Saturday, May 30, 2015

புலி பசிச்சாலும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சாப்பிடாது?

நாளை 10 வது ரிசல்ட்
மேத்ஸ் ல சென்ட்டம் அடிச்சவங்க மேத்ஸ் க்ரூப் எடுங்க.பெயில் ஆனவங்க பிஏபிஎல் படிச்சு வக்கீல் ஆகி ஜட்ஜ் ஆகிடுங்க.


============

2 பியூட்டி பார்லர் போகாத பியூட்டியின் கூந்தல் ஆங்காங்கே செம்பட்டை வாய்ந்திருந்தால் மருதாணி அரைத்துத்தலைக்குக்குளித்திருக்கு என அறிக.நரை மறை


===========

3 பஸ்ல அறிமுகம் இல்லாத பொண்ணு கிட்டே நாட்டு நடப்பு பற்றி பேசிட்டிருக்கும்போது கொஞ்சம் கூட மேனர்சே இல்லாம போன் பண்ணிட்டே இருந்தான். புருசனாம்

==============

4 அன்பே! நீ சந்தோசமா இருக்கறப்ப சுடும் தோசையே சுமாராத்தான் இருக்கும்.கோபமா இருக்கையில் உன் இருக்கையில் அமர்ந்துஇரு கையில் மாவு அள்ளி ஊத்தினா

=============

5 பஸ் ஸ்டேன்ட்ல இருந்து நல்ல ஹோட்டல் போக பணக்காரன் 50 ரூபா ஆட்டோக்கு செலவு பண்றான்.ஏழை 25 ரூபா ல சாப்பிட்டே முடிச்சுடறான்.


==============

6 சம்சாரம்/காதலி ஜடை இழுக்க எளிய வழி =10 வது 12 வது மார்க் என்ன?என கேட்பதே.கல்லுளி மங்கிக.சொல்ல மாட்டாங்க

==================


7 கோலம் போடும் டிபி வைக்கும்  பெண்கள் சாமார்த்தியமா வீட்டுக்கதவு எண்  தெரியாதது மாதிரி வெச்சு, முகத்தையும் அந்தப்பக்கமா திருப்பிக்கறாங்க 
================
8  சிம்பு வோட  லவ்வர்சும் , 10 வது ல ஸ்டேட் ஃபர்ஸ்ட்  வாங்கறவங்க  எண்ணிக்கையும் 1. ஒரு ஆள்ல  முடிஞ்சுடாது# 41  பேரு  ஸ்டேட்  ஃபர்ஸ்ட்
===============
9  நெகமம்பட்டுசேலைதான் வேணும் நீ நெகிழ்கையில் நானும்  பாக்கெட்டில்  காசு இல்லை என  நெகிழ்கையில் நீ உங்கம்மா  வீட்டுக்குப்போகாமல் இருந்தால் நலம்
===============
10  நீ என் அருகில் வந்ததும்  ,  என்னைபார்த்து  சிரித்ததும்  இன்னைக்கு சமையலுக்கு மட்டம்  போடப்போகிறாய், ஹோட்டலுக்கு  தண்டச்செலவு என அறிந்தேன்
==============11 2 3/4அடி  கூந்தல்தான்  என முக்காலும்  உணர்ந்த ஞானிகள்  சொன்னாலும்  இல்லை அது 6 அடிக்கூந்தல்தான்னு அசால்ட்டா அடிச்சு விடுவான் நெட் தமிழன்
===============12 ஐ  லவ் யூ -னு  பொண்ணுங்க  சொல்லும்போது  வெத்து  பாண்டு பேப்பர்ல  கையெழுத்து  வாங்கி  வெச்சுகனும். இல்லைன்னா  நான் எப்போ சொன்னேன்பாங்க

==================
13 புஷ்பா ஃபிளைட்டில்  போனா புஷ்வாணம்னு சொல்ல முடியாது 

=============14  பொண்ணுங்கள கேலி பண்ற எல்லாரும் இங்க உள்ள பெண் ஐடிக்களை அன்பாலோ பண்ணிட்டு நிம்மதியா இருக்கலாமே


அன்பா  ஃபாலோ  ஓக்கே , அன்ஃபாலோ  நாட் ஓக்கே ================

15  சாலி`கிராமத்தான் அறிவாளியா இருந்தா அவரை புத்திசாலி கிராமத்தான்னு சொல்லலாம்


===========

16 கை பேசி கிட்டே இருக்கணும் ,அலை பேசி கிட்டே இருக்கனும் என்பது காதலர்களின் தேசிய வியாதி:-)"


============
17 புலி பசிச்சாலும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சாப்பிடாது


============

18 ஒரு குடும்பமே குடிக்கும் ஒரு லிட்டர் காபி யை ஜக்கு ல ஊத்தி குடிக்குது ஒரு பொண்ணு.இதுல வேற டயட்ல இருக்காம்


=============

19 அன்பே ஜெனி நாளை சனி ,காதல் வந்தா தினமும் சனி


===============


20 நானும் நிலாவும் பேசி கொண்டு இருந்தோம் தொந்தரவு செய்ய வந்து விட்டார்  எஸ் ஜே  சூரியா # எ கீ 


=============


1 comments:

tamilan said...

கம்பரின் கடவுள்பக்தி சொட்டுவதா கம்பராமாயணம் பாரீர், என்று காட்டுமுகத்தான், பிழிந்து தரப்பட்டதுதான் “கம்பரசம்!”. தெய்வ காவியமாகப் போற்றப்படக் கூடிய நூல் கம்ப இராமாயணம். ஆனால் இது அத்தகையப் போற்றுதலுக்கெல்லாம் தகுதியான நூலா எனப் பார்த்தால் நிச்சயம் இல்லை என்றே தோன்றுகிறது.

இது பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் படிக்கக் கூடாத ஒரு ஆபாச நூலாகத் தோன்றுமளவு இருக்கிறது கம்பனின் வர்னனைகள்.

ஒரு கடவுள் காவியத்தில் இத்தனை ஆபாசங்களா? என்பதை அறிஞர் அண்ணா எழுதிய "கம்பரசம்" எனும் நூலைப் படித்ததும் எழுந்த கேள்வி இது.

இந்த நூலில் அவர் சுயமாக எந்தக் கற்பனைக் குதிரையயும் அவிழ்த்து விட்டு மிகைப்படுத்திக் கூறவில்லை. மாறாக தெய்வ காவியமான "இராமாயணத்தில்" கம்பனால் சொட்டப் பட்ட காமரசம் மிகும் பாடல்களைத் தொகுத்து அதற்கான விளக்கங்களை தெளிவு பட எழுதியிருக்கிறார்.

இங்கே >>>கம்பரசம். கம்பராமாயணம் கடவுள் காவியமா? அல்லது காம காவியமா? <<< சொடுக்கி படியுங்கள்.

.