Friday, May 22, 2015

டிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்

டிமாண்ட்டி-ன்னு  பேரைக்கேட்டதும்  கலர்ல  டிம்மா இருக்கும் ஆண்ட்டின் -னு ( டிம் + ஆண்ட்டி = டிமாண்ட்டி) நீங்களா ஒரு முடிவுக்கு வந்தா உங்களுக்கு  ஒரு பல்பு ., டிமாண்ட்டி என்பது ஒரு பிரிட்டிஷ்  இளவரசர்  பேரு . நம்ம  ஊரு  ஜமீன் கணக்கா  அந்தக்காலத்தில்  வாழ்ந்தவரு . அவரோட சம்சாரத்தை  எவனோ  ஒரு  பாவிப்பய  கச முச பண்ணிடறான். சம்சாரம்  காய்ச்சல் ல  கிடைக்கு . இவரு  கடுப்பில்  இருக்காரு. 

 மனநிலை  பாதிக்கப்பட்ட  தன் சம்சாரத்தை  சீரழிச்சது  அரண்மைனை ல வேலை  பார்க்கும்  விளங்காத  பயல்  தான்னு முடிவு  பண்ணி அங்கே இருக்கும்  எல்லாரையும்  ஷுட்  பண்றாரு .( கடைசி  வரை அந்த  விளங்காதவன்  யார்னு  காட்டவே இல்ல )  வேலையாட்கள்  அரண்மனைக்கு  நெருப்பு  வைக்கறாங்க . தப்பிக்க  வழி  இல்லாம பிரிட்டிஷ்  இளவரசர்  தன்  மனைவியோட  ஜீவசமாதி ஆகிடறாரு.( ஜீவ சமாதின்னா என்னனு ஜீவ சுசி கிட்டே தான் கேட்கனும்) அப்பேர்ப்பட்ட  ஜமீன்  பங்களாவுல  யாருமே  போகாம  இருக்காங்க .

இது  முன் கதை  

 ஹீரோ  கோக்குமாக்கான  ஆளு . புருசன்  அவுட்டிங்  போனா அந்த  வீட்டு   சம்சாரம் விரும்பினா பணம்  வாங்கிக்கிட்ட்டு  கில்மா சேவகம் பண்ணும்  சேவகன் ( இந்த மாதிரி  சேவை  செய்ய  எல்லாருக்கும்  ஆசைதான் ) அப்பேர்ப்பட்ட  உத்தமன்  ஹீரோவுக்கு  3  ஃபிரண்ட்ஸ் . அதுல  ஒரு  வீணாப்போனவன்  அந்த  பங்களாவில்  ஜமீன்  நகை  இருக்கு . இளவரசர்    தன் மனைவிக்குப்பரிசாக்குடுத்த  நெக்லஸ்  இருக்கு , அது பல  கோடி    தேறும்னு சொல்லி  பங்களாவுக்குள்  கூட்டிட்டுப்போறான் .

அவங்க   4 பேருக்கும்  என்ன ஆச்சு ? யாராவது  உயிரோட  மீண்டு  வந்தாங்களா?  என்பதுதான்  திரைக்கதை 

 சும்மா சொல்லக்கூடாது  , அருள்நிதிக்குக்கிடைச்ச  முதல்  செம  ஹிட் படம்  இது 

அவர்  பியூட்டி  பார்லர்  எல்லாம்  போய்  தனுஷ் , சிவகார்த்திகேயன்  மாதிரி  முகத்தில்  ஷைனிங்  ஏற்றி  நடிச்ச  முதல்  படம் .முன்  பாதியில் வழக்கமான  ஹீரோவாக  வருபவர்  பின் பாதியில்  மிரட்டி  விட்டார் . அதில்  பாதி பங்கு  இசை அமைப்பாளருக்கு . 


படத்தில்  பெரிய  அதிர்ச்சி  , ஹீரோயின்  கிடையாது . அவ்வளவு ஏன்? லேடீஸ்  கேரக்டரே அதிகம்  இல்லை . ரெண்டே பெர்  தான்  2 நிமிடம் தான்  அதுவும் . 

படத்தில்  வரும்   மீதி  3 நண்பர்களும்  பிரமாதமான  நடிப்பு .ஒருவருக்கொருவர்  சளைக்காமல்  அட்டாகசப்படுத்தி  இருக்காங்க 

படத்தில்   மெயின்  ஹீரோ  இசை அமைப்பாளர்  தான் . பின்னணி  இசையில்  கலக்கி  இருக்காரு . ஆங்காங்கே  மனோஜ்  கியான்  பாதிப்பு  உண்டு . 


திரைக்கதையில் வாய்ப்பு  இருந்தும்  ஹீரோயின்  சேர்க்காமல்  விட்டது  இயக்குநர்  புத்திசாலித்தனம் 

மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1  சிங்கம்புலி = கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்னா சீப்பா நினைக்காதீங்க.ஒரு பாம்பு படம் எடுத்து கொத்த 15 லட்சம் ரூபா அவுட் # டி கா


2 நேத்து வரை புட்டிப்பால் குடிச்ட்டிருந்த பசங்க எல்லாம் இன்னைக்கு ஒயின் ஷாப் வந்துட்டாங்க சரக்கு அடிக்க.உருப்புட்டாப்லதான் # டி கா

 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  அருள் நிதி விஷால் போலவே டான்ஸ்.ஆகா # டி கா


2 தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக ஆன்ட்டியை திருப்திப்படுத்தும் பேயிங் கெஸ்ட் ரோலில் ஹீரோ. # டி கா

3 சந்திரமுகி ,பீட்சா பட சாயல்களுடன் யாவரும் நலம் பாதிப்பில் இடைவேளை ட்விஸ்ட்டுடன் பர பரப்பான முன் பாதி # டிமான்ட்டி காலனி

4 மனோஜ் கியான் இசை அமைத்த ஊமை விழிகள் தீம் இசையை ஆங்காங்கே தூவி இருக்கார் பிஜி எம்மில். # டி கா


5 புதுமொழி.பேய்க்கதையை நம்பினார் கை விடப்படார் # டி கா

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  நறுக்  சுருக்  படமாக  ஒரு  திகில்  கதையை  2 மணி  நேரத்தில்  சொன்னமைக்கு  ஒரு ஷொட்டு 


2  சுவடி  ஜோதிடர்  எம் எஸ்  பாஸ்கர்  ஃபோனில்  ஹீரோவுக்கு  சொல்லும்  அதிர்ச்சி தகவல்  நல்ல  ட்விஸ்ட் , அது  பின் பாதியில்  தான்  தெரிய  வருவது  பிளஸ் 

3  காமெடி  டிராக்  என  மொக்கை  போடாதது ,  நாயகியே  இல்லாதது  படத்தின்  பிளஸ் 


4  பிஜிஎம்  கலக்கல்  ரகம் , பல இடங்களீல்  அதுதான்  படத்தைத்தாங்கிப்பிடிக்கிறது இயக்குநரிடம்  சில கேள்விகள்


1   ஃபிளாஸ்பேக்  கதையில்  பல  குழப்பங்கள் . சம்சாரத்தை  ரேப்பிய ஆள்  யார்னே   தெரியலை . பேய்  ஆன  பின்புமா தெரியலை ? சம்சாரத்தை  கேட்டா சொல்லி  இருகுமே? 2 பேரும்  இப்போ பேய் தானே?  அடையாளம்  காட்டசொல்லி  டைரக்டா  அக்யூஸ்ட்டை  கொலை  பண்ணி இருக்கலாமே? 


2   இளவரசர்  சுடப்போறார்  என  தெரிஞ்சதும்  அ\ந்த வேலையாள்  ஏன் ஓடாம  நெஞ்சைக்காட்டிட்டே நிக்கறான் ? உயிர்  பயம்  இருப்பவன்  ஓடி  தப்பிச்சு இருக்கலாமே? 


3   இளவரசர்   தரைல கீழே  உக்காந்திருக்காரு . அவர்  தன் மடில  துப்பாக்கியை      வெச்சு  எதிரே  நிக்கும்  ஆள் க்கு நெஞ்சில்  சுடறாரு , இது  எப்படி  சாத்தியம் ?  துப்பாக்கி  கோணம்  சரி இல்லையே? 


4  ஜோசியர்  எதுக்காக  கொலை  செய்யப்படனும் ? அந்த  ட்விஸ்ட்டை  சொல்லக்கூடாதுன்னா?  அதான்  ஃபோன்ல  சொல்லிடறாரே?  அது கூடவா  பேய்க்கு  தெரியலை  ? 


5   யாவரும்  நலம்  பட  பாணியில்  வரும்ம்  அந்த  டி வி   செல்ஃப்  கதை  ட்விஸ்ட்   எதுக்கு ?  கெட்ட பேருதான் , உல்டா  அடிக்கறாங்கன்னு .அது  இல்லாமயே  படம்  நல்ல  சஸ்பென்ஸாத்தானே  போகுது  ? 


6  க்ளைமாக்சில்    பெட்டிக்கடை ஆளிடம்   பேய்  முறையிடுவதும்  பின்  அவனை  அடிப்பதும்  எப்படி  ?  பேய்  பேசுவது  அவனுக்கு  கேட்காதே ? 


7  காஞ்சனா  பாதிப்பில்  முன் பாதி  2 ரீலுக்கு  எதுக்கு  காமெடி ?  தேவையே   இல்லை  , குறிப்பா  ஹீரோ  ஆம்பளை  டிக்கெட்  என்பது  போல்  காட்சி  அமைத்திருப்பது  அவசியம்  இல்லாதது   

சி  பி  கமெண்ட் =டிமான் ட்டி காலனி - லோ பட்ஜெட்டில் உருவான  மிரளவைக்கும்  ஹை க்ளாஸ்  பேய்ப்படம், பிஜிஎம் பட்டாசு - விகடன்  மார்க் = 43 , ரேட்டிங் = 3 / 5 
பெண்கள்  குழந்தைகள்  எல்லாரும்  பார்க்கலாம் , கசமுச  ரத்தம்  , முகம்   சுளிக்க வைக்கும்  வன்முறை  காட்சிகள்  எதுவும்  இல்லை ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 43 குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = நன்று  ரேட்டிங் = 3 / 5 


diSki =திறந்திடு சீசே - சினிமா விமர்சனம் 

http://www.adrasaka.com/2015/05/blog-post_98.html
 ஏ , பி ,சி  என்   எல்லா செண்ட்டரிலும்  வசூலை  அள்ளப்போகும்  இந்தப்படத்தை  ஈரோடு  சண்டிகாவில்  பார்த்தேன் .Demonte Colony
Directed byR.Ajay Gnanamuthu
Produced byM.K.Tamilarasu
Written byR.Ajay Gnanamuthu
StarringArulnithi
Music byKeba Jeremiah
CinematographyAravinnd Singh
Edited byBhuvan Srinivasan
Production
company
Sri Thenandal Films
Mohana Movies
Release dates
  • 22 May 2015
[1]
CountryIndia
LanguageTamil

Erode sandika

1 comments:

Unknown said...

இயக்குனரிடம் சில கேள்விகள் (6வது பாய்ண்ட்) ஹீரோ அவர்களிடம் உதவி கேட்கும்போது அவர்கள் ஏதோச்சையாக முதல் நாள் சம்பவத்தை பேசிக்கொண்டு இருக்கின்றார்கள் அவ்வளவுதான் இது ஏன் உங்களுக்கு புரியாமல் போனது என்பதுதான் நான் உங்களிடம் கேட்கும் கேள்வி
நன்றி