Friday, May 22, 2015

திறந்திடு சீசே - சினிமா விமர்சனம்
டைரக்டர்  ஷங்கர்  சார்  பட்டறையில் இருந்து  உருவானவர்னு சொன்னப்பவே மைல்டா  டவுட் இருந்துச்சு , ஏதோ  ஃபாரீன் படத்துல இருந்து  உருவின கதைன்னு , படம் போட்ட  10 வது  நிமிஷமே  இது நம்ம  கல்ச்சர்க்கு சம்பந்தமே  இல்லாத கதைனு கன்ஃபர்ம் ஆகிடுச்சு.


ஹீரோயின்  ஒரு சரக்கு பார்ட்டி , தன்  காதலன்  கிட்டே  இனி குடிக்கவே மாட்டேன்னு  சத்தியம்  பண்ணிட்டு  லாஸ்ட்  டைமா  ஒரே  ஒரு வாட்டி  தண்ணி  அடிச்ட்டு  வந்துடறேன்னு  என்னமோ  போரிங்க்  பைப்ல தண்ணி  அடிக்கப்போறவ மாதிரி  நைட்  கிளப் க்கு நடு  ராத்திரி தனியா  வந்துடறா.

நைட் க்ளப்ல  சர்வர் ( பேரர்) வேலை  பார்க்கும் 2 பேரு  எப்படியாவது  இவளை  கரெக்ட்  பண்ணிடனும்னு பார்க்கறாங்க .

போதை தெளிஞ்ச  பின்  பார்த்தா  ஹீரோயின்  கற்பை  காணோம். ஹீரோயின்  அப்படியே பதறிடறா.க்ளப்ல  1000 பேரு  வருவாங்க  போவாங்க , யார்?னு எப்டி  கண்டுபிடிக்கப்போறா?னு  நினைச்சா  டக்னு  உங்க  2 பேர்ல  யாரோ  ஒருவர் தான்  என்னை  ரேப்பியவர்னு அசால்ட்டா சொல்றா.
இந்த  2  பேர்ல  யார்  ஹீரோயினை  ரேப்பினாங்க? என்பதுதான்  கதைனு நீங்க  நினைச்சா அது  தப்பு . அங்கே யும்  ஒரு  ட்விஸ்ட்  இருக்கு.  க்ளைமாக்ஸ் ல  வில்லனோட  சம்சாரத்தை  ஹீரோவை  ரேப்  பண்ணச்சொல்லி  துப்பாக்கி  முனைல  வில்லி  மிரட்டுது . என்ன  குழப்பமா  இருக்கா? அதான்  இந்தப்படத்தோட  டர்னிங்  பாயிண்ட் . இந்த  கேவலமான  திரைக்கதையை எழுதிட்டு  சால்ஜாப்க்கு  கடைசில  குடிகாரர்கள்  திருந்தனும்னு  ஒரு நீதி வேற  சொல்றாங்க, அடேய் 


ஹீரோவா யாரோ  ஒரு  வீணாப்போன ஆள் , வில்லன்  கம் ஹீரோவா படத்தோட  தயாரிப்பாளர் வீரவன் ஸ்டாலின் . இவருக்கு  நடிப்பு  வருதோ  இல்லையோ  நல்லா  ரேப்  பண்ண வருது 


ஹீரோயினா தன்ஷிகா .ராமன்  ரேப்பினாலும்   ,  ராவணன்  ரேப்பினாலும்  எனக்கொரு கவலை  இல்லை , நான் தாண்டா  என் மப்புக்கு  ராணி  அப்டினு பாடும்  அசால்ட்  கேரக்டர் , க்ளைமாக்ஸ்  ல ஒரு ட்விஸ்ட்டும் உண்டு . உங்க  ட்விஸ்ட்டுல  கொண்டு  போய்  கொள்ளி  வைக்க 

சைக்யாட்ரிஸ்ட்  டாக்டரா  அச்சு அசல்  டிக்கெட்  மாதிரி  ஒரு ஆண்ட்டி , அது  ட்ரீட்மெண்ட் அப்டிங்கற  பேர்ல  என்ன என்னமோ   கூத்து  பண்ணுது .அநேகமா  அது  ஃபைனான்சியரா  இருக்கலாம்.

 வில்லனோட காதலி கம்  மனைவியா   அஞ்சனா அப்டினு  ஒரு ஃபிகரு . சம்பளம்  டெய்லி  நாலணா  தான்  கொடுத்திருப்பாங்க  போல .   ரொம்ப பாவமா  ஒரு நடிப்பு 


 படத்தில்  ஒளிப்பதிவு  , இசை ம்  எல்லாம்    சுமாரிலும்  சுமார்  ரகம் 

மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1  ஹீரோயின் = நான் தண்ணி அடிப்பேன் தம் அடிப்பேன்.ஆனா நீங்க நினைப்பது போல் அந்த மாதிரி கேரக்டர் கிடையாது # தி சீ ( அடேங்கப்பா)


2 நீ ஏன் என் முகத்தைப்பார்த்து பேச மாட்டேங்கறே?

நான் ஒரு சென்ட்டிமென்ட்டல் இடியட்.யாருக்காவது சோகம்னா என்னால தாள முடியாது # தி சீ3 குடிக்கத்தானே வேலை செய்யறோம்,ஏன் குடிக்கற இடத்துலயே வேலை செய்யக்கூடாது?னு பப்ல சேர்ந்துட்டேன் -வில்லன் # தி சீ
 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1 ஏ படமாம்.கிகி.இது தெரியாம உள்ளே வந்துட்டேனே # திறந்திடு சீசே


2  காதலன் கழட்டி விட்டுட்டான்னு 3,பொண்ணுங்க நைட் கிளப் ல சோகமா தண்ணி அடிக்கறாங்க.அடேங்கப்பா # தி சீ

3 நைட் க்ளப்பில் பப்பில் சரக்கடிச்ட்டு மப்பில் இருந்த ஹீரோயினை யார் ரேப் பண்ணாங்க?இதை கண்டுபிடிப்பதே கதை.உலகப்படம் # தி சீ

4 நாயகி = என்னை ரேப்னது யார்?னு சொல்லிட்டா அவனை மட்டும் சுடுவேன்.இல்லை 2 பேரையும் ஷூட் பண்ணிடுவேன் ,10 நிமிஷம் டைம் #,இடைவேளை # தி சீ

5 வில்லன் ஹீரோயினை ரேப் பண்றதுக்கு முன் 10 நிமிஷமா மசாலா கடலை சாப்டுட்டு இருக்கான்.அடேய் # தி சீ


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்1  போஸ்டர்  டிசைன்  அருமை , பார்க்கறவங்க 10 % பேர்  நல்ல படம்னு  நம்பி  ஏமாந்து  தியேட்டருக்கு  வந்துடுவாங்க 


2  ஹீரோயின்  தன்ஷிகா கிட்டே  இது  உங்க  லைஃப் டைம் கேரக்டர் அப்டினு  ஏதோ  ஒரு பொய்யைச்சொல்லி  நடிக்க  ஒத்துக்கிட  வெச்சது 


3  தயாரிப்பாளர்  தான்  ஹீரோனு  தெரிஞ்ச பின்  எந்த அளவுக்கு அவர் கேரக்டரை  ஷைனிங்க்  ஏத்தி  விடனுமோ அந்த  அளவு  ஏத்தி  விட்டு பர்ஃபார்மென்ஸ்  காட்டுனது  அபாரம்   இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  வெற்றி  விழா  படத்தில்  ஒரு ஃபேமஸ்  டயலாக்  உண்டு . கமல்  ஒரு சீன்ல  “ எனக்கு  கார்  ஓட்டத்தெரியுமா?  தெரியாதா? என்பதே  எனக்குத்தெரியாதும்பார் , அது  மாதிரி   இதில்  வில்லன்  நான் ரேப்பினேனா? இல்லையா?ன்னே  எனக்குட்தெரியலைங்கறான் . ஏன்? டயர்டா  இருக்குமே? நகக்கீறல்  உடம்பில்  இருக்குமே? அதில்  தெரியாதா?  ( ஹீரோயின்  வில்லன்  முதுகில்  நகத்தால்  கீறிடறா )


2  க்ளைமாக்ஸ் ல  ஒரு சொதப்பல்  சீன் . வில்லன்  தான் உயிருக்கு  உயிரா லவ்வின  காதலி  கம்  மனைவியை  துப்பாக்கி  முனையில்  வில்லனின்  நண்பன் வலுக்கட்டாயமா   ரேப்பச்சொல்லி   ஹீரோயின்  சொல்லும்போது  எந்த  ஒரு  புருசனும்  டக்னு  பாய்வான் , வில்லன் என்னடான்னா  நண்பன் கிட்டே  டேய் டேய்  ரேப்பிடாதடா அப்டினு  கெஞ்சிட்டு  இருக்கான் 3  முன்  பாதி  முழுக்க  முழுக்க  டிராமா போல்  காட்சி  அமைப்பு 4  குடியோட  தீமைகள்  சொல்வதுதான்  இயக்குநரின்  கடமை  எனில்  யாரும்  குடிக்காதீங்க  அப்டினு  மெசேஜே அனுப்பி  இருக்கலாம் . இப்படி  ஒரு மரண  மொக்கையைக்கொடுத்திருக்க  வேண்டாம் சி  பி  கமெண்ட் =திறந்திடு சீசே 18+ = குடிகாரர்கள் பார்க்க வேண்டிய ரேப் த்ரில்லர் = மரண மொக்கை - விகடன் மார்க் =25 ,ரேட்டிங் = 2 / 5

ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 25 குமுதம்  ரேங்க் ( கணிப்பு)= போர்  ரேட்டிங் = 2 / 5டிஸ்கி = டிமாண்ட்டி காலனி - சினிமா விமர்சனம்


0 comments: