Monday, May 18, 2015

ஆஹா!,வாட் எ ஜோக்? WHAT a joke?

1  டியர்.அந்த குண்டாவில் இருக்கும் சாம்பாரைக்கொஞ்சம் சூடு பண்ணி வெச்சுடறீங்களா?
கொஞ்சம்னா எப்டி ?பாதி சூடு பண்ணா போதுமா?

===============

2 டியர்.யாராவது எனக்குப்பின்னாடி என்னைப்பத்தித்தப்பா பேசுனா என்ன செய்வீங்க?
முன்னால பேசுனாலே காது சுமாராதாம் கேட்கும்னு உண்மை சொல்லிடுவேன்


===============

3 டியர்.வாய் திறந்தாலே பொய் பேசறீங்க உங்களை என்ன செய்யலாம் ?
லிப் கிஸ் அடிச்சுடு.வாயே திறக்க மாட்டேன்

=================


4 எங்களுக்கு காது குத்தி கம்மல் போட்டாச்சு யாரை ஏமாத்தப்பார்க்கறீங்க?
அந்த கம்மலைக்கழட்டிக்குடுங்க.தங்கமா?,பார்ப்போம்

============

5 +2 ல 1000 க்கும் மேல் மார்க்னா நான் உன்னை லவ் பண்றேன்.
ஏம்மா.அம்புட்டு மார்க் எடுத்தா மேல்படிப்பு படிச்சு உருப்பட்ர மாட்டேனா? எதுக்கு லவ்?


==============

6 முதல் பெஞ்ச் ஸ்டூடண்ட் நீ ஏன் பெயில் ஆகிட்டே?
டீச்சர்.க்ளோஸப்ல உங்க முகத்தையே பாத்துட்டிருந்தேனா?கோட்டை விட்டுட்டேம்


==============

7  ஈரோஸ்.= வசூல் ஆன பணத்தைக்கட்டுனாத்தான் படத்தை தொடர்ந்து திரையிட விடுவோம்.
கமல் = வசூல் ஆனா கட்ட மாட்டோமா?


=============

8 இன்ட்டர்வ்யூவில்

மிஸ்.உங்க பேர் என்ன?
A கீதா
அடல்ட்ஸ் ஒன்லி கீதாவா?
நோ. அடமன்ட் கீதா


===============

9 மிஸ் ! என் ஜோக் எப்டி?

ஆஹா!,வாட் எ ஜோக்? WHAT a joke?
அய்யய்யோ அது ஏ ஜோக் இல்ல.யு ஜோக் தான்.நான் பரிபூரண சைவ ரைட்டர்ங்க


==============

10 சரக்கடிச்சவன் எப்பவும் இளிச்சுட்டே தான் இருப்பான்.தெரியுமா?
ஓ! லிட்டருக்கு எவ்வளவு ஸ்மைலேஜ்! :)"

===============

11 டியர்! எனக்கு வைத்த அத்தனை செல்ல பெயர்களையும் உன் மனைவிக்கும் வெச்சியா?
ச்சே! ச்சே! எந்தப்புருசன் தன் சொந்த சம்சாரத்தைக்கொஞ்சி இருக்கான்

==============

12 நம்ம ஊரு சினிமாவில் பன்ச் பேசுற மாதிரி ஹாலிவுட் ல உண்டா ?
வீட்டுக்கு வீடு வாசப்படி ,ஐ ஆம் வெய்ட்டிங் கூட ஹாலிவுட்பஞ்ச் தான்்

==============

13 முதலிரவில் மாப்-டியர்.லைட்டை அணைக்கட்டுமா?,உன்னை அணைக்கட்டுமா?
உத்தம பத்தினி கவுரி = நீங்க எதை.அணைச்சா என்ன? அதான் ஆல்ரெடி முடிஞ்சிடுச்சே?


=============


14 டியர், காலைல  எந்திரிச்சதும்  டெய்லி ஐ லவ் யூ  சொல்லனும்.

நேத்து  நைட் தான்  எந்தப்பொய்யும்  சொல்லக்கூடாதுனு சத்தியம் வாங்கினே?


=====================

15  டியர், என்னைத்தவிர  வேற  யாரையாவது  லவ்  பண்றீங்களா?

 அய்யய்யோ, இந்தக்கேள்விக்கு  என்ன  பதில்  சொன்னாலும்  வம்பாச்சே?


================


16  மாஸ்டர், புரோட்டோ  போடும்  முன்  எதுக்கு  விளக்குமாற்றால்  தோசைக்கல்லை  சுத்தம்  பண்றிங்க? 
மேடம், இது  ஆம் ஆத்மிக்கான  புரோட்டாங்க


================\


17  மேடம், உங்க  புருசன்  பேரு  பாரி வள்ளலா?

 இல்லையே?  ஏன் கேட்கறீங்க?

  எப்போப்பாரு FB ல  ஒப்”பாரி”யா  இருக்கே  உங்க  ஸ்டேட்டஸ்


====================


18  டியர், மென்மையா என்னை கலாய்ச்சா நான் தப்பா நினைக்க மாட்டேன்.
நீ நினைக்க மாட்டே,உங்கப்பா முறைப்பாரே, அதான் யோசிக்கேன்


=================

19 டாக்டர்!House Surgeon அப்டினா டோர் டெலிவரி மாதிரி வீட்டுக்கே வந்து ஆப்பரேசன் பண்ணுவீங்களா?
யோவ், அப்போ ஹவுஸ் ஒயிஃப்னா வீட்ல மட்டும்தானா?


===============

20 டியர்! நமக்குப்பிடிக்காத வேலைகளை சலித்துக் கொண்டு செய்கின்றோம்! ஏன்?
ஏன்னா ரவையை சலிக்காம உப்புமா செஞ்சா செல், புழு சேர்ந்திடும்


=================