Wednesday, May 20, 2015

குமாரசாமி vs குல தெய்வ சாமி

1  அதிமுக ஆட்சியின் ஊழலை மறைக்க காவல்துறையால் கூட முடியாது: கருணாநிதி # அதனாலதான் கழக ஆட்சியில் தலைவர் கண்ட்ரோல்ல போலீஸ் துறை?


==================2 தமிழகத்தில் கூட்டணி அரசு அமைய வேண்டும்: திருமாவளவன் # அதிமுகவோ , திமுகவோ ஜெயிச்சுட்டா அப்புறம் சில்லறைக்கட்சியை யாரும் மதிக்கமாட்டாங்க=================3 ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஜி.கே.வாசனை சந்தித்த மு.க.ஸ்டாலின் – அரசியல் இல்லையாம்! # உத்தம வில்லன் பத்தி டிஸ்கஸாம்
=================
4 ஜெ வழக்கில் தீர்ப்பு: நீதிபதி குமாரசாமி வீட்டுக்கு பாதுகாப்பு..# அப்போ நிச்சயம் அம்மாக்கு ஆப்பு தான்.அன்னையர் தினத்துக்கு அடுத்த நாளே!"
============
5 ஜெ. விடுதலை  அதிர்ச்சி தருகிறது.ஆனால் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போக மாட்டேன்: சு.சாமி#   மேலிட பிரஷர்  போல ம், அய்யோ  பாவம் சாமி
================6  ஜெயலலிதாவை சந்திப்பதற்காக நீண்ட நேரமாக காத்திருக்கிறார் மதுரை ஆதீனம்!  # சந்திச்சு  கால்ல விழுந்து  ஆசீர்வாதம் வாங்கி  வாழ்த்தினாரா?
===============தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு இல்லை - கர்நாடக அரசு! #  எல்லாத்தையும்  மேல  ஒருத்தன்  இருக்கான், அவன்  பார்த்துக்குவான்===================
ஜெ., விடுதலைக்கு வைகோ வாழ்த்து # பஸ்  ஸ்டேண்ட்  வர்றதுக்கு முன்பே  வெளில  கார்னர்ல நின்னு  துண்டு போட்டு இடம் பிடிக்கற மாதிரி
=================
ஜெ பதவி ஏற்கும் முன்  சில கோவில்களுக்கு  சென்று பரிகார பூஜை -செய்தி # இதுவரைக்கும்  செஞ்சதுக்கும் , இனிமே  செய்யப்போறதுக்கும் சேர்த்து
===============
10  ஜெ.,யின் வங்கி கடன்களை கணக்கில் கொள்ளவில்லை: நீதிபதி # ஓஹோ, திருடனுக்கு பேங்க்ல லோன் பாக்கி இருந்தா அவன் நல்லவனா?=================

11 சுதாகரன் திருமண செலவு ரூ.3 கோடிக்கு ஆதாரமில்லை: நீதிபதி # தமிழ் நாடே கண்ணாரப்பார்த்தது அந்த படோபடக்கல்யாணத்தை,ஆதாரம் போதாதா?==============12 குற்ற உணர்ச்சியின்றி உறங்க முடியுமா?- ஜெயலலிதாவுக்கு குஷ்பு கேள்வி # வாங்குன குமாரசாமியே உறங்கும்போது கொடுத்த குல தெய்வ சாமி உறங்காதா?=================

13 ஜெ.,க்கு பிரதமர் மோடி
வாழ்த்து-  இவரே  வெடி வைப்பாராம், எடுப்பாராம்., வாழ்த்துவாராம், கேடி மோடி

================

14  7000 கோடி முறைகேடு தொடர்பான சத்தியம் வழக்கில் ராமலிங்கராஜு உட்பட 10 பேருக்கு ஜாமீன் வழங்கியது ஐதராபாத் செசன்ஸ்கோர்ட் #,அநீதி ஸபெசல் டே வா ?===============
15 மோடி மீதான தேர்தல் வழக்கு இன்று தள்ளுபடி# ஆடித்தள்ளுபடி மாதிரி இன்னைக்கு ஏகப்பட்ட தள்ளுபடி போல


=================


16 அரசியல் பழியை தீர்க்க வழக்கு போடக்கூடாது-குமாரசாமி # தீர்ப்பும் சொல்லிட்டு ஒரு கருத்தும் சொல்லிட்டாரு


===============

17 த்ரிஷாவுக்கு பதில் கேத்ரின் தெரஸா: செல்வராகவன் முடிவு #  ஆனா இந்த மடம் த்ரிஷா, ஆகாட்டி அந்த மடம்  தெரசா


=====================

18  கோயிலுக்குச் சென்று திரும்பியதும் தீர்ப்பு எழுதிய நீதிபதி # பாவம் பண்ணற்துக்கு முன்பே பாவ மன்னிப்பு கேட்டுட்டார் போல


======================


19  பாலில் நுரை பொங்க சோப்புத் தூளை சேர்க்கிறார்கள்: மத்திய அமைச்சர்#மிக்ஸ் பண்ணும் சோப்பு சுந்தரி யாரு?னு கண்டுபிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்


===================

20 வருமானத்துக்கு அதிகமாக 76% சொத்து சேர்த்துள்ளார் ஜெ.: -டி ஜி.ஆர். தகவல் # வருசம் 10 % * 8 வருசம்னு சமாளிப்பாரோ?


=====================

0 comments: