Monday, June 08, 2015

ஆயில்ல கூட ஆண் பால் ஆயில் பெண் பால் ஆயில் இருக்கா? அடேங்கப்பா

சன் டிவி யில் ராசி பலன் சொல்லும் பிங்க்கி பிங்க்கி பாங்க்கி பிங்க் கலர் சேலைக்கு மஞ்சள் பார்டரும் கறுப்புகலர் ஜாக்கெட்டும் அணிந்திருக்கு


==============


2 காதலியின் பின் நீ நாய்க்குட்டி போல் போனா அவ உன்னை நாயைப்போல் நடத்துவாள்.கம்பீரத்தில் யானையாய் ,சீற்றத்தில் புலியாய் இரு


================

3 ஆயில்ல கூட ஆண் பால் ஆயில் பெண் பால் ஆயில் கண்டுபிடிச்சவன் தமிழன் தான்
1 கிருஷ்ணா யில்
2 பாமா யில்


============


4 ஒரு பொண்ணு குட் மார்னிங் ஆபீஸர்ஸ்....."னு ஸ்டேட்டஸ் போடுது.ட்விட்டர் ல ஒர்க் பண்ணுது போல.நாமும் நைசா ஜாய்ன் பண்ணிடனும்


=================

5 உன்னை விட உயரமாய் ஒரு பிகர் பஸ்சில் இருந்தால் நீ கவலைப்படாதே!! ஹை ஹீல்ஸ் போட்ட ஹை க்ளாஸ் பிகராய் இருக்கும்


===============

6 ஒத்த ஜடை யில் மல்லிகை ,முல்லை என ரெட்டைச்சரம் சூடினால் என் நாசிக்கு குழப்பம் வராதா அன்பே!?


=============

7 உதிரிப்பூக்களை நெருக்கமாகக்கோர்க்கும் /கட்டும் பெண்கள் கூட்டுக்குடும்பத்துக்கு உகந்தவர்கள் என்பது பண்டைய தமிழர் நம்பிக்கை


================

8 இந்த பொண்டாட்டிங்க நல்ல நாள்லயே நம்ம கிட்ட வேலை வாங்குவாங்க.மருதாணி வைத்த நாளில் கேட்கவே வேணாம்.ஏங்க முதுகு அரிக்குது.சொறிங்க.
சரிங்க


============

9 ஆபீசில் /கம்பெனியில் நீ எவ்வளவு பெரிய அப்பாடக்கரா இருந்தாலும் நீ தொட்டுத்தாலி கட்டிய உன் சொந்த சம்சாரத்துக்கு நீ எடுபுடி தான்


============

10 சைக்கோ ஸ்பெஷலிஸ்ட் , தனுஷ் ன் மாரி இன்னொரு சுள்ளானாக பிளாக் பஸ்டர் ஹிட் ஆகும் என யூகிக்கிறேன்


=============

11 நானும் அவளும் மலை உச்சியில் நின்றோம், சம்சாரமாப்போச்சு.தள்ளிட்டு வந்த பிகரா இருந்தா பிடிச்சு தள்ளி விட்டிருக்கலாம்


================

12 குமாரசாமி = 66 கோடி திருடுனவர் 10% தான் அதிகம் திருடி இருக்கார்.அந்த ரேஷியோப்படி 200 கோடி திருடுனவர் 33%,அதிகம் திருடிக்கலாம்.தப்பில்லை


================

13 இந்த பொண்டாட்டிங்க எல்லாம் அடிக்கடி கோவிச்சுக்கறாங்க.கோபத்துக்கான காரணத்தைக்கண்டுபிடிக்கறதுக்குள்ளே வாலு படமே ரிலீஸ் ஆகிடும் போல


=============


14 உங்க மனசுல ஒரே திக்கு திக்குனே இருக்கா?அப்போ
1 திக்கு தெரியாத காட்டில் மாட்டி இருப்பீங்க.
2 THICKகா இல்லாத COT ல உக்காந்திருப்பீங்க


===================

15 ரொம்ப கடுப்பா இருந்தா சாதா தமிழன் டீ குடிப்பான், நெட் தமிழன் FB வந்து அக்கவுண்ட்டை டீ ஆக்டிவேட் பண்ணலாம்னு இருக்கேன்னு அடிச்சுவிடுவான்


==============

16 முருகனை கடவுளா கும்பிடும் பொண்ணுங்களுக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கறேன், அவருக்கு 2 சம்சாரம், வள்ளி , தெய்வானை


===============

17 ஒரு உம்மனாம்மூஞ்சியை ஆஃபீஸ்ல சிரிக்க வெச்ட்டேன். ஜோக் சொல்லவா?ன்னேன். வேணாம் சிரிச்சுடறேன் ஈ அப்டின்னுடுச்சு# எகத்தாளம்


===============

18 5 மணிரத்னம் = 1 ஷங்கர்
5 ஷங்கர் = 1 ராஜ்மவுலி # பாகுபலி கலக்கல் ட்ரெய்லர்


=============


19 பாஹூபலி ஜூனில் ரிலீஸ் ஆகி ஹிட் ஆகிட்டா புலிக்கு அது பின்னடைவு.எல்லாரும் ஒப்பிட்டுப்பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க.


===============

20 பின்னணி இசையை முன்னணியில் நிறுத்தியவரும் ,இசையை தவமாகக்கொண்டவரும் ,தமிழ் சினிமாவின் வரமாக ஆனவரும் இளையராஜா த லிவ்விங் லெஜென்ட்


==============

0 comments: