Friday, May 01, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 1 /5/ 2015 ) 3 படங்கள் முன்னோட்ட பார்வ

1 உத்தம வில்லன் 

கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ திரைப்படம் நாளை (மே 1) ரிலீஸாகிறது. இப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு தடை கேட்டு விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், விஎச்பி அமைப்பினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விஎச்பி அமைப்பின் கொள்கை பரப்பு செயலாளர் வை.தா.ராமமூர்த்தி கூறியதாவது:
‘உத்தம வில்லன்’ படத்தை தடை செய்ய வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை அல்ல. அந்த படத்தில் ‘வெக்கங்கெட்டு பன்றியும் நாம் என்றவன் கடவுள்’ என்ற பாடல் வரி உள்ளது. இந்து மத நம்பிக்கைக்கு எதிரான இந்த பாடல் வரியை நீக்கவேண்டும் என்றுதான் கூறுகிறோம். வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் மேல் முறையீடு செய்ய உள்ளோம்.
‘காதலா காதலா’, ‘தசாவ தாரம்’, ‘உத்தம வில்லன்’ என்று தொடர்ந்து தனது படங்களில் இந்து மத நம்பிக்கைகளை கிண்டல் செய்யும் வகையில் கமல்ஹாசன் காட்சிகளை அமைக்கிறார். ‘விஸ்வரூபம்’ படத்துக்கு எதிர்ப்பு எழுந்தபோது காட்சிகளை நீக்கியவர் இப்போது மறுப்பது ஏன்?
இந்து மத நம்பிக்கைக்கு எதிரான பாடல் வரிகளை நீக்காவிட்டால், ‘உத்தம வில்லன்’ படம் ரிலீஸாகும் திரை யரங்குகள் முன்பும் போராட்டம் நடத்துவோம் என்றார்.

 • மிஸ்டர் மனோராஜ் ,ஏங்க நீங்க என்னத்தை சொன்னாலும் அவங்க கேட்க மாட்டாங்க .ஒரு ஐந்து வருசத்துக்கு இந்த கோமாளித்தனத்தை /நாசிசத்தை/பாசிசத்தை பொறுத்து கொள்ளணும்.வேற வழி கிடையாது.
  Points
  1415
  about 16 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
     
  SENTHIL  Up Voted
  • Sameer  
   கொஞ்ச நாளாகவே சில நடிகர்கள் அவர்கள் படம் வெளியாகும் போது இது போன்ற பிரச்சினைகளை கிளப்பி விட்டு அதன் மூலம் விளம்பரம் தேடி தங்கள் படங்களை ஓட வைக்க முயல்கின்றனர். மக்களாகிய நாம் தான் விழிப்புடன் இருக்கவேண்டும். அரசியல்வாதிகளிடம் காலம் காலமாக நாம் ஏமாறுவது போதும்.
   Points
   1330
   about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
   • Manoraj  
    பத்து அவதாரத்தில் பன்றி அவதாரமும் ஒன்று என்று பழங்காலத்தில் இருந்து கூறிக் கொண்டு இருப்பதே நாம் தான்... இதனை பொய் என்று நிரூபித்து விட்டு சம்பந்தப்பட்டவர்கள் போராட்டத்தை தொடங்கலாம்...
    about 17 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
    SENTHIL · sirajudeen · Manoraj · paamaran  Up Voted
    • Nizar Ahamed Owner at Travel Update - Sam Exim - Vellinila 
     எப்படியோ ஒரு படத்தை வெற்றி பெற வைக்க இது போன்ற மத அமைப்புகள் பயன்படுகின்றன...
     Points
     875
     about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (1) · 
    • தன்னை எப்படி பிரதிபலிக்கிறார் என்று அவருக்கே தெறியவில்லையா
     about 18 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
     Vishvak  Up Voted
     • நாம் என்னசெய்கிறோம் என்று கமலஹாசனுக்கே தெரியவில்லை தன்னை என்னவாக பிரதிபளிகிறார் அவருக்கே வெளிச்சம் ஒன்று மட்டும் சொல்ல விறும்புகிறேன் நாம் எல்லாம் இந்தியர்கள் அவ்வளவுதான்
      about 18 hours ago ·   (1) ·   (1) ·  reply (0) · 
      Vishvak  Up Voted
      paamaran  Down Voted
      • தானாகவே விட்டுவிட்டால் இந்த படம் ஓடாது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்க அதுவே விளம்பரமாகி படத்தை வெற்றி ஆக்கிவிடுவார்கள். இவர் சொல்லிவிட்டு போகட்டும் . அதற்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.இவர் படம் ஓடுவதற்காகவே இதுமாதிரி இவர் செய்கிறார் போலும்
       Points
       2630
       about 19 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       • Tree  
        இவர் ஜாதிக்காகத்தான் இவரை எதிர்க்கிறார்கள். முடிந்தால் பெரியார் எழுத்துக்களை தடை செய்யச் சொல்லுங்கள். அவரைப்போல், அவர் தொண்டர்கள் போல் இந்துமதத்தை இஸ்லாமியன் கூட அவமதித்ததில்லை. தமிழனில், வைதீக பிராமணன் பூணலை அறுக்க ஒரு கூட்டம், நாத்தீகம் பேசினால் அதை எதிர்க்க ஒரு கூட்டம். சரியான பச்சோந்திகள்.
        Points
        9385
        about 20 hours ago ·   (1) ·   (1) ·  reply (0) · 
        paamaran  Up Voted
        SENTHIL  Down Voted
        • JP  
         நீதிமன்றம் தள்ளுபடி செய்த ஒரு விஷயத்தை ஆர்பாட்டம் என்ற பெயரில் பொது இடத்தில் வந்து பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் கூட்டத்தை குண்டர் சட்டத்தில் அல்லது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே தள்ள மனு போட்டு புடிச்சி உள்ளே போட வேண்டும்.
         Points
         1855
         about 23 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
         SENTHIL · மனோகர் · paamaran  Up Voted
         • நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்க முடியிலடா.
         இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் உள்ள பாடல் வரிகளை நீக்காமல், கமல்ஹாசன் நடித்துள்ள "உத்தம வில்லன்' படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
         விசுவ இந்து பரிஷத் தமிழ்நாடு பிரிவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எஸ்.ராஜா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
         நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான "உத்தம வில்லன்' திரைப்படம் மே 1-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
         அதில், "என் உதிரத்தின் விதை...' என்று தொடங்கும் பாடலில், இந்து மதக் கடவுளான விஷ்ணுவை அவமதிக்கும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளன. அந்த வரி, இந்து மத மக்களின் நம்பிக்கைக்கு எதிராக உள்ளது.
         விஷ்ணு அவதாரங்களில் 3-ஆவது அவதாரமான வராக அவதாரத்தை அவமதிக்கும் வகையில் அந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. எனவே, அந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரியை நீக்க உத்தரவிட வேண்டும். அவ்வாறு அந்த வரியை நீக்காமல் "உத்தம வில்லன்' திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
         இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் கூறும் புகாரில் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பாடல் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதவில்லை. மேலும், இந்த மனு விசாரணை செய்வதற்கு தகுதியுடையதாக இல்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்கிறேன் என உத்தரவில் தெரிவித்துள்ளார்.
         2 வை ராஜா வை


         ழில் தயாராகும் படங்களில் எண்பது சதவீதம் பிற படங்களின் பாதிப்பில் எடுக்கப்படுபவை. சில அப்பட்ட காப்பிகள், சில புத்திசாலித்தனமான தழுவல்கள்.
          
         காப்பி குறித்து எழுதி நமக்கே போரடித்துவிட்டதால், மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணிக்கும், ஹாலிவுட், ப்ரெண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ் படத்துக்குமான பத்து பொருத்தங்களை நாம் பட்டியலிடவில்லை. மேலும், மணிரத்னத்தின் ஆத்மார்த்த குரு பாலசந்தரின் புதுப்புது அர்த்தங்களிலும் ஓ காதல் கண்மணியின் சாயலை காணலாம்.
          
          
         நிற்க. விஷயம் ஓ காதல் கண்மணி பற்றியதல்ல. ஐஸ்வர்யாவின் இரண்டாவது படம், வை ராஜா வை ஹாலிவுட் படத்தின் தழுவல் என்றொரு செய்தி வெளியாகியுள்ளது. 2008 -இல் ஹாலிவுட்டில் 21 என்ற படம் வெளியானது. படத்தின் நாயகன் ஒரு ஸ்டூடண்ட். ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் படித்து டாக்டராக வேண்டும் என்பது அவனது கனவு. அதற்கு நிறைய டப்பு வேண்டும்.
         நிலையில் அவன் கணித பேராசிரியர் ஒருவரை சந்திக்கிறான். அவர் ஏற்கனவே சில மாணவர்களை தனது கணிதத் திறமையைப் பயன்படுத்தி சூதாட்டத்தில் கில்லாடிகளாக பயிற்சி அளித்து வைத்திருக்கிறார். ஹீரோவும் அவரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டு, அனைவருமாக சூதாட்ட நகரமான லாஸ் வேகாஸுக்கு செல்கின்றனர். அங்கு தங்களது திறமையால் பணமும் வெல்கின்றனர். அதன் பிறகு எழும் பிரச்சனையை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது கதை.
          
          
         இந்தப் படத்தை தழுவி வை ராஜா வை எடுக்கப்பட்டதாக தகவல். ஆனால், உண்மை என்ன? ஐஸ்வர்யா கதை விவாதம் நடத்தி, கொஞ்சம் கொஞ்சமாக வை ராஜா வை கதையை உருவாக்கியதாகவும், 21 படத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சூதாட்டத்தை மையப்படுத்தியது என்பதால் 21 படத்தை வேண்டுமென்றே இந்தப் படத்துடன் தொடர்புப்படுத்துகிறார்கள் எனவும் ஐஸ்வர்யா தரப்பு குற்றச்சாட்டை மறுக்கிறது.
          
         மே 1 படம் வெளிவரும்போது எல்லா பொய் திரைகளும் விலகிவிடும். அதுவரை காத்திருப்போம்.


         கப்பார் இஸ் பேக் படம், ஷோலே படமோ அல்லது அதன் இரண்டாம் பாகமோ அல்ல என்று நடிகர் அக்ஷய் குமார் கூறியுள்ளார். ஷோலே படத்தில், வில்லனின் பெயர் கப்பார். இதைவைத்து, இப்படத்தை, யாரும் ஷோலே 2 என்று நினைத்து விட வேண்டாம். இரண்டு வெவ்வேறு கதாபாத்திரங்கள். கப்பார் என்பது கப்பார் இஸ் பேக் படத்தின் முன்னணி கேரக்டரின் பெயர் என்று அக்ஷய் குமார் …

         0 comments: