Saturday, May 30, 2015

ஓ.பி.எஸ். விரைவில் ஹாட்ரிக் அடிக்க வாழ்த்து்

1  திரிஷா எளிமை என்னை கவர்ந்தது: ஓவியா...#,ஆமா ரொம்ப எளிமையா இருப்பாங்க.ஜாக்கெட்க்கு பதிலா டாட்டு போட்டிருப்பாங்க


===========

2 ஜெயலலிதா விடுதலையான மகிழ்ச்சியில் தலைகீழாக நடந்த யோகா மாஸ்டர்.# அய்யய்யோ.அப்போ இவர் நேரா.நடக்கும்போது ஜெ உள்ளே போய்டுவாரா?


==============

3


ஒரே ஆண்டில் 18 நாடுகளுக்கு சென்றதுதான் பிரதமர் மோடியின் சாதனை -சீதாராம்யெச்சூரி # அப்போ 5 வருசத்தில் 90 நாட்டுக்குத்தான் போக முடியுமா?============


4 #தல56 ல் அஜித் டாக்சி ட்ரைவர்

//# ஹீரோ டாக்சி டிரைவரா வந்த படம் ஹிட்.ரஜினிக்கு படிக்காதவன்.கார்த்தி க்கு பையா============

5 ஜெ.மீது சர்வதேச விசாரணை எடுக்க வேண்டும் - கிருஷ்ண சாமி #இப்டியே பேசிட்டிருந்தா உங்களை பெயில் ல தான் எடுக்கனும்.அம்மா பத்தி தெரியுமில்ல?


============

6 பொதுமக்களின் 20 ஆயிரம் டன் தங்கத்தை திரட்ட ம அரசு புதுமையான திட்டம் # எங்க கிட்டே இருப்பதைப்பிடுங்குவதில் என்னத்த புதுமை வேண்டிக்கிடக்கு?


================

7 டுவிட்டருக்கு எதிராக ஆபாச பட நடிகைகள் போர்க்கொடி; ஒரு கோடி கணக்குகளுக்கு மூடுவிழா..# மூட வேண்டியதை மூடாம அக்கவுண்ட்டை மூடி என்ன பயன்?


==============

8 கைதியுடன்'36 வயதினிலே'படம் பார்த்த விவகாரம்: 3 போலீசார் சஸ்பெண்ட் # ஆல்ரெடி 16 வயதினிலே பார்த்தப்ப எஸ் ஆகி 36ல மாட்டிக்கிட்டாங்களாம்


===============

9 ஜீரோக்களால் ஹீரோக்களை கண்டுபிடிக்க முடியாது’ ராகுல் காந்திக்குBJPபதிலடி # எல்லா ஹீரோவும் ஒருநாள் ஜீரோ.எல்லா ஜீரோவும் ஒரு நாள் ஹீரோ


===============


10 ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தீ வைத்து எரித்து கொலை: மனைவி ஆத்திரம் #7 பேரைப்போட்டுத்தள்ளிய 7 1/2

================

11 குடும்பம் நடத்த மறுத்த கணவன் உட்பட 7பேரை எரித்து கொன்ற மனைவி..# நடத்த முடிஞ்சவங்க வேற யாரையாவது ட்ரை பண்ணி இருக்கலாமில்ல?


===============

12 எனது சாவுக்கு டாக்டர் மற்றும் திருமணமான ஆண்களும் காரணம்; நடிகை ஷீகா ஜோஷியின் தோழி பரபரப்பு வாக்குமூலம்..# அய்யய்யய்யோ.நாங்க என்ன செஞ்சோம்?


================

13 தியேட்டரில் கைதியுடன் சினிமா பார்த்த இன்ஸ்பெக்டர் உள்பட

4 போலீசார் பணி இடைநீக்கம்# ட்யூட்டி டைம் ல சினிமா பார்ப்பதே தப்பு.கைதி கூடவா?"==============

14 5 மணிநேரத்தில் 10 லட்சம் ஃபாலோயர்கள்: கின்னஸ் சாதனை படைத்த ஒபாமா# அப்போ எங்க இளையதளபதியை விட அவர் அவ்ளோ பெரிய அபாடக்கரா?

=============

15 சட்டசபை தேர்தலில் அசைக்க முடியாத சக்தியாக மதிமுக உருவெடுக்கும்: வைகோ.# உயிர் இல்லைன்னா டெட்பாடில அசைவு இருக்காதுனு சூசகமா புரிஞ்சுக்கனும்


============

16 தாலி எடுத்து கொடுக்க சென்று மணமகளுக்கு திடீரென தாலி கட்ட முயன்ற சுப்பிரமணிய சாமி| # நல்ல வேளை.கல்யாண முகூர்த்தத்துக்கு மட்டும் தான் அழைப்பு


============


17 இனி எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு 0 அல்லது +91 போட தேவையில்லை! #,சும்மா டி போட்டுக்கூப்ட்டாலே போதுமா?பொண்டாட்டி கோவிச்சுக்காது?


==============

18 2வது முறையாக 'முதல்வர்' பதவியை ராஜினாமா செய்கிறார் ஓ.பி.எஸ். # விரைவில் ஹாட்ரிக் அடிக்க வாழ்த்து்


============

19 பொதுச் சொத்துக்களை தொண்டர்கள் சேதப்படுத்தினால் தலைவருக்கும் தண்டனை # பாதிப்பு வரிசை 1 ராம்தாஸ் 2 கலைஞர் 3 ஜெ


===============

20 பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்; # பெரியார் பிறந்த மண்ணுடா


==============

0 comments: