாள் வாழ்த்து


===============


புலி டீசர் நல்லாதான் இருக்கு , விஜய் ஓப்பனிங் சீன் குட். லார்டு ஆஃப் த ரிங்க்ஸ் ஹீரோ போல் கெட்டப்.சிம்பு தேவனின் இரண்டாவது பிரம்மாண்டம்

=============

10 படத்தின் முக்கிய கேரக்டர்கள் ஹீரோ,ஹீரோயின், வில்லன், வில்லி 4பேரையும் கனகச்சிதமாக காட்டி இருக்கும் புலி டீசர், வெரிகுட் எடிட்டிங்


============


11 ராணிஅரியணையில் இருந்து இறங்க வேண்டிய சூழல் வருவது டீசரில் ஏதாவது குறியீடா? தற்செயலானதா? # புலி டீசர்


=============

12 டீசரில் வரும் ஹீரோ ஓப்பனிங்க் சீன் தான் படத்திலும் இண்ட்ரோ சீன் என யூகிக்கிறேன் ,விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான ஓப்பனிங் சீன்


==========

13 சாரி சார், உங்க படத்துக்கு வரி விலக்கு தர முடியாது.


ஏன்? டைட்டில் தமிழ் தானே?
ஆனா தமிழனான ஹீரோ ஃபிரெஞ்ச் தாடி வெச்சிருக்காரே?


===========

14 மன்னன், படையப்பா பட வரிசையில் புலியில் விஜய்-ஸ்ரீ தேவி பஞ்ச் டயலாக்குகள் பட்டாசைக்கிளப்பும் என எதிர்பார்க்கிறேன்


==============

15 வில்லனோட அடியாளுங்க எல்லாம் ” பச்சை”த்துண்டை கட்டி இருக்காங்க ஹீரோ ” சிவப்பு ” டிரஸ் க்ரூப் டான்சர்ஸ் உடன் நிற்கறார்.ஏதோ குறியீடு

================

16  நீல வண்ணக்கண்ணன் தான் அண்ணன்,

நார்மல் கண்-ணன் தான் தம்பி # டூயல் ஹீரோ புலி============


17 ஸ்ரீதேவி = யவண ராணி என் கொடி இந்தியா பூரா இன்னும் பறக்குது,
விஜய் = உலகம் பூரா என் கொடி பறக்குது # புலி பஞ்ச் ( கற்பனை)


================

18 கடல் ல இருந்து சீறிப்பாய்ஞ்சு வந்தா சுறா

வானத்துல , அந்தரத்துல பாய்ஞ்சு வந்தா புலி


============


19 விஜய் ஓப்பனிங் சீன்ல கோட்டை ல எண்ட்ரி கொடுக்கறாரே? கோட்டையைப்பிடிச்சுடுவேன்னு சொல்லாம சொல்றாரோ?


==========


20 இம்சை அரசனைவிட புலி 2 மடங்கு பிரம்மாண்டமாக இருக்கும் என பட்சி சொல்லுது


==============


21விஜய் =அப்பா, ஆட்சியைப்பிடிச்சிடுவோமா?
எஸ் ஏ சி = முதல்ல கத்தியை ஒழுங்காப்பிடி, கை ல வெட்டிடப்போகுது # புலி டீசர்


===========

22 இந்த சீன்ல நீங்க சிவ லிங்கத்தை தோள்ல சுமந்து ஆத்தங்கரையோரமா வர்றீங்க
அது பாகுபலில வந்த சீனாச்சே?
அது கிருஷ்ணா ஆறு,இது காவேரி ஆறு

=============

23 மோடி வழங்கும் தூய்மை இந்தியா திட்டத்துக்கு உதவினதுக்கு இந்தாங்க விருது.
நான் எப்போ உதவினேன்?
டீசர்ல குப்பையை காலாலயேகூட்னீங்க்ளே?


=============


24 விஜய் கமலை பிடிச்ட்டார், எப்டின்னா 16 வயதினிலே (1977) ஸ்ரீதேவியுடன் நடிச்சது போல் 56 வயதினிலே ஸ்ரீதேவியுடன் விஜயும் நடிச்சாச்சே?


===============


25 சார், சம்பளம் 28 கோடி தானே பேசுனோம்.100 பொற்காசு மட்டும் தர்றீங்க?
இது சரித்திரக்கதை.19ம் நூற்றாண்டில் 100 பொற்காசு = 28 கோடி


==================

0 comments: