Tuesday, May 12, 2015

ரஜினி ரஞ்சிதா கூட படம் பண்ணப்போறாராமே?ஓடுமா?

1
டாக்டர்,வெளிச்சம் பார்த்தால் கண் கூசுது. ஏன்னு தெர்ல .

மேடம், லைட்டை ஆஃப்  பண்ணிட்டேன்.இப்போ கூசுதா?ன்னு பாருங்க
============

2 டியர்,லிப்கிஸ்வேணும், அர்ஜெண்ட்
வெட்கமா இருக்கு, கண்ணை மூடிட்டுத்தான் குடுப்பேன் பேக்கு , கண்ணை மூடிக்கிட்டா உதடு எங்கேனு எப்டிதெரியும்

===========3 டியர், நீ என்னை 4 பேர் முன்னால மரியாதை இல்லாம வாடா போடான்னு கூப்பிடுவியா?
ச்சீய், போங்க, அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்


=============


4 பைங்கிளி =சந்தேஷமா நிம்மதியா இருக்கனும்னா லவ் பண்ணுங்க கல்யாணத்துக்கப்பறம்:)
கிளிஜோசியக்காரன் = ஏம்மா, அப்போ புருசன் ஒத்துக்கமாட்டானே


=============

5 ஃபுல்மீல்ஸ் அப்டினு எழுதி  இதை கவிதைங்கறியே?

படிச்சதும் மனசெல்லாம் நெறஞ்சு போற மாதிரி ஏதாச்சும்  சொல்லுன்னியே?


======================


டாக்டர்! நோய் நொடி இல்லாம சந்தோசமா வாழ என்ன செய்யனும்?
உங்க வாட்ச்ல இருக்கும் நொடி முள்ளை ரிமூவ் பண்ணிடுங்க


=====================

7 உச்சி வெயில்ல எப்படித்தான் கவிதைலாம் எழுத முடியுதோ :-///////


அது  சிம்ப்பிள். நைட்டே  எழுதி  ஸ்டாக் வெச்சுக்குவோம், ஃபிகர் வந்தா ரிலீஸ்


==================

8 வாராவாரம்  என்  சினிமா விமர்சனத்தை  1000 ரூபாய்க்கு  வித்துடுவேன்

 ஓஹோ, விமர்சன வித்தவன்ன்னு சொல்லுங்க 


====================


9  டியர், நீ  ஏன் என்னை விட்டு வெகுதொலை  சென்று விடுகிறாய்?

ஏய் லூசு, அப்பத்தானே  நான் ஆஃபிஸ்  போக முடியும்?


====================


9 டியர், உங்களை  நான் லவ் பண்றேனா? இல்லையா?னு டவுட்டா இருக்கு.

 என்னடி? உத்தம  வில்லி மாதிரி  சொல்றே. தெளிவா சொல்


================


10  மிஸ்!என் லவ்க்கு  ஓக்கே வா?னு ரிசல்ட் இன்று சொல்றென்னீங்களே?

ம்ம்  மதியம்  சொல்றேன்

 என்னம்மா? உத்தம வில்லன் ரிலீஸ் டைம் போல் சொல்றே?


=====================

11 சார்,  உங்க படத்துல  அத்தனை  குழந்தைங்களை வெச்சு  எப்டி வேலை வாங்குனீங்க?சிரமமா இல்ல?

  சம்பளம் தரத்தேவை இல்ல. ஆரஞ்சு  மிட்டாய்தான்


===================
12 உன் கிட்டே  இனி  பேச மாட்டேன்

 சரி , 10 அடி  தள்ளி  நின்னு பேசு


==================


13 dr! தூங்கறதுக்கு முன்னாடி இருந்த பிரச்சனை தூங்கி எந்திரிச்ச பிறகும் அப்படியே இருக்கு..
ஏம்மா,  தூங்கி  எந்திரிச்சா பிரச்னை  சால்வ்ஆகிடுமா================

14   உத்தம வில்லன்  மலையாள  டப்பிங்க்  டைட்டில்  ஐடியா ?ஒரு கள்ளக்காதலரின் கடைசி தருணங்கள்


=========================

15  ராதா =  சிம்பு  படம்  ரிலீஸ் ஆகுமா? ஆகாதா?

 கமல் = ராதே என் ராதே  வா ராதே , படம்  சொன்னபடி வாராதே=================


16  டியர், குப்பையை  கூட்டி அள்ளிக்கொட்டாம  ஏன் ஒளிச்சு வைக்கறீங்க?
 என் கவிதையை  உன்னைத்தவிர  யாரும் படிக்கக்கூடாதுனுதான்


==================

17 
ரகசியம் பேசத்தான் போனேன் காது செமையா இருந்துச்சி கிஸ் பண்ணிட்டேன் நல்ல வெளை , பம்பரம் விடப்போகலை


==============

18 டாக்டர்.பால்ல தேன் கலந்து சாப்ட்டா SOUND SLEEP (ஆழ்ந்த உறக்கம்) வருமா?
வாயைத்திறந்த வாக்கில் தூங்குனா குறட்டை வரும்.அதே சவுன்ட் ஸ்லீப்தான்===============


19 சார், ரஜினி  ரஞ்சிதா கூட  படம்  பண்ணப்போறாராமே?ஓடுமா?

யோவ், அது  ரஞ்சிதா இல்ல/  மெட்ராஸ்  இயக்குநர்  ரஞ்சித். ஓடிடு இங்க இருந்து


==============================


20  வாயாடி =நடு மண்டைல நங்குன்னு ஆணி அடிக்கணும் போல இருக்கு

நீங்களே  அடிச்சுக்கறீங்களா?  எனி ஹெல்ப் மாலினி?


===================


0 comments: