Friday, May 01, 2015

வை ராஜா வை - சினிமா விமர்சனம்ஹீரோ  ஐ டி கம்பெனில ஒர்க் பண்றாரு . அவருக்கு  ஒரு லவ்வர்   ஒரு  ஃபிரண்டு  கம்பெனில  அவரோட  ஹையர் ஆஃபீசர்  மேட்ச்  ஃபிக்சிங்க் ல 10லட்சம்  ரூபா  தோத்துடறாரு. விட்டதைப்பிடிக்க  ஹீரோ  உதவியை நாடறாரு


ஹீரோ சாமான்யமான ஆள் இல்லை   100வது நாள் நளினி போல்  , அழகிய தமிழ் மகன் விஜய் போல்   பின்னால  நடப்பதை  முன்னாலயே  சொல்லிடும்  சக்தி  பெற்றவர் . உடனே  பின்னால  திரும்பிப்பார்க்காதீங்க .எதிர்காலத்தைக்கணிப்பதில்  அவர்  வில்லாதி வில்லன்ஹீரோ  அந்த  10  லட்சம்  போக எக்ஸ்ட்ரா  51  லட்சம்  சம்பாதிச்சுத்தர்றாரு,
 உடனே  வில்லனுக்கு டவுட் ,. என் முன்னால  மேட்ச்  ஃபிக்ஸ்  பண்ணிக்காமின்னு  சவால் விடறாரு , கவுரிக்கே  சவுரியா?  கல்பனாவுக்கே  ஹீரோ  பேனாவா?  அப்டினு   ஹீரோ   அந்த  சவால்ல ஜெயிக்கறாரு 


 வில்லன்  செம  ஷாக் ஆகிடறார். ராதிகா ஆப்தே  வாட்சப்  வீடியோ  பார்த்து  ஷாக்  ஆனது போல் .


 இடைவேளை

 இதுக்குப்பின்  வில்லன் ஹீரோவை  எப்படி  யூஸ்  பண்ணிக்கறார்? ஹீரோ ஹீரோயினை  யூஸ்  பண்ணாமயே ஏன் இருக்கார்? வில்லன்  ஹீரோயினை  எப்படி  யூஸ்  பண்றார்   என்பதை  திரையில் காண்க 

ஹீரோவா  கவுதம்  கார்த்திக்  , ஓப்பனிங்  சாங்கில்   மகேஷ்  பாபு போல்  , விஜய்  போல்  டான்ஸ்  எல்லாம் ட்ரை  பண்றாரு . படம்  பூரா  சோகமுகமாவே  வ்ர்றாரு  ரிசல்ட் முன் கூட்டியே  தெரிஞ்சுக்கிட்டார்  போல . கொஞ்சம்  அப்பா கார்த்திக்  நடிச்ச  மவுன ராகம் , உள்ளத்தை  அள்ளித்தா  படங்களை  எல்லாம்  பார்த்தா  ஒரு மனுஷன்  எப்பவும் எப்படி உற்சாகமா  முகத்தை வெச்சிருக்கனும்னு கத்துக்கலாம்.


ஹீரோயின்  ப்ரியா ஆனந்த் . அபாரமான  டிரஸ்சிங்  சென்ஸ் . இயக்குநர்  ஒரு பெண்   என்பதால் ரொம்ப ரிலாக்ஸா  வர்றார் . இயக்குநர்  ஆணாக இருந்தா இன்னும் ரிலாக்ஸா வருவாரோ ? இவரது  கூந்தல் அழகு அருமை ,மீரா சிகைக்காய் ஷாம்பு  போட்டுக்குளித்த தாரா போல்  அலை அலையான  கூந்தலுடன் இவர்  டூயட் காட்சிகளில்  பளிச் . இவரது  விழி  ஈர்ப்பு  விசை  நம்மை  புவி ஈர்ப்புவிசைக்கு எதிராய்  தடுமாறி  விழ வைக்கிறது.மாநிற  அழகி.ஆனா  என்ன  ஒரு ட்விஸ்ட்னா  படத்தில்  நாயகிக்கு  வேலை இல்லை

வில்லனா டேனியல்  பாலாஜி .இவரது  ஓப்பனிங்  சீனில் இவருக்கு  கிடைக்கும்  ஆடியன்ஸ்  அப்ளாஸ்  மிரள வைக்கிறது. ஹீரோ , ஹீரோயின் க்குக்கூட  இவ்ளவ் அப்ளாஸ்  இல்லை.  எல்லாம்  வேட்டையாடு விளையாடு  மகிமை .ஆனால் திரைக்கதையின்  வீரியம்  கம்மியால்  இவரது  கேரக்டர்  போகப்போக  சுமார்  ஆகிவிடுகிறது . இவர்  பங்களிப்பில்  எந்தக்குறையும் இல்லை

  காமெடிக்கு  விவேக்  , மனோபாலா .  விவேக்  முகம்  எல்லாம்  உப்பி  ஊர்வசி  அக்கா கல்பனாவுக்கே அண்ணன்  போல்  இருக்கார்  . உடல் நலனில் டயட்டில் கவனம் தேவை.  காமெடி  சுமார்  ரகம்  தான்


 சதீஷ்   ஆங்காங்கே  சந்தானம்  டைப்பில் ஒன்லைனர்கள்  வெச்சிருக்கார் . ஓக்கே


 படத்தின்  முக்கியமான ஆறுதல்  யுவன்  ஷங்கர்  ராஜா தான்  . பின்னணி  இசையில்  பட்டாசைக்கிளப்பறார். பாட்டு  சுமார்  தான்

ஒளிப்பதிவு  பக்கா . எடிட்டிங்  ஓக்கே  . எல்லாம் இருந்தும்  திரைக்கதையில் சுவராஸ்யமான  திருப்பங்கள்  இல்லாதது  பெரிய  மைனஸ்

மனதைக் கவர்ந்த  வசனங்கள்

ஏதோ தப்பு நடக்கப்போகுதுனு என் உள்ளுணர்வு சொல்லுது.


ஓ அதுக்கு ப்ரியா ஒத்துக்குவாளா?# vrv2 சார்.எப்பவும் பிரெஸாவே இருக்கீங்க?

டெய்லி குளிச்சா நீங்க கூட FRESHஆக இருக்கலாம் miss


சார்.FBல இருக்கீங்களா?

நோ.வேற வேலை நிறைய இருக்கு.
ஈவ்னிங் ட்விட்டர்ல?
நோ.அப்போ குவாட்டர்ல


இவர் தான் சைடு டிஷ்
வாட்?
சாரி.சதீஷ்


5  டான்ஸ் ஆடறவங்க எல்லாம் விஜய் ஆக முடியாது .பைக் ஓட்றவங்க எல்லாம் அஜித் ஆக முடியாது -விவேக்


6  ஏன்டி போன வாரம் தானே மேரேஜ் ஆச்சு?அதுக்குள்ளே டைவர்சா?சைக்கிளுக்குக்காத்து அடிச்சாக்கூட 10 நாள் நிக்குது.ஆனா.,


7  சார்.கார் கீயைப்பாத்தீங்களா?

கார்க்கி வைரமுத்து வீட்ல வயலின் வாசிச்ட்டு இருப்பாரு


சார்.போன் வந்திருக்கு.

அதை உக்காரச்சொல்லுங்க


9  ஒரு  பொண்ணு   கிட்டே  ரகசியம்  சொல்வதும் ஒரு  லட்சம்  பேருக்கு எஸ் எம்எஸ்  அனுப்புவதும் 1 # வை ரா வை


10  பார்ட்டிக்கு  ஏண்டா  என்னைக்கூப்பிடலை?

 பசங்க தண்ணி அடிப்போம்

  ஏன்? நான் அடிக்கமாட்டேனா? # வை ரா வை

11 விவேக் -  குள்ள வெட்டுன்னா என்ன?

மனோபாலா =  ஷார்ட் கட்டைத்தான்   அப்டி  தூய தமிழ்ல சொன்னேன்


12  தனுஷ் ( கொக்கிகுமாரு) = யாருடா  இங்கே  போண்டா?
எடுபுடி = தலைவா, அது  போண்டா இல்ல , பாண்டா # வை ரா ஜா வை


 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


வை ராஜா வை =,119 நிமிடம் தான்.ரொம்ப சிறுசு.ஐஸ் வர்யா தனுஷ் இயக்கம்


2 ஹீரோயின் ஓப்பனிங் சீன் நைட்டி போட்டுட்டு வருது.அய்யகோ


3 கவுதம் கார்த்திக்கும் விஷாலும் 1 ,முகம் கழுவாம இருப்பாங்க போல


4 ஐஸ்வர்யா தனுஷ் அழகிய தமிழ் மகன் பார்க்கலையா? திரைக்கதை சாயல்


5 ஹீரோயின் ஆல்ரெடி படு பாதாள லோ ஹிப் லெக்கின்ஸ் போட்டிருக்கு.டூயட் ல ஹீரோ அதைப்பிடிச்சு இன்னும் இறக்கி விடுறாரு.கார்த்திக் பையனா கொக்கா?


6 சரக்கு அடிச்ட்டு சைடு டிஷ்க்குப்பதிலா சதீஷ் கொசு பேட் நாக்கில் தொட்டு ஷாக் வாங்கிக்கறாரு


7 யுவன்.ஷங்கர் ராஜா பிஜிஎம்மில் பின்றார்


8 வில்லன் டேனியல் பாலாஜிக்கு செம அப்ளாஸ்


9 பி சி  செண்ட்டர் ரசிகர்களைக்கவராத  திரைக்கதை  வை ராஜா வை இடைவேளை


10   சி செண்ட்டர்  ரசிகர்களுக்கான வை  ராஜா வை  இந்த வாழ்க்கை  ஒரு பொய்  பாட்டில் எஸ் ஜே சூர்யா . யுவன்  செம குத்து
11


ஐஸ்வர்யா  தனுஷ்க்கு  லொள்ளு ஜாஸ்தி , பாண்டா அப்டினுஒரு கேரக்டரை  காமெடியன் ஆக்கி  இருக்கு
’’’

12  விவேக்  பெண் வேடத்தில்   எம் எஸ்  பாஸ்கர் சிவாஜி  கெட்டப்பில்  உன்னை 1 கேட்பேன்  பாடல் காட்சிக்கு அபார அப்ளாஸ்13  ரஜினி வாழ்க்கை  பூரா கஷ்டப்பட்டு  நடிச்சு சம்பாதிச்ச  பணத்தை எல்லாம்  பொண்ணு  இப்படி  காசை  கரியாக்குது.அய்யோ பாவம் # வை  ராஜா வை ஃபிளாப்  இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  போஸ்டர்  டிசைன் , யுவன் சங்கர்  ராஜா  பிஜிஎம் , ஒளிப்பதிவு   எல்லாம் பக்கா


2  டாப்சி , பிரியா ஆனந்த்  இருவரும்  கிளாமருக்கு .   ஒரு  பொண்ணா  இருந்தும்  கூட  இயக்குநர்  இளைஞர்களின்  நாடித்துடிப்பை  அல்லது  ஏதோ ஒரு துடிப்பை அறிந்து  டூயட் காட்சியில்   ப்ரியா ஆனந்த் துள்ளிக்குதித்து ஓடி வருவதை கேமராவில் அள்ளி எடுத்து  பதிவு  பண்ணி  இருக்காரு


3  ஹிந்திப்ப்டமான  ஹேப்பி  நியூ  இயர்  , ஹாலிவுட்  படமான 21  படங்களின்  ரீமிக்ஸ்  உல்டாவோ என எண்ண வைத்த  விளம்பரங்கள்  படத்தின் எதிர்பார்ப்புக்கு பிளஸ்

4   தனுஷ்  வரும் க்ளைமாக்ஸ்  காட்சி அதகளம்.  எம் ஜி ஆர்  போசில் கத்திச்சண்டை  யத்தனிப்புக்கு  ரசிகர்கள்  மத்தியில் செம வரவேற்பு 

இயக்குநரிடம்  சில கேள்விகள் 1  வேலைக்கு  சேர்ந்த  முதல்  மாசத்துலயே  கம்பெனில  50  லட்சம்  ரூபா பர்சனல்  லோன்  கிடைச்சுது எனப்பொய்  சொல்வதை   ஹீரோவோட அப்பா ஏன்   ஆஃபீஸ்க்கு  ஃபோன் செய்து  கிராஸ்  செக் பண்ணலை?


2  எதிர்காலத்தில் நிகழ்வதை  முன்  கூட்டியே  தெரியும்  அவர்  தெளிவா  இப்படி  எல்லாம்  தெரியாது . கொஞ்சம்  கொஞ்சம்  கனவு  போல்  மங்கலா  தான்  தெரியும்  . இ எஸ் பி  பவர்  பற்றிய  படங்கள்  சிலவற்றைப்பார்க்கவும்


3  ஹீரோக்கு  எதிர்காலம்  பற்றித்தெரியுமே , பின்  ஏன் ஹீரோயின்  கோவிச்ச்ட்டுப்போகும்போது  பம்மனும் .எப்படியும் வருவாருனு  தெரியுமில்ல. அசால்ட்டா விட்ற வேண்டியதுதானே?


4 அழகிய  தமிழ்  மகன், நூறாவது நாள்  படங்களில்  எல்லாம்  விறுவிறுப்பான சஸ்பென்ஸ்  காட்சிகள்  இருந்தன. இதில்  ஏனோதானோ திரைக்கதைசி  பி  கமெண்ட் =  வை ராஜா வை = முன் பாதி மொக்கை , பின் பாதி மரண மொக்கை,அட்டர் ஃபிளாப்  படம் - விகடன் மார்க் = 39 , ரேட்டிங் = 2.25 / 5. ஏ  செண்ட்டர்ல  10 நாள்  ஒடும் . பி சி  யில் அது  கூட ஓடாது. அநேகமா  இன்னைக்கு  நைட்டே சக்சஸ்  மீட்  வெச்சுடுவது  நல்லது. லேட் ஆக ஆக  மக்களுக்கு  மேட்டர்  தெரிஞ்சுடும்ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -  39 குமுதம்  ரேங்க் ( கணிப்பு) =  சுமார் ரேட்டிங்  = 2.25 / 5


 ஈரோடு  தேவி அபிராமியில்  பட்ம்  பார்த்தேன்

0 comments: