Monday, June 29, 2015

நடிகை விஷாகாவுக்கு ஃபேஸ்புக்கில் செக்ஸ் டார்ச்சர் -சமூக வலைதளங்களில் மீறப்படும் எல்லைகள்

நடிகை விஷாகா சிங், சமீபத்தில் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அநாகரிகமான கமெண்ட்டைப் பதிவுசெய்திருந்த நபருக்குச் சரியான பதில் கொடுத்திருந்தார். விசாகாவின் பதிலை த்ரிஷா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பாராட்டியிருந்தனர். ஆனால், விஷாகா அந்த நபருக்குப் பதிலளித்த பிறகுதான் நிறைய பிரச்சினைகளைச் சந்திக்க நேரிட்டிருக்கிறது.
சமூக வலைதளங்களில் அநாகரிகமான, ஆபாசமான கருத்துகளைத் தெரிவிக்கும் போக்கு இப்போது பெருகிவருகிறது. சைபர் புல்லிங் (Cyber Bullying) எனப்படும் இந்த இணைய ஒடுக்குதலைப் பெண்கள் பல்வேறு விதமாகச் சந்தித்துவருகின்றனர்.
விஷாகா பேஸ்புக்கில் தன்னை ஆபாசமாக விமர்சித்திருந்த நபருக்கு நேரடியாகப் பதிலளித்திருந்தார். அதற்குப் பிறகு நடந்த விஷயங்களை விஷாகா பகிர்ந்துகொண்டிருக்கிறார். “ஒரு நடிகையாக எனக்கு அதிகாரபூர்வமான பேஸ்புக் பக்கம் இருக்கிறது. இது என் ரசிகர்களுடன் நான் தொடர்பில் இருப்பதற்காகத் தொடங்கிய பக்கம். என் பேஸ்புக் பக்கத்துக்கு அடிக்கடி கீழ்த்தரமான செய்திகளைத் தொடர்ந்து சிலர் அனுப்புவார்கள். என் சமூக வலைத்தளப் பக்கத்தை நிர்வகிப்பவர்கள் அந்த மாதிரிச் செய்திகளையும், நபர்களையும் பிளாக் செய்வார்கள்.
இப்போது என்னைப் பற்றி இப்படி ஆபாசமான முறையில் விமர்சித்திருக்கும் இந்த நபர் தொடர்ந்து என் பேஸ்புக் பக்கத்துக்குக் கீழ்த்தரமான செய்திகளை அனுப்புவார். அவரை எத்தனை முறை பிளாக் செய்தாலும் மறுபடியும் ஒரு போலி அக்கவுண்ட்டைத் தொடங்கி, அதே கீழ்த்தரமான செய்திகளை மறுபடியும் அனுப்புவார். நான் நீண்ட நாட்களாக இந்த நபரை என் பேஸ்புக் பக்கத்தில் தவிர்த்துக்கொண்டிருந்தேன். ஆனால், அந்த நபருடைய ஆபாசமான கருத்துக்கு அன்று நேரடியாகப் பதில் சொல்ல நினைத்தேன். எனக்கிருந்த கோபத்தையும் மீறி அந்த நபருக்கு நாகரிகமான முறையிலேயே பதிலளித்தேன். நான் பதிலளித்து நான்கு நாட்களுக்குப் பிறகு, பேஸ்புக்கில் என் பெயர் டிரண்டிங்கில் இருந்தது. இணையத்தில் என் கருத்துக்கு எதிராகப் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
ஒரு நபர் நேரடியாக என்னைக் கொச்சைப்படுத்திச் செய்தி அனுப்பினார். அதற்கு நான் பதிலளித்தேன். இதில் எந்த சாகசமும் இல்லை. ஒரு சாதாரண விஷயத்தை இவ்வளவு பெரிதாக ஏன் மாற்றினார்கள் என்று தெரியவில்லை. நான் பதிலளித்த அடுத்த நாள், சமூக வலைதளங்களில் உலாவரும் விஷமிகள் மொத்தப் பேரும் சேர்ந்து என்னை மிக மோசமான முறையில் விமர்சிக்க ஆரம்பித்தார்கள். நான் நடிகை என்பதால் இது ஒரு ‘பப்ளிசிட்டி’ டிரண்ட் என்றார்கள். இன்னும் எவ்வளவோ கீழ்த்தரமான விமர்சனங்கள். அத்துடன், என் பெயரிலேயே ஒரு போலி அக்கவுண்ட்டை உருவாக்கி நான் மோசமான கருத்துகளை ஆதரிப்பதாகப் போலியான ஒரு பிம்பத்தை உருவாக்கினார்கள்.
நான் நடிகை என்ற காரணம் மட்டுமே என்னைப் பற்றி கீழ்த்தரமாக விமர்சிக்கும் உரிமையைக் கொடுத்துவிடுகிறதா? என்னைப் பற்றி விமர்சிப்பவர்கள் தாங்கள் யார் என்பதைத்தான் வெளிப்படுத்துகிறார்களே தவிர, அந்த விமர்சனங்களில் என் நிஜப் பிரதிபலிப்புகள் எதுவும் இருக்க முடியாது.
இந்த மாதிரிச் சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்குத் தீவிரமான ‘சைபர்’ சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ஆனால், அதைவிட முக்கியமானது நம் இளைய தலைமுறையினருக்குச் சமூக வலைதளங்களில் ஒழுக்கத்துடன் இயங்குவதற்குப் பயிற்சிகள் கொடுக்க வேண்டும். சமூக ஊடகத்தின் நெறிமுறைகளை அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும். அப்படிச் செய்வதனால் மட்டுமே நம்மால் ஆரோக்கியமான நெட்டிசன்களை எதிர்காலத்தில் உருவாக்க முடியும்” என்று தெரிவித்திருக்கிறார் விஷாகா.
விஷாகா மட்டுமல்லாமல் ஸ்வாதி, கனிகா போன்றவர்களும் சமூக வலைதளங்களில் தங்களைச் சீண்டியவர்களுக்குப் பதிலடி கொடுத்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் பதிலளித்த பிறகும் பல்வேறு விதமான பிரச்சினைகளைத் தொடர்ந்து சந்தித்துவருகின்றனர் என்பதுதான் உண்மை.
நடிகைகள் மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களில் இந்த மாதிரி அனுபவங்களைப் பலரும் சந்திக்கின்றனர். அதிலும் குறிப்பாக, பொதுவெளியில் இயங்கும் பெண்கள் இந்த மாதிரி இணையத் தாக்குதலுக்கு அதிகமாக உள்ளாகின்றனர். அரசியல், ஊடகம் போன்ற துறைகளில் பணியாற்றும் பெண்களை எந்த வரைமுறையும் இல்லாமல் விமர்சிக்கலாம் என்ற போக்குதான் இப்போது நிலவிவருகிறது.
சட்டங்கள் இயற்றுவதால் மட்டுமே இந்தப் போக்கை மாற்றிவிட முடியாது. ஒரு பெண்ணைச் சமூக வலைதளங்களில் ஆபாசமான முறையில் விமர்சிப்பதைத் ‘துணிச்சலான செயலாக’ நினைப்பவர்கள் இருக்கும்வரை எந்தப் பெரிய மாற்றத்தையும் உருவாக்க முடியாது என்பதுதான் உண்மை.
பெண்களை, அதுவும் பொதுத் தளத்தில் செயல்படும் பெண்களைப் பல ஆண்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது. பெண்கள் படிக்க வந்தபோது, வேலைக்கு வந்தபோது, சாலையில் வண்டி ஓட்ட ஆரம்பித்தபோது, அரசியல் முதலான துறைகளில் ஈடுபடத் தொடங்கியபோது என்று பெண்கள் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்தும் ஒவ்வொரு கட்டத்திலும் இதுபோன்ற எதிர்வினைகளை எதிர்கொள்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஆண்களின் அணுகுமுறைதான்.
இவர்கள் பார்வை மாற இன்னும் எத்தனை யுகங்கள் ஆகும்?

நன்றி - த இந்து 




  • Senthilkumar  
    இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாமல் நம் பெண்கள் வீறுநடை போடவேண்டும். மாறிவரும் நம் சமுகத்தில் பெண்களை நாம் வெறும் போகபொருளாக நினைத்து அவர்களின் சுதந்திரத்தில் மூக்கை நுழைப்பது நம்மை காட்டுமிராண்டிகளாகவே அடையாளப்படுத்தும்.
    7 days ago

     (0) ·  (0)



    • Sambath Kumar  
      கற்பழிப்பு குற்றவாளிகளையும்,பெண்களை கேலி கிண்டல் செய்பவர்களையும் ஆண்களின் பிரதிநிதிகளாக பார்க்கும் உங்களின் அணுகுமுறை மாற இன்னும் எத்தனை யுகங்கள் ஆகுமோ?அவர்களை சமூக குற்றவாளிகளாக பார்க்க வேண்டும்.தண்டிக்க வேண்டும்.அதை விடுத்து பெண்களின் வேதனைக்கு ஆண்கள் தான் காரணம் என்று பாலின மொழியில் தீர்ப்பு எழுதுவது இதற்கு தீர்வாகாது.ஆணும்,பெண்ணும் சமம் என்றாலும்,இயற்கை வகுத்த விதிகளின் படி ஆண்,பெண் இருவரும் உடல் மற்றும் குண பண்புகளில் வித்தியாசம் கொண்டவர்கள்.ஆணை,பெண்ணோ அல்லது பெண்ணை ஆணோ முழுமையாக புரிந்து கொள்வது சாத்தியமில்லை. தந்தை,அண்ணன்,தம்பி,நண்பன்,காதலன்,கணவன்,மகன் என்று உங்களோடு ரத்தபந்தமும் உறவு பந்தமும் உள்ள ஆண்கள் எல்லாரும் நல்லவர்களாக தெரியும் போது, ரத்தபந்தமும் உறவு பந்தமும் அல்லாத மூன்றாம் நபர் ஆண்கள் மட்டும் ஆணாதிக்க வெறி பிடித்தவர்களாக தெரிய என்ன காரணம் என்று புரியவில்லை.சமூகத்தில் என்றும் எதிர்மறையான செய்திகளும்,செயல்களும் மட்டுமே கொண்டாடபடுகின்றன என்பது வேதனையான உண்மை..
      Points
      180
      7 days ago

       (1) ·  (0)



      • T.  
        நடிகை மட்டுமல்ல, சமூகத்தில் ஏளனத்துக்கு உரியவர் என்று கருதப்படும் அனைவரையும், சில கயவாளிகள் கூட்டம் இப்படித்தான் பேசுகிறது. அவர்களுக்கு பிடித்திருந்தால் வானளாவ புகழுவாங்க இல்லையெனில் தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்கிறார்கள். இவர்களின் வார்த்தைக்குள் அகப்படும் நபர் மிகப்பெரிய தலைவர்களாக சமயத்தில் இருக்கிறார்கள். தலைவர்கள் இவர்களுக்கும் இந்த நாட்டுக்கும் சேர்த்து எவ்வளவு நல்லது செய்தார்கள் என்பது இந்த கீழ்த்தரமான சோம்பல்காரர்களுக்கு தெரியாது. மனதுக்குள் ரசிக்க வேண்டும் என்ற நாகரீகத்தை அவர்கள் குடும்பம் அவர்களுக்கு சொல்லித்தரவேண்டும். வெளி நபரிடம் பழகும் முறையும் சொல்லித்தரவேண்டும். -iravi
        Points
        855
        7 days ago

         (1) ·  (0)

        NandhakumarUp Voted


        • Kovai  
          (((இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஆண்களின் அணுகுமுறைதான்.இவர்கள் பார்வை மாற இன்னும் எத்தனை யுகங்கள் ஆகும்? ))) டியர் மேடம் கனி, இந்த யுகம் மட்டுமல்ல எதனை யுகம் ஆனாலும், பெண்களை ஆண்களும், ஆண்களை பெண்களும் புரிந்து கொள்ள முடியாது..! இயற்கையின் படைப்பு அப்படி! இது எல்லா உயிர் இனத்துக்கும் பொருந்தும். இந்த புரிதலை பற்றி வெவரமாக, நிருபிகப்பட்ட அறிவில் மூலம் சொல்ல தனி புத்தகமே போடலாம்...! நீங்கள் விருப்ப பட்டால் ப்ளீஸ் ரீட் திஸ் புக்: ''ஏன் ஆண்கள் பொய் சொல்கிறார்கள், பெண்கள் அழுகிறார்கள்'', author 'ஆலன் &பார்பரா பீஸ்' , கண்ணதாசன் பதிப்பகம்
          Points
          1285
          7 days ago

           (0) ·  (0)



          • Pradeep Raj  
            உண்மைதான், இளம் சமுதாயம் தன்னிலை மறந்து சமுக வலைதளங்களில் உலா வருகிறது. இதை கேட்க இங்கு யாரும் முன் வருவதில்லை, வந்தால் அவருக்கும் இதே கதிதான். இதற்கு ஒரே முடிவுதான் இருக்கிறது, அனைத்து அக்கௌன்ட்களையும் ஆதர் முலம் இணைத்தால் ஒரு நல்ல மாற்றத்தை எதிர்பார்க்க முடியும்.
            7 days ago

             (3) ·  (0)

            MagimaiRaj · vilangovan · NandhakumarUp Voted

            • sundar  from Bangalore

              அப்படி செய்தால் போலி அக்கௌண்ட் மூலம் அவர்களுக்கு வரும் வருமானம் போய்விடும் அல்லவா.
              7 days ago

               (0) ·  (0)



            • N Kannan  
              Any novelty has to face resistace first redicule next . Then acceptance.
              Points
              1070
              7 days ago

               (0) ·  (0)



              • Raghavan  
                இந்த மாதிரி பொறுக்கிப்பசங்க இருக்கிரார்கள் இவங்க பன்னுர தப்பு எல்லா ஆண்களுக்கும் கெட்ட பெயர் ...

              0 comments: