Wednesday, June 24, 2015

குருப்பெயர்ச்சி பலன்கள் + பரிகாரங்கள் டூ 12 ராசிகள் -ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் ( 5.7.15 முதல் 1.8.16 )

குருப்பெயர்ச்சி பலன்கள்எளிய பரிகாரங்களுடன் !ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
குத்தறிவு சிந்தனை அதிகம் உள்ளவர் நீங்கள். குரு பகவான் 5.7.15 முதல் 1.8.16 வரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ய ஸ்தானமான 5ம் வீட்டில் அமர்கிறார். இனி, உங்களுடைய வாழ்க்கை தரத்தையும் உயர்த்தப் போகிறார். வீட்டில் சந்தோஷம் குடிகொள்ளும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உங்கள் மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாகும். 
குரு தனது 9ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால், முகப் பொலிவு கூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். அடகில் இருந்த பத்திரங்கள், நகைகளை மீட்பீர்கள். சிலருக்கு நல்ல வேலை அமையும். சொத்து வாங்கும் முயற்சி பலிதமாகும்.
குரு பகவான் தனது 5ம் பார்வையால் 9ம் வீட்டைப் பார்ப்ப தால் இழுபறியான வேலைகள் முடிவடையும். புதிய யோசனைகள் உதயமாகும். தந்தை வழியில் ஆதரவு பெருகும். லாப வீடான 11ம் வீட்டை குரு தனது 7ம் பார்வையால் பார்ப்பதால், நிர்வாகத் திறமை கூடும். மூத்த சகோதர சகோதரிகளுடனான பிணக்குகள் நீங்கும். ஷேர் மூலமாக பணம் வரும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.15 முதல் 6.9.15 வரை கேதுவின் மகம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் சுபச் செலவுகள் அதிகமாகும். அசுவினி நட்சத் திரக்காரர்களுக்கு தூக்கம் குறையும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள்.
7.9.15 முதல் 16.11.15 வரை; 20.5.16 முதல் 9.7.16 வரை உங்கள் தனசப்தமாதிபதியான சுக்ரனின் பூர நட்சத்திரத்தில் குரு செல்வதால், அடிப்படை வசதிகள் பெருகும். பணவரவு உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு பொறுமை அவசியம்.
17.11.15 முதல் 20.12.15 வரை; 10.7.16 முதல் 1.8.16 வரை பூர்வ புண்யாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தில் குரு செல்வதால், அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். எனினும், உங்களுடைய  மகளின் திருமணத்துக்காக கடன் வாங்க வேண்டியது இருக்கும்.
21.12.15 முதல் 19.1.16 வரை உங்கள் ராசிக்கு 6ல் குரு அமர்வதால், எதிர்ப்புகள், உங்களைப் பற்றிய வீண் விமர்சனங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது, பழைய கடனை நினைத்து மனம் கலங்குவீர்கள். எனினும், உங்கள் வளர்ச்சி தடைப்படாது.
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:
20.1.16 முதல் 6.2.16 வரை குரு, உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால், எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள்.
7.2.16 முதல் 7.3.16 வரையிலும் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரம் அடைவதால் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வந்து நீங்கும்.
8.3.16 முதல் 19.5.16 வரை பூர நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால், வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். மனைவிக்கு நெஞ்சு வலி, முழங்கால் வலி வந்து போகும்.
வியாபாரிகள் மாறுபட்ட அணுகு முறையால் சாதிப்பார்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளை விளம்பர யுக்தி களால் விற்றுத் தீர்ப்பீர்கள். உணவு, தங்கும் விடுதி, கமிஷன், பவர் ப்ராஜெக்ட், துணி வகைகளால் லாபம் உண்டு. பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் தேடி வருவார்கள். உங்கள் கருத்துக்கு ஆதரவு தரும் புதிய பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வீர்கள். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.    
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச் சுமைகள் குறையும். அலுவலகத்தில் உங்களின் கை ஓங்கும். உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப் படுவார். புதிதாக வந்து சேரும் அதிகாரி, உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார். உங்கள் மீதான அவதூறு வழக்கு, வீண் பழிகளில் இருந்து விடுபடுவீர்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் இனி தடையின்றி கிடைக்கும். இந்த ராசியைச் சேர்ந்த அன்பர்களில் சிலர், உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவார்கள்.
கன்னிப்பெண்களுக்கு நல்ல வரன் அமையும். தகுதிக்கேற்ற நல்ல வேலையும் கிடைக்கும். தாயாருடன் இருந்துவந்த கருத்து மோதல்கள் யாவும் விலகும்.
மாணவ  மாணவிகள், கடினமான பாடங்களிலும் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவார்கள். கட்டுரை, பேச்சுப் போட்டிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பரிசு, பாராட்டுகள் கிடைக்கும். இந்த ராசியைச் சேர்ந்த கலைத் துறையினர், மக்கள் மத்தியில் பிரபலமாவார்கள். படைப்புகளால் அவர்களுக்கு புகழ் சேரும்.
ஒட்டுமொத்தத்தில், இந்த குருப்பெயர்ச்சி தாழ்வு மனப் பான்மையில் இருந்தும், சோகத்தில் இருந்தும் உங்களை விடுவிப்பதுடன், மகிழ்ச்சி, பண வரவு, செல்வாக்கு ஆகியவற்றை அள்ளித் தருவதாக அமையும்.
பரிகாரம்:
பிரதோஷ நாட்களில், மதுரை மாவட்டம் திருவாதவூருக்குச் சென்று, ஸ்ரீ ஆரணவல்லி உடனுறை ஸ்ரீ திருமறைநாதரை அருகம்புல், வில்வ இலை, இளநீர் ஆகியவற்றைச் சமர்ப்பித்து வழிபடுங்கள். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள்; நினைத்தது நிறைவேறும்.

அடிமனதில் ஆயிரம் திட்டங்களை கொண்டிருப்பவர் நீங்கள். குரு பகவான் இப்போது 5.7.15 முதல் 1.8.16 வரை 4வது வீட்டில் அமர்கிறார். உங்கள் அஷ்டமாதிபதியும் லாபாதி பதியுமான குரு 4ல் அமர்வதால், உங்களின் அடிப்படை நற்குணங்கள் மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். செலவும், வேலைச் சுமையும் அதிகரிக்கும்.
வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி சற்று தாமதமாக கிடைக்கும்.திருமணம், கிரகப் பிரவேசத்தை போராடி முடிக்க வேண்டி வரும்.அரசாங்க அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டவேண்டாம். தம்பதிக்கு இடையே வீண் சச்சரவுகள் ஏற்படலாம். அனுசரித்து போகவும். சொத்து ஆவணங்கள் தொலைந்துபோகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
குரு 5ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்று நபர்களால் ஆதாயம் உண்டு. 10ம் வீட்டை குரு 7ம் பார்வையால் பார்ப்பதால் உத்தியோகத்தில் பிரச்னை கள் குறையும். சிலருக்கு புது வேலை,  கௌரவ பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குருபகவான் தனது 9ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12ம் வீட்டை குரு பார்ப்பதால், சுபச் செலவுகள் அதிகமாகும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.15 முதல் 6.9.15 வரை குரு கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால், இக்காலக்கட்டத்தில் செலவுகள் உண்டு. சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். 7.9.15 முதல் 16.11.15 மற்றும் 20.5.16 முதல் 9.7.16 வரை உங்கள் ராசி நாதனும், சஷ்டமாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், ஓரளவு பணம் வரும். சிலர் புது வாகனம் வாங்குவீர். திருமணம் கூடி வரும்.
17.11.15 முதல் 20.12.15 வரை மற்றும் 10.7.16 முதல் 1.8.16 வரை குரு உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதத்தில் செல்வதால், எதிர்ப்புகள் குறையும். தாயாருடன் வீண் விவாதங்கள் ஏற்படும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். தாய்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். மற்றவர்களுக்காக ஜாமீன் கையொப்பமிட வேண்டாம்.
21.12.15 முதல் 19.1.16 வரை உத்திரம் 2ம் பாதம், கன்னி ராசியில் செல்வதால், மன இறுக்கம் குறையும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். உறவினர்களுடனான மோதல்கள் விலகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:
20.1.16 முதல் 6.2.16 வரை குரு உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் ஓரளவு பணவரவு உண்டு. தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள்.
7.2.16 முதல் 7.3.16 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் மறைமுக எதிரி களால் ஆதாயம் அடைவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வங்கிக்கடன் உதவியும் கிடைக்கும். வழக்கு நெருக்கடிகள் நீங்கும். புது வேலைக்கான முயற்சி பலன் தரும்.
8.3.16 முதல் 19.5.16 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால், தள்ளிப்போன காரியங்கள் முடிவடையும். கணவன்மனைவிக்குள் பனிப்போர் நீங்கும். அதிக வட்டிக் கடனை பைசல் செய்ய குறைந்த வட்டிக்குக் கடன் வாங்குவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். இந்த கால கட்டத்தில், இந்த ராசியைச் சேர்ந்த சில அன்பர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
வியாபாரிகள், தொழிலை விரிவுப் படுத்த கடன் வாங்க வேண்டாம். வணிக விஷயங்களில் கறார் தேவை. பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம், கூட்டுத் தொழில் துவங்குவது ஆகியவற்றுக்குமுன் வழக்கறிஞரை ஆலோசிக்கவும். ஹோட்டல், கெமிக்கல், எண்ணெய், மூலிகை, கமிஷன் வகைகளால் ஆதாயம் உண்டு.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடும். தலைமை அதிகாரிகள் உங்களைப் பற்றி நன்கு புரிந்துவைத்திருந்தாலும், நேரடி அதிகாரி, உங்களை குறை கூறிக்கொண்டு இருப்பார். பதவி, சம்பள உயர்வுகள் சற்று தாமதமாகவே கிடைக்கும். இடமாறுதலும் ஏற்படலாம். சிலருக்கு, அயல் நாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். குரு 10ம் வீட்டை பார்ப்பதால் சவால்களைச் சமாளிப்பீர்கள்.
கன்னிப்பெண்களுக்கு மனதுக்குப் பிடித்த மணாளன் அமைவார். வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாணவர்கள் வகுப்பறையில் வீண் அரட்டை அடிக்காமல் பாடத்தில் கவனம் செலுத்துங்கள். விரும்பிய பாடப்பிரிவில் சேர கொஞ்சம் போராட வேண்டியிருக்கும்.கலைத் துறையினர், வேற்று மொழி படைப்புகளால் புகழ் பெறுவார்கள். எனினும், உங்களைப் பற்றி வீண் வதந்திகளும் வந்துசேரும்; மனம் தளரவேண்டாம்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி இடமாற்றத்தையும் பணப் பற்றாக்குறையையும் தந்தாலும், உங்களுக்கு வாழ்வின் நெளிவுசுளிவுக்ளைக் கற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: ஏகாதசி திதி நடைபெறும் நாளில் திண்டுக்கல் அருகிலுள்ள வேடசந்தூர் சென்று, அங்கு அருளும் ஸ்ரீ நரசிம்மருக்கு துளசி மாலை சமர்ப்பித்து வணங்குங்கள். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்; எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

தன்மானம் மிகுந்தவர் நீங்கள். குரு பகவான் 5.7.15 முதல் 1.8.16 வரை உங்கள் ராசிக்கு தைரியஸ்தானமான 3வது வீட்டில் அமர்கிறார். எனவே, மற்றவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிலும் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். பண விஷயத் தில் கவனம் தேவை. இளைய சகோதர ருடன் உரசல் போக்கு வந்து நீங்கும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற் கவேண்டாம். சொத்து வாங்கும்போது பட்டா, வில்லங்கச் சான்றிதழ், தாய் பத்திரத்தை சரிபார்க்கவும்.
உங்களின் 7ம் வீட்டை குரு தனது 5ம் பார்வையால் பார்ப்பதால், உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் அமையும். தம்பதிக்கு இடையே சிறு சிறு பிரச்னைகள் வந்தாலும் அந்நியோன்யம் குறையாது.
கடனில் ஒரு பகுதியை பைசல் செய்யும் அளவுக்கு வருமானம் உயரும். திருமணம் தடைப்பட்ட அன்பர்களுக்கு விரைவில் கூடி வரும்.
குரு 7ம் பார்வையால் உங்களின் 9ம் வீட்டைப் பார்ப்பதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகளும் கிடைக்கும். தந்தையின் நோய் குணமாகும். சுப நிகழ்வுகளால் வீடு களைகட்டும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். உங்களது லாப வீடான 11வது வீட்டை குரு தனது 9ம் பார்வையால் பார்ப்பதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். ஷேர் மூலமாக பணம் வந்து சேரும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.15 முதல் 6.9.15 வரை குரு கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால், இக்காலக்கட்டத்தில் பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பணம் வந்தாலும் செலவுகளும் துரத்தும்.
7.9.15 முதல் 16.11.15 வரை மற்றும் 20.5.16 முதல் 9.7.16 வரை உங்களின் பிரபல யோகாதிபதியும்பூர்வ புண்யாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், முன்கோபம் குறையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு, வாகன வசதிகள் பெருகும். எதிர்பார்த்து ஏமார்ந்த பணம் கைக்கு வரும். பெற்றோருடனான மனஸ்தாபங்கள் நீங்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.          
17.11.15 முதல் 20.12.15 வரை மற்றும் 10.7.16 முதல் 1.8.16 வரை குரு உங்கள் சேவகாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால், நெருக்கடிகளை சமாளிக்கும் சக்தி உண்டாகும். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. 21.12.15 முதல் 19.1.16 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் குரு செல்வதால் தாயாரின் உடல்நிலை சற்று பாதிப்பு அடையலாம். தாய்வழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் உண்டு.
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:
20.1.16 முதல் 6.2.16 வரை குரு உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால், பணப்பற்றாக்குறையை மிக சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும்.
7.2.16 முதல் 7.3.16 வரை உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரம் அடைவதால், அரசு காரியங்கள் இழுபறியாகும்.
8.3.16 முதல் 19.5.16 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால், வாகனத்தில் செல்லும் போது அதீத கவனம் தேவை. ஓரளவு பண வரவு உண்டு. முன்னேற்றம் தடைப்படாது.  
வியாபாரிகளுக்கு, தொழில் ஏற்றமும் இறக்கமுமாக இருக்கும். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிக்க வேண்டியது இருக்கும். வேற்று மாநில ஆட்களை பணியில் அமர்த்தும்போது கவனம் தேவை. ஹோட்டல், லாட்ஜ், வாகன உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி, கமிஷன் வகைகளால் லாபம் உண்டு. கூட்டுத் தொழிலில் விட்டுக் கொடுத்துப் போவது அவசியம்.
உத்தியோகஸ்தர்கள், எவரொருவர் வற்புறுத்தினாலும் நீங்கள் நேர்பாதையில் செல்வது அவசியம். மேலதிகாரிகளால் ஒதுக்கப்படுகிறோமோ என்ற சந்தேகம் உள்ளுக்குள் இருந்து கொண்டேயிருக்கும். வேலைச் சுமை, எதிர்பாராத இடமாற்றம் உண்டு. புதிய வாய்ப்புகள் வந்தால் தீர யோசித்து முடிவெடுங்கள். புதிய சலுகைகளும், சம்பள உயர்வும் உண்டு.
கன்னிப்பெண்கள், பாரம்பரிய உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். தடைப்பட்ட திருமணம் கைகூடி வரும். ஃபேஸ் புக், இமெயிலை எல்லாம் கவனமாகப் பயன் படுத்துங்கள். புதிய வேலையில் இணையும்போது மிகக் கவனமுடன் பணியாற்றுங்கள்.
மாணவர்கள், பாடங்களை சேர்த்துவைத்து படிக்கலாம் என்று எண்ணாமல், அன்றைய பாடங்களை அன்றைக்கே படித்து விடுவது நல்லது. கலைத் துறையினர், பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமால், கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சக கலைஞர்களால் போட்டிகள் அதிகரிக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, சில தருணங்களில் உங்களை புலம்பவைக்கும். என்றாலும், விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் வெற்றிபெற வைப்பதாக அமையும்.
பரிகாரம்: சஷ்டி திதி நடைபெறும் நாளில் திருத்தணிக்குச் சென்று ஸ்ரீ தணிகைவேலனான முருகப் பெருமானுக்கு மறிக்கொழுந்து அல்லது முல்லைப் பூ சமர்ப்பித்து வணங்குங்கள். நடக்க இயலாதவர்களுக்கு உதவுங்கள்; தடைகள் நீங்கி சாதிப்பீர்கள்.

எதிர்ப்புகளுக்கு அஞ்சாத உங்களுடைய ராசியில் ஜன்ம குருவாக இருந்து உங்களைப் பாடாய்ப்படுத்திய குருபகவான், 5.7.15 முதல் 1.8.16 வரை உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2ம் வீட்டில் அமர்வதால், சோர்வு நீங்கி உற்சாகம் பெருகும். பணவரவு கூடும். இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும்.  பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். வங்கியில் அடகு வைத்திருந்த நகை, வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள்.
குரு பகவான் தனது 5ம் பார்வையால் ஆறாவது வீட்டைப் பார்ப்பதால், கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உங்களது எட்டாவது வீட்டை குரு தனது 7ம் பார்வையால் பார்ப்பதால், கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடிவடையும். குருபகவான் தனது 9ம் பார்வையால் உங்களது பத்தாவது வீட்டைப் பார்ப்பதால், வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன் அமையும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.15 முதல் 6.9.15 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால், திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். புது முதலீடுகள் செய்து சொந்தமாகத் தொழில் தொடங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும்.
7.9.15 முதல் 16.11.15 வரை மற்றும் 20.5.16 முதல் 9.7.16 வரை உங்களின் சுகாதிபதியும்லாபாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், தாயாரின் ஆரோக்கியம் சிறக்கும். தாய்வழி சொத்துக்கள் கைக்கு வரும்.
17.11.15 முதல் 20.12.15 வரை மற்றும் 10.7.16 முதல் 1.8.16 வரை குருபகவான் உங்கள் தனாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால், எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு.  
21.12.15 முதல் 19.1.16 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால், இனம்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும்.
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:
20.1.16 முதல் 6.2.16 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால், இக்காலக்கட்டத்தில் அரசால் அனுகூலம் உண்டு. சொத்து சேர்க்கை உண்டாகும்.
7.2.16 முதல் 7.3.16 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால், அரசாங்கத் தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு.  
8.3.16 முதல் 19.5.16 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால், வீண் அலைச்சல், தர்ம சங்கடமான சூழ்நிலைகள், தாயாருக்கு உடல்நலக்குறைவு வந்து போகும்.
வியாபாரிகளே! உங்களுக்கு லாபம் கூடும்.  தேங்கிக் கிடந்த சரக்குகளை புதிய சலுகைகளை அறிவித்து விற்றுத் தீர்ப்பீர்கள். கடையை பிரபலமான இடத்துக்கு மாற்றுவது, விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். வேலையாட்கள் இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். வியாபாரத்தில் பிரச்னை ஏற்படுத்திய பங்குதாரர்கள் விலகி, புதிய பங்குதாரர்கள் சேருவார்கள். முக்கிய பிரமுகர்கள் உங்களுடைய வாடிக்கையாளர்கள் ஆவர். கெமிக்கல், கல்வி நிறுவனங்கள், துரித உணவகம், கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களே! மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்த்து இரவு பகலாக உழைத்தும் பலன் இல்லாத நிலை இனி மாறும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். உங்களைக் குறை கூறிக் கொண்டிருந்த உயரதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு உங்களை மதிக்கும் புது அதிகாரி அமைவார். ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு, புது வாய்ப்புகளெல்லாம் இனி கிடைக்கும். பதவி உயர்விற்காக தேர்வெழுதி காத்திருந்தவர்களுக்கு இனி பதவி உயர்வு தடையின்றி கிட்டும். பணியும் நிரந்தரமாகும்.
மாணவமாணவிகளே! நினைவாற்றல் கூடும். சக மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்குமளவிற்கு வகுப்பறையில் மதிப்பு கூடும். ஆசிரியர் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள். விளையாட்டில் பதக்கம் வெல்வீர்கள்.
கலைத்துறையினரே! உங்களின் படைப்புகள் பட்டிதொட்டியெங்கும் பாராட்டிப் பேசப்படும்.  
இந்த குரு மாற்றம் திசை தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த உங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதுடன், புது பாதையையும் வகுத்துத் தந்து எதையும் சாதிக்க வைப்பதாக அமையும்.
பரிகாரம்: பௌர்ணமி தினங்களில், மாயவரம்-பேரளம் அருகிலுள்ள திருமீயச்சூருக்குச் சென்று, லலிதாம்பிகைக்கு மல்லிகைப்பூ சமர்ப்பித்து வணங்குங்கள். மன வளம் குன்றியவர்களுக்கு உதவுங்கள். மேலும் சாதிப்பீர்கள்.

காலத்தால் அழியாத காரி யங்களைச் செய்வதில் வல்லவர்களான உங்கள் ராசிக்கு 12வதுவீட்டில் மறைந்திருந்து, உங்களை நிம்மதி யில்லாமல் அலைக்கழித்த குருபகவான் 5.7.15 முதல் 1.8.16 வரை உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்ம குருவாகத் தொடர இருப் பதால், பொறுப்புகளும், வேலைச் சுமையும் அதிகரிக்கத்தான் செய்யும். சில நேரங்களில் பெரிய நோய்கள் இருப்பது போன்ற பயம் வந்துபோகும். கணவன்மனைவிக்குள் ஈகோப் பிரச்னையால் பிரிவு வரக் கூடும். வேலைச்சுமையால் உடல் அசதி, சோர்வு வந்து போகும்.
குருபகவான் தனது 5ம் பார்வையால் உங்களின் 5ம் வீட்டைப் பார்ப்பதால், பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். பூர்வீக சொத்துப் பங்கு கைக்கு வரும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7ம் வீட்டைப் பார்ப்பதால், இழுபறியான வேலைகள் உடனே முடியும். ஜென்ம குருவால் கணவன்மனைவிக்குள் சின்னச் சின்ன விவாதங்கள் வந்தாலும், குருவின் பார்வையால் அன்பு குறையாது.
பாக்ய வீடான 9ம் வீட்டின் மீது குருபகவானின் பார்வை விழுவதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். தந்தையாரின் உடல்நிலை சீராகும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.15 முதல் 6.9.15 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால், மகம் நட்சத்திரக்காரர்களுக்கு மஞ்சள் காமாலை, சோர்வு வந்து நீங்கும். வீண்பழி, குடும்பத்தின் மீது பற்றின்மை வந்து போகும். பூரம், உத்திரம் 1ம் பாதம் நட்சத்திரக்காரர்களுக்கு ஓரளவு நற்பலன்கள் உண்டாகும்.
7.9.15 முதல் 16.11.15 வரை மற்றும் 20.5.16 முதல் 9.7.16 வரை சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை, பொருள் இழப்புகள், வீண் அலைச்சல் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள், இளைய சகோதர வகையில் சச்சரவுகள் வரக்கூடும். மகம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகள் பலிதமாகும்.  
17.11.15 முதல் 20.12.15 வரை மற்றும் 10.7.16 முதல் 1.8.16 வரை குருபகவான் உங்கள் ராசிநாதன் சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதத்தில் செல்வதால், அடிவயிற்றில் வலி, மனைவிக்கு ஆரோக்கியக் குறைவு, வந்து செல்லும். இக்காலக்கட்டத்தில் மகம், பூரம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஏமாற்றங்கள் குறையும்.
21.12.15 முதல் 19.1.16 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால், திடீர் யோகம், பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:
20.1.16 முதல் 6.2.16 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால், பணப்பற்றாக்குறையைச் சமாளிப்பீர்கள்.  
7.2.16 முதல் 7.3.16 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் உங்கள் ராசியிலேயே குரு வக்ரமடைவதால், பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
8.3.16 முதல் 19.5.16 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால், பிரபலங்களின் உதவியுடன் தள்ளிப் போன காரியங்களை விரைந்து முடிப்பீர்கள்.
வியாபாரிகளே! தொடர்ந்து லாபம் பெற முடியவில்லையே என்ற கவலை இருக்கும். புது முதலீடுகளோ, முயற்சிகளோ வேண்டாம். பல நேரங்களில் நீங்களே முதலாளி, நீங்களே தொழிலாளி என்ற வகையில் வேலை பார்க்க வேண்டி வரும்.  ரியல் எஸ்டேட், ஏற்றுமதிஇறக்குமதி, கமிஷன் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களே! ஓய்வெடுக்க முடியாதபடி எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய வேண்டி வரும். உங்களிடம் ஆலோசனைக் கேட்டுவிட்டு அதைத் தாங்கள் யோசித்ததாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் நல்ல பெயர் வாங்கிக் கொள்வார்கள். வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற அச்சம் தினந்தோறும் எழும்.
மாணவமாணவிகளே! பொழுதுபோக்குகளில் மனதைச் செலுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்தினால்தான், தேர்வுகளில் வெற்றி பெறமுடியும். சந்தேகங்களைத் தயங்காமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள்.
கலைத்துறையினரே! உங்களுக்கு எதிராக விமர்சனங்கள் வந்த வண்ணம்தான் இருக்கும். அதைப் பொருட்படுத்த வேண்டாம். பழைய சம்பள பாக்கி கைக்கு வரும்.
மொத்தத்தில் இந்த குரு மாற்றம் உங்களை சூழ்நிலைக் கைதியாக மாற்றினாலும் அனுபவ அறிவாலும், விடாமுயற்சியாலும் இலக்கை எட்டிப்பிடிக்க வைக்கும்.

பரிகாரம்: அமாவாசை தினங்களில், தஞ்சை - கண்டீயூருக்கு அருகிலுள்ள திருவேதிக்குடிக்குச் சென்று, ஸ்ரீ மங்கையர்க்கரசி உடனுறை ஸ்ரீ வேதபுரீஸ்வரரை, வில்வத்தால் அர்சித்து வணங்குங்கள். இதய நோயாளிகளுக்கு உதவுங்கள்; வாழ்க்கை சிறக்கும்.
விலகும். 

எதிலும் நேர்மறையாகச் சிந்திக்கும் உங்களுடைய ராசிக்கு லாப வீட்டில் இருந்து நற்பலன்களைத் தந்த  குரு பகவான், 5.7.15 முதல் 1.8.16 வரை விரைய வீடான 12ம் வீட்டில் அமர் வதால், உங்கள் முன்னேற்றம் பெரி தாகத் தடைப்படாது. திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் எனத் தொடர்ந்து சுபச் செலவுகளும் வந்த வண்ணம் இருக்கும். குடும்ப வருமா னத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டி வரும்.
நீண்ட நாளாகப் போகவேண்டும் என்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். எந்த ஒரு வேலையையும் நீங்களே நேரடியாகச் செய்வது  நல்லது. சில நாட்களில் தூக்கம் குறையும்.
குரு பகவான் தனது 5ம் பார்வை யால் உங்கள் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால், தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அரசாங்க அனுமதி கிடைத்து சிலர் வீடு கட்டத் தொடங்குவீர்கள். விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்குவீர்கள்.
உங்களது 6ம் வீட்டை குரு தனது 7ம் பார்வையால் பார்ப்பதால், எதிரிகள் ஒதுங்கிப் போவார்கள். சமயங்களில் அவர்களால் ஆதாயமும் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி இப்போது கிடைக்கும்.
குரு தனது 9ம் பார்வையால் 8ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சகோதரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.15 முதல் 6.9.15 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால், இக்காலக்கட்டத்தில் வீண் சந்தேகம், மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
7.9.15 முதல் 16.11.15 வரை மற்றும் 20.5.16 முதல் 9.7.16 வரை, சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், இக்காலக்கட்டத்தில் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.
17.11.15 முதல் 20.12.15 வரை மற்றும் 10.7.16 முதல் 1.8.16 வரை சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால், அறிவுப்பூர்வமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.
21.12.15 முதல் 19.1.16 வரை உத்திரம் 2ம் பாதம் உங்கள் ராசிக்குள் பிரவேசிப்பதால்,  வேலைச் சுமை இருந்துக் கொண்டே இருக்கும். படபடப்பு, வீண் பிடிவாதம், வயிற்றுக் கோளாறு வந்து நீங்கும்.    
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
20.1.16 முதல் 6.2.16 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் உங்கள் ராசியில் வக்ர கதியில் செல்வதால், ஆரோக்கியம் சீராகும். மனஇறுக்கங்கள் விலகும்.  
7.2.16 முதல் 7.3.16 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால், பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.          
8.3.16 முதல் 19.5.16 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ரகதியில் செல்வதால், கணவன்மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். எலெக்ட்ரானிக்ஸ் சாதங்கள் பழுதாகும். புதியவர்களால் பணவரவு உண்டு.
வியாபாரிகளே! விளம்பர யுக்திகளாலும், தள்ளுபடி அறிவிப்பாலும் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். கடன் வாங்கி புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். டிராவல்ஸ், மருந்து, உரம், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் வகைகளால் லாபமடைவீர்கள். வேற்று மாநிலம், வெளிநாட்டில் இருப்பவர்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களே! மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தந்தாலும் இரண்டாம் கட்ட அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். பல வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாலும், உங்களை குறை கூறத்தான் செய்வார்கள். ஆனாலும், சம்பள உயர்வு உண்டு.  
மாணவமாணவிகளே! கஷ்டப்பட்டு படித்தால்தான் தேர்வுகளில் வெற்றி பெறமுடியும். குறிப்பாகக் கணிதம் அறிவியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும். உங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்த கிடைக்கக்கூடிய நல்ல வாய்ப்புகளைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவும்.
கலைத்துறையினரே! வீண் வதந்திகள், கிசுகிசுக்கள் என மன உளைச்சலுக்கு ஆளான நிலை மாறி நிம்மதி பிறக்கும். நல்ல வாய்ப்புக்கள் உங்களைத் தேடிவரும்.
இந்த குரு மாற்றம் ஒரு பக்கம் பயணங்களையும், தவிர்க்கமுடியாத  செலவுகளையும் தந்தாலும் மற்றொரு பக்கம் வசதி வாய்ப்புக்களையும் அள்ளித் தரும்.
பரிகாரம்: உத்திரட்டாதி நட்சத்திரம் அல்லது பெளர்ணமி திதி நாளில் செங்கல்பட்டு அருகிலுள்ள திருமலைவையாவூர் ஸ்ரீ பிரசன்னவெங்கடேச பெருமாளை வழிபட்டு வாருங்கள். முதியோருக்கு உதவி செய்யுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.

இதயத்தில் இருப்பதை மறைக் காமல் பேசும் இயல்பு கொண்ட உங்களுக்கு இதுவரை 10ம் இடத்தில் இருந்து பலவகைகளிலும் பாடாய்ப்படுத்திய குருபகவான், 5.7.15 முதல் 1.8.16 வரைஉங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11ம் வீட்டில் அமர்வதால், பட்டுப் போன மரம் மீண்டும் துளிர்ப்பது போல இனி தொட்ட காரியங்கள் துலங்கும். குடும்ப வருமானம் உயரும். கணவன்மனைவியிடையே ஒற்றுமை நிலவும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையெல்லாம் ஒருவழியாகத் தந்து முடிப்பீர்கள். மூத்த சகோதரர்கள் உதவுவர்கள்.  எதிர்ப்புகள் குறையும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள்.
உங்களுடைய 3ம் வீட்டை குரு பார்ப்பதால், சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வழக்கு சாதகமாகும். எதிர்பாராத பணவரவு உண்டு. சிலர் சொந்தமாகத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும்.  
குரு 5ம் வீட்டைப் பார்ப்பதால், உங்களுடைய அடிப்படை வசதிகள் பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலையும் கிடைக்கும். குரு தனது 9ம் பார்வையால் உங்களின் 7ம் வீட்டைப் பார்ப்பதால், விலை உயர்ந்த ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சோர்வு, சலிப்பு நீங்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு பெருகும்.    
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.15 முதல் 6.9.15 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால், இக்காலக்கட்டத்தில் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பணப்பற்றாக்குறை தீரும்.
7.9.15 முதல் 16.11.15 வரை மற்றும் 20.5.16 முதல் 9.7.16 வரை சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், இக்காலக்கட்டத்தில் திடீர் பணவரவு உண்டு. மனைவி வழியில் உதவி உண்டு.
17.11.15 முதல் 20.12.15 வரை மற்றும் 10.7.16 முதல் 1.8.16 வரை குருபகவான், சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால், எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். அந்தஸ்து உயரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.
21.12.15 முதல் 19.1.16 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால், திடீர்ப் பயணங்கள் உண்டு. உறவினர், நண்பர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அவ்வப்போது தூக்கம் குறையும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:
20.1.16 முதல் 6.2.16 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால், பல வேலை களையும் முழு மூச்சுடன் முடிப்பீர்கள். உற்றார், உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
7.2.16 முதல் 7.3.16 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால், அடிவயிற்றில் வலி, வேலைச்சுமை, வந்து செல்லும்.
8.3.16 முதல் 19.5.16 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால், எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். ஆரோக்கியம் சீராகும். கணவன்மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும்.
வியாபாரிகளே! பற்று வரவு உயரும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனைகளையும் புரிந்துக் கொண்டு சலுகைத் திட்டங்களை அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள். வர்த்தகர்கள் சங்கம், இயக்கம் இவற்றில் புதிய பொறுப்புகள், பதவிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கண்ணாடி, அழகு சாதனப் பொருட்கள், ஹோட்டல், ஹார்டுவேர்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள்.          
உத்தியோகஸ்தர்களே! உத்தியோகத்தில் இனி உங்கள் கை ஓங்கும். தடைப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள்.
மாணவமாணவிகளே! படிப்பிலிருந்த மந்த நிலை மாறி அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.
கலைத்துறையினரே! உங்கள் திறமைக்கேற்ற வாய்ப்புக்கள் கிடைக்கும். பணவரவும் அதிகரிக்கும்.
இந்த குரு மாற்றம் அடிமட்டத்தில் இருந்த உங்களை மலையென உயர்த்துவதுடன், சாதனைப் பட்டியலிலும் இடம்பெற வைக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் திருநெல்வேலி - புன்னைக் காயல் வழித்தடத்திலுள்ள சேர்ந்தபூமங்கலம் சென்று,ஸ்ரீ சிவகாமி அம்மன் உடனுறை கயிலாயநாதரை தும்பைப் பூ அல்லது மல்லிகை மாலை அணிவித்து வணங்குங்கள்.   பார்வை இல்லாதவர்களுக்கு உதவுங்கள்; வெற்றி பெறுவீர்கள்.

ஒரே நேரத்தில் பல வேலைகளை பார்க்கும் அசாத்திய திறமை கொண்ட உங்களுடைய ராசிக்கு இதுவரை 9வது வீட்டில் இருந்த குருபகவான் 5.7.15 முதல் 1.8.16 வரை உங்கள்  ராசிக்கு 10ம் இடத்துக்கு மாறுகிறார். ஆனாலும், பதற்றம் வேண்டாம்.உங்கள் யோகாதிபதியான சூரியனின் வீட்டில் குரு அமர்வதால், உங்களுக்கு கெடுபலன்கள் பெருமளவு குறையும். பிரச்னைகளைச் சமாளிக்கும் சக்தி உண்டாகும். வெளிநாட்டில் சிலருக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் சின்னச் சின்ன சலசலப்புகள் வரும்.  
ஒரேநாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். கௌரவத்தை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் அவ்வப்போது தலை தூக்கும். வழக்கு சம்பந்தமான விஷ யங்களில் பின்னடைவு ஏற்படும். உள்மனது சிலவற்றை அறிவுறுத்தியும் அதைச் சரியாக பின்பற்றாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் வருத்தப் படுவீர்கள். தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும்.
உங்கள் ராசிக்கு 2ம் வீடான வாக்கு ஸ்தானத்தை குரு பார்ப்பதால், எதிர்பார்த்திருந்த பணம் கிடைக்கும். சிறிதளவு பணம் சேமிக்கவும் முடியும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிதாக வண்டி வாங்குவீர்கள்.
குருபகவான் தனது 7ம் பார்வையால் சுக ஸ்தா னத்தைப் பார்ப்பதால், தாயாரின் உடல் நலம் சீராகும். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.  
உங்களின் 6ம் வீட்டை குரு தனது 9ம் பார்வையால் பார்ப்பதால், எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.15 முதல் 6.9.15 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால், இக்காலக்கட்டத்தில் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர்கள், திருப்பித் தருவார்கள். வாழ்வின் முன்னேற்றத்துக்குக் காரணமானவர்களைச் சந்திப்பீர்கள்.  
7.9.15 முதல் 16.11.15 வரை மற்றும் 20.5.16 முதல் 9.7.16 வரை, சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், திடீர்ப் பயணங்கள், செலவினங்கள் உண்டு. மனைவியின் ஆரோக்கியமும் பாதிக்கும்.
17.11.15 முதல் 20.12.15 வரை மற்றும் 10.7.16 முதல் 1.8.16 வரை குருபகவான் சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால், உங்களின் மதிப்பு, மரியாதை கூடும். அரசு காரியங்கள் உடனே முடியும். புது வேலை கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
21.12.15 முதல் 19.1.16 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால், கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தடைப்பட்டு வந்த காரியங்களெல்லாம் முடிவடையும்.        
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:
20.1.16 முதல் 6.2.16 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால், பணவரவு அதிகரிக்கும். அரசால் ஆதாயம் உண்டு. நண்பர்கள் உதவுவார்கள்.
7.2.16 முதல் 7.3.16 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால், ஓய்வெடுக்க முடியாதபடி வேலைகளும், அலைச்சலும் இருக்கும். எதிர்ப்புகள் அடங்கும்.
8.3.16 முதல் 19.5.16 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால், சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியிலான சொத்துகள் கைக்கு வரும்.  
வியாபாரிகளே! சந்தை நிலவரங்களை அவ்வப்போது அறிந்து முதலீடு செய்யவும். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிக்க வேண்டி வரும். வேலையாட்களால் பிரச்னைகள் வரும். மின்னணு, மின்சார சாதனங்கள், மளிகை, ஸ்டேஷனரி மற்றும் துணி வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களே! கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டி வரும். சூழ்நிலையறிந்து அதற்கேற்ப உங்களுடைய கருத்துக்களை மேலதிகாரிகளிடம் பதிவு செய்வது நல்லது. உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்த வாய்ப்பிருக்கிறது. பதவி உயர்வுக்காகப் போராட வேண்டி வரும்.  மாணவமாணவிகளே! படிப்பில் கவனம் தேவை. குறிப்பாக வேதியியல், உயிரியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
கலைத் துறையினரே! விமர்சனங்கள் வந்தாலும் முன்னேற்றம் தடைப்படாது. பழைய சம்பள பாக்கி கைக்கு வரும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, அவ்வப்போது ஏமாற்றங்களையும், இழப்புகளையும் தந்தாலும், சமயோசித புத்தியாலும் கடின உழைப்பாலும் வெற்றிபெற வைக்கும்.
பரிகாரம்: கார்த்திகை நட்சத்திர நாட்களில், மருதமலைக்குச் சென்று, ஸ்ரீ முருகப்பெருமானுக்கு 
நெய்தீபம் ஏற்றி வைத்து, வணங்கி வழிபட்டு வாருங்கள். ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு பொருளுதவி செய்யுங்கள்; மகிழ்ச்சி தங்கும்.

மனிதநேயம் கொண்ட உங்க ளுடைய ராசிக்கு, இதுவரை 8ம் இடத்தில் இருந்து, பலவகைகளிலும் கஷ்டங்களைத் தந்த குருபகவான், 5.7.15 முதல் 1.8.16 வரை உங்கள் ராசிக்கு பாக்கியஸ்தானமான 9ம் வீட்டில் நுழைவதால், புதிய வியூகங்களை அமைத்து வாழ்வில் முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் யாவும் வெற்றியடையும். தொலை நோக்குச் சிந்தனை அதிகரிக்கும். தோல்வி மனப்பான்மையில் இருந்தும், எதிர்மறை எண்ணங்களில் இருந்தும் விடுபடுவீர்கள்.
வெகுநாட்களாக தடைபட்டுக் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள்  நல்ல விதமாய் நடந்தேறும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். உங்கள் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். தெய்வ பிரார்த் தனைகளை நிறைவேற்றுவீர்கள்.  
குருபகவான் தனது 5ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால், சோர்வு களைப்பு நீங்கும். உற்சாகம் பிறக்கும். வருமானம் கூடும். குடும்பத்திலும் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உத்தியோகம் அமையும்.
உங்கள் ராசிக்கு 3ம் வீட்டை குரு தனது 7ம் பார்வையால் பார்ப்பதால், புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். இளைய சகோதர வகையில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். திருமணம் தள்ளிப்போனவர் களுக்குத் திருமணம் கூடி வரும்.
குரு தனது 9ம் பார்வையால் உங்களின் 5ம் வீட்டைப் பார்ப்பதால், குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.15 முதல் 6.9.15 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால், இக்காலக்கட்டத்தில் வேலைச்சுமை, சற்றே உடல் நலக்குறைவு வந்து நீங்கும். எதிர்பாராத சில வேலைகள் முடியும். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு மனஉளைச்சல் அதிகமாகும்.
7.9.15 முதல் 16.11.15 வரை மற்றும் 20.5.16 முதல் 9.7.16 வரை சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், உங்கள் செயலில் வேகம் கூடும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். பணப்புழக்கம் அதிமாகும். பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு தோலில் அலர்ஜி ஏற்படக்கூடும்.
17.11.15 முதல் 20.12.15 வரை மற்றும் 10.7.16 முதல் 1.8.16 வரை குருபகவான் சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால், உங்களுடைய நிர்வாகத் திறமை அதிகரிக்கும். உத்திராடம் நட்சத்திரக் காரர்களுக்குச் சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து போகும்.
21.12.15 முதல் 19.1.16 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால், காலநேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும்.
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:
20.1.16 முதல் 6.2.16 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால், அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். புது பொறுப்புகள் தேடி வரும்.
7.2.16 முதல் 7.3.16 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால், எதிர்பார்ப்புக்கள் தடையின்றி நிறைவேறும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
8.3.16 முதல் 19.5.16 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால், கணவன்மனைவிக்குள் பிரிவு, வீண் வாக்குவாதம், பணப்பற்றாக்குறை வந்து செல்லும்.  
வியாபாரிகளே!  தொழிலில் ஆர்வம் பிறக்கும். பெரிதாக முதலீடு செய்து போட்டியாளர்களை திகைக்கச் செய்வீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை நவீனமாக்குவீர் கள். பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். பெட்ரோகெமிக்கல், டிராவல்ஸ், உணவு, கட்டிட உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களே! இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பணி நிரந்தரமாகும். சம்பள உயர்வு உண்டு.
மாணவமாணவிகளே! ஆசிரியர்கள் வியக்கும்படி அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும்.  
கலைத்துறையினரே! இதுவரை இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். உங்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
ஆகமொத்தம் இந்த குருமாற்றம் உங்கள் ஆற்றலை ஒருமுகப்படுத்துவதுடன் பணவரவையும், அதிரடி முன்னேற்றங்களையும் தருவதாக அமையும். 
பரிகாரம்: அமாவாசை  அல்லது சனிக்கிழமைகளில், ஈரோடு மாவட்டம், தாராபுரத்தில் அருளும் ஸ்ரீ தேவி- ஸ்ரீ பூமா தேவி சமேத உத்திர வீரராகவப் பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து வணங்கி வாருங்கள். சாலைப் பணியாளர்களுக்கு உதவுங்கள். தொட்டது துலங்கும்.

கொண்ட கொள்கையில் உறுதி யானவர் நீங்கள். குருபகவான் 5.7.15 முதல் 1.8.16 வரை உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் மறைவதால், சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். மற்றவர்களைச் சார்ந்து இருக்காமல், உங்கள் சொந்த முயற்சியில் என்ன முடியுமோ, அதை மட்டும் செய்து முன்னேறப்பாருங்கள்.
எதிலும், அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். புதியவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். ஜாமீன் கையொப்பமிட வேண்டாம். வங்கியில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, பிறகு காசோலை தரவும். தம்பதிக்கு இடையே சிறு சிறு பிரச்னைகள் எழலாம். விட்டுக் கொடுத் துப் போகவும். வாகன லைசன்ஸ், காப்பீடு, ஆபரணங்கள் ஆகியவற்றில் கவனம் தேவை. குரு 7ம் பார்வையால் உங்களது 2ம் வீட்டைப் பார்ப்பதால், வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். குரு 9ம் பார்வையால் உங்களது சுக ஸ்தானமான 4ம் வீட்டைப் பார்ப்பதால், புது வாகனம் வாங்குவீர்கள். பழைய வீட்டை புதுப்பித்துக் கட்டுவீர்கள். தாய்மாமன் வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குரு
12ம் வீட்டைப் பார்ப்பதால், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். இழுபறியான வழக்குகள் சாதகமாகும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.15 முதல் 6.9.15 வரை குரு கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால், அலைச்சலும் பொருள் இழப்பும் இருந்தாலும் பண வரவும், முன்னேற்றமும், அரசால் ஆதாயமும் உண்டு. பதவிகள் தேடி வரும். பூர்வீகச் சொத்தில் சிக்கல் தீரும்.
7.9.15 முதல் 16.11.15 வரை மற்றும் 20.5.16 முதல் 9.7.16 வரை உங்களின் பூர்வபுண்யாதிபதியும், ஜீவனாதிபதியு மான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், வருமானம் உயரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலிதமாகும்.
17.11.15 முதல் 20.12.15 வரை மற்றும் 10.7.16 முதல் 1.8.16 வரை குரு உங்கள் அஷ்டமாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் வீண் அலைச்சல், முன்கோபம், காரியத் தடை கள் வந்துசெல்லும். நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். 21.12.15 முதல் 19.1.16 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால், எதிரிகளும் நண்பர்கள் ஆவர். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சொந்தபந்தங்கள் மத்தியில் சலசலப்புகள் நீங்கும்.
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:  
20.1.16 முதல் 6.2.16 வரை குரு உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால், உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவர். வீண் சந்தேகத்தைத் தவிருங்கள். 7.2.16 முதல் 7.3.16 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1ம் பாதம், சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால், பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் உண்டு. எந்த காரியத்தை யும் போராடி முடிக்க வேண்டி வரும்.
8.3.16 முதல் 19.5.16 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் மின்னணு, மின்சார சாதனங்களைக் கவனமாகக் கையாளுங்கள். கர்ப்பிணிகள் மருத்து வரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும்.
வியாபாரிகள், தொழிலில் லாபத்தை ஈட்டுவதற்குப் போராட வேண்டியது வரும். ஒருசிலர், புதிய இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். மறைமுகப் போட்டிகளால் லாபம் குறையும். வேலையாட்களிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம். மற்றவர்களின் பேச்சை கேட்டு அதிகளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குதாரர்களிடம் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. இரும்பு, உணவு, அழகு சாதனங்கள், ரசாயனம், மருந்து வகைகள் மூலம் லாபம் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் அதிகமாகும். அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வார்கள். மற்ற வர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். பணிகளை சற்று போராடி முடிக்க வேண்டி வரும். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள், உரிமைகளைக் கூட போராடி பெற வேண்டி வரும். உயர்மட்ட அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சிலர் உங்கள் மீது தவறாக வழக்கு தொடுப்பார்கள்.
கன்னிப்பெண்களுக்குக் கல்யாணம் கூடிவரும். பெற்றோரின் ஆலோசனையை புறக்கணிக்க வேண்டாம். மாணவமாணவிகள், கணிதம், அறிவியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கலைத் துறையினர் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள். அவர்களைக் குறித்த பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, அடுத்தடுத்த செலவுகளால் உங்களின் சேமிப்புகளைக் கரைய வைத் தாலும், புதிய பாதையில் உங்களைப் பயணிக்கவைத்து வெற்றி பெற வைப்பதாக அமையும்.
பரிகாரம்: பூச நட்சத்திரம் அல்லது வளர்பிறை மூன்றாம் நாளன்று, தூத்துக்குடி மாவட்டம் - கழுகுமலையில் அருளும் முருகப்பெருமானை விபூதி அபிஷேகம் செய்து வணங்கி வழிபடுங்கள். இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுங்கள்; மன நிம்மதி உண்டாகும்.

சமயோசித புத்தியுடன் செயல் படுபவர் நீங்கள். குரு பகவான் 5.7.15 முதல் 1.8.16 வரை உங்கள்ராசிக்கு 7ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்க்கயிருப்பதால், நீங்கள் தொட்டது துலங்கும். வழக்கு களில் சிக்கல், பணப் பற்றாக்குறை முதலான அவலங்கள் நீங்கும். தாம்பத்தியம் இனிக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். கௌரவ பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தடைப்பட்ட திருமணம், இனி நல்லவிதமாக முடியும். சிலருக் குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
குரு உங்கள் ராசியைப் பார்ப்ப தால், இயற்கை உணவு மூலமாகவே ஆரோக்கியம் கூடும்; மருந்துமாத்திரைகளுக்கு வேலை இருக்காது.தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். குரு லாப வீட்டைப் பார்ப்பதால் உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். புது வேலைக்கான முயற்சி பலிதமாகும். உங்கள் ராசிக்கு 3ம் வீட்டை குரு பார்ப்பதால், மதிப்பு உயரும். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். பழைய கடன் பிரச்னையைத் தீர்க்க புது வழி பிறக்கும். வழக்குகள் சாதகமாகும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.15 முதல் 6.9.15 வரை குரு பகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால், தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். என்றாலும் செலவுகளும் அதிகரிக்கும். எவருக்கும் சாட்சிக் கையெழுத்து போட வேண்டாம். 7.9.15 முதல் 16.11.15 வரை மற்றும் 20.5.16 முதல் 9.7.16 வரை உங்கள் சுகபாக்யாதிபதியான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், திடீர் யோகம் உண்டாகும். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தில் முதலீடு செய்வீர்கள். ரசனைக்கேற்ற வீடு, வாகனம் அமையும்.
17.11.15 முதல் 20.12.15 வரை மற்றும் 10.7.16 முதல் 1.8.16 வரை குரு உங்கள் சப்தமாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் செல் வதால், உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். கணவன்மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். மனைவிவழியில் செல்வாக்கு உயரும். புது வேலை அமையும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். 21.12.15 முதல் 19.1.16 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். பணப் பற்றாக் குறை, வீண் அலைச்சல் வந்து செல்லும்.
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:
20.1.16 முதல் 6.2.16 வரை குரு உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில், வக்ர கதியில் செல்வதால், குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். அயல்நாட்டில் இருப்பவர்களால் உதவிகள் உண்டு.
7.2.16 முதல் 7.3.16 வரை உள்ள காலகட்டத்தில், உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால், வீட்டுக் கடன் தவணையை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த முடியாத சூழல் ஏற்படலாம். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். மனைவிக்கு முதுகு வலி, தைராய்டு பிரச்னை, மாதவிடாய்க் கோளாறு வந்துசெல்லும். 8.3.16 முதல் 19.5.16 வரை பூரம் நட்சத்திரத் தில் குரு வக்ர கதியில் செல்வதால், பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு.
வியாபாரிகளுக்கு, புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. வேலையாட்கள், உங்களைப் புரிந்து செயல்படுவார்கள். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் உங்களின் வாடிக்கையாளர் களாக அறிமுகமாவார்கள். ஷேர், ஸ்பெகுலேஷன், இரும்பு, லாட்ஜிங், போர்டிங், கட்டுமான வகைகளால் லாபம் அடைவீர்கள்.
உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை குறையும். மேலதிகாரியுடனான மோதல்கள் விலகும். மூத்த அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சக ஊழியர்கள் மத்தியில் மதிக்கப்படு வீர்கள். புது பொறுப்புகள், பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். சிலருக்கு, அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
கன்னிப்பெண்கள், தடைப்பட்ட உயர்கல்வியைத் தொடர்வார்கள். நல்ல வாழ்க்கைத் துணைவர் அமைவார்.மாணவமாணவியருக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. கலைத்துறையினரே! உங்களின் யதார்த்தமான படைப்புகளால் மூத்த கலைஞர் களால் பாராட்டப்படுவீர்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, சமூகத்தில் உங்களுக்குப் பெரிய அந்தஸ்தையும், வசதி, வாய்ப்புகளை வாரித் தருவதாகவும் அமையும்.
பரிகாரம்: சுவாதி  நட்சத்திர நாள் அல்லது வியாழக் கிழமைகளில், திட்டையில் அருளும் சுகந்த குந்தளாம்பிகை உடனுறை ஸ்ரீ வசிஷ்டடேஸ்வரரை வில்வார்ச்சனை செய்து வழிபடுங்கள். சிதிலம் அடைந்த ஆலயங்களின் திருப்பணிக்கு உதவுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.

கலகலப்பானவர் நீங்கள். குரு பகவான் 5.7.15 முதல் 1.8.16 வரை உங்கள் ராசிக்கு 6வது வீட்டில்அமர்ந்து பலன் தரப்போகிறார். 'சகட குருவாச்சே... சங்கடங்களை தருவாரே' என்று கலங்காதீர்கள்; இறையருளால் எதையும் சமாளிக்கும் வல்லமை கிட்டும். பணப்பற்றக்குறை, செலவுகள், கூடுதல் உழைப்பு, நெருக்கடிகள் வந்து போகும்.
எவருக்காகவும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். குடும்பத்தில் சச்சரவு ஏற்படுத்தும் பேச்சுகளைத் தவிருங் கள். கணவன்மனைவி இருவரும் விட்டுக் கொடுத்துப் போகவும். தங்க நகைகளை இரவல் தரவோ, வாங்வோ வேண்டாம். தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாறாதீர்கள். பூர்வீகச் சொத்து விவகாரத்தில் கோர்ட், வழக்கு என்று நேரத்தை வீணடிக்கவேண்டாம்.
குரு 9ம் பார்வையால் குடும்ப ஸ்தானமான 2ம் வீட்டைப் பார்ப்ப தால், இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பண வரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். குரு 5ம் பார்வையால் ராசிக்கு 10ம் வீட்டைப் பார்ப்பதால், நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். கௌரவ பதவிகள் தேடி வரும். சொந்த ஊரில் செல்வாக்குக் கூடும். குரு 7ம் பார்வையால் உங்களின் 12ம் வீட்டைப் பார்ப்பதால், சுபச் செலவுகள் அதிகமாகும். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். தடைப்பட்டிருந்த மகளின் கல்யாணம் கைகூடி வரும். பாதியில் நிற்கும் கட்டடப் பணிகளும் பூர்த்தியாகும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.15 முதல் 6.9.15 வரை குரு கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் உங்கள் பலவீனங்களை அறிந்து மாற்றிக்கொள்வீர்கள். அலைச்சலும், செலவும் உண்டு. பயணங்களால் ஆதாயம் உண்டு. 7.9.15 முதல் 16.11.15 வரை மற்றும் 20.5.16 முதல் 9.7.16 வரை சேவகாதிபதியும்அஷ்டமாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், திடீர்ப் பயணங்களால் திணறுவீர்கள். கவலைகள் வந்து போகும். இளைய சகோதரர் வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். பழைய வீட்டை சீர் செய்வீர்கள்.
17.11.15 முதல் 20.12.15 வரை மற்றும் 10.7.16 முதல் 1.8.16 வரை குரு உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம், சிம்ம ராசியில் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். பழைய கடன் பிரச்னையை நினைத்து கலங்குவீர்கள். அரசு விவகாரங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
21.12.15 முதல் 19.01.16 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் குரு செல்வதால் உங்களின் திறமை கள் வெளிப்படும். தள்ளிப்போன அரசு காரியங்கள் விரைந்து முடியும். மனைவிவழியில் உதவிகள் உண்டு. புது வேலைக் கிடைக்கும்.
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:
20.1.16 முதல் 6.2.16 வரை குரு உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வ தால் வீண் விரயங்கள், விரக்தி, தம்பதியரிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் வந்து போகும். 7.2.16 முதல் 7.3.16 வரை உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடை வதால், இலக்கை நோக்கி முன்னேறு வீர்கள். கைமாற்றுக் கடனை அடைப்பீர் கள். 8.3.16 முதல் 19.5.16 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் கடினமான காரியங்களை யும் எளிதாக முடிப்பீர்கள். வாகனம் வாங்குவீர்கள். திருமணம் கூடி வரும். அரசால் ஆதாயம் உண்டு.
வியாபாரிகளுக்கு தொழிலில் போட்டி உண்டு. பழைய வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளுங்கள். இரும்பு, உணவு, கட்டடம், கெமிக்கல் வகைகளால் ஆதாயம் உண்டு. மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று தெரியாத துறையில் இறங்க வேண்டாம். பங்குதாரர்களால் நெருக்கடிகள் வந்து நீங்கும். அக்கம்பக்கத்து கடைக் காரர்களைப் பகைத்துக்கொள்ளாதீர்கள்.
உத்தியோகஸ்தர்கள், மற்றவர்கள் வேலையையும் சேர்த்துப் பார்க்கவேண்டியது வரும். அதிகாரிகளை திருப்திப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். திடீர் இடமாற்றம் உண்டு. எதிர்பார்த்த சலுகைகளையும், சம்பள உயர்வையும் போராடிப் பெற வேண்டி வரும். சிலர், உங்கள் மீது அவதூறு வழக்குகள் தொடர வாய்ப்பிருக்கிறது.
கன்னிப் பெண்கள், பெற்றோரிடம் எதையும் மறைக்க வேண்டாம். இணையதள பக்கங்களில் கவனமுடன் செயலாற்றவும். மாணவமாணவிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். சிறு சிறு உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதும் நல்லது. தகாத நட்புகளைத் தவிர்க்கவும். கலைத் துறை யினருக்கு மறைமுக விமர்சனங்களும், எதிர்ப்புகளும் அதிகமாகும். படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும். சம்பள விஷயத்தில் விட்டுக்கொடுத்து போங்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, சற்றே ஆரோக் கியக் குறைவையும், ஒருவித அச்சத்தையும் தந்தாலும், ஓரளவு பண வரவையும், பயணங்களால் நிம்மதியையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: தேய்பிறை  சஷ்டி அல்லது மகம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் திருச்செந்தூர் சென்று,
ஸ்ரீ செந்திலாண்டவரையும், ஸ்ரீ சத்ருசம்ஹார மூர்த்தியையும் வணங்குங்கள். பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உதவுங்கள்; முன்னேற்றம் தொடரும்


thanx - the vikatan

0 comments: