Tuesday, May 26, 2015

மாஸ் (எ) மாசிலாமணி -இயக்குநர் வெங்கட்பிரபு நேர்காணல்

‘‘பொதுவாக என் குழந்தைகளை மனதில் வைத்துத்தான் முதலில் கதையை எழுது வேன். அதன்பிறகு அந்தப்படத்தில் அஜித், சூர்யா மாதிரி நாயகர்கள் சேரும் போது கதையை அவர்களுக்கான இமே ஜுக்கு ஏற்றார்போல் மாற்றுவேன். ‘மாஸ்’ படத்தின் கதையும் அப்படித்தான். முதலில் இருந்தே குடும்பம், குழந் தைகளின் உலகம் என்று படம் அவர்களுக் கானதாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டே உருவாக்கினேன்’’ என்று கலகலப்பாக பேசத்தொடங்குகிறார், இயக்குநர் வெங்கட்பிரபு.
சூர்யா, நயன்தாராவை வைத்து வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘மாஸ்’ படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அவரைச் சந்தித்தோம்.
‘அஞ்சான்’, ‘பிரியாணி’ படங்களுக்கு பிறகு நீங்களும் சூர்யாவும் வெற்றியைக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற சூழ் நிலையில் இருக்கிறீர்கள். ‘மாஸ்’ எப்படி வந்திருக்கிறது?
கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால் எல்லா போட்டிகளிலும் 100 ரன்கள் எடுக்க முடியுமா என்ன? அப்படித்தான் சினிமாவும். நாங்கள் நிறைய வெற்றி களை கொடுத்திருக்கிறோம். அதே நேரத்தில் சில சமயங்களில் சில விஷயங்களை சரியாக கொடுக்க முடியாமல் போயுள்ளது. நாங்கள், எங் களின் ஏரியா, களம் ஆகியவற்றை உணர்ந்து ‘மாஸ்’ படத்தை எடுத்துள் ளோம்.
வெங்கட் பிரபு - யுவன் கூட்டணி என்றால் பாடல்கள் எப்போதுமே தனி அடையாளம் பெற்றுவிடுகிறதே?
சின்ன வயதில் இருந்தே நாங் கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டவர்கள். நான் இயக்குநராக அடையாளம் பெறுவதற்கு முன்பே யுவன் இசையமைப்பாளராக பெரிய கவனத்தை ஈர்த்தவர். ‘சென்னை 28’ படம் வெளிவந்தபோது யுவன் சங்கர் ராஜாவைத் தவிர நாங்கள் எல்லோருமே புதியவர்கள். தியேட் டருக்கு ரசிகர்களை அழைத்து வந்ததே யுவன்தான். தொடர்ந்து நாங்கள் இணையும் போது வெற்றிப் பாடல்களாக அமைவதற்கு கடவுளின் ஆசிர்வாதம்தான் முக்கிய காரணம்.
‘மாஸ்’ படத்தின் முன்னோட்டத்தை பார்த்தால் ஒரு வித கிளாஸியான பார்வை தெரிகிறதே?
படத்தில் எதார்த்தம் அதிகமாக இழையோடும். அதே நேரத்தில் படத்தின் கலர், ஷங்கர் சார் படத்தில் வருவது போல் இருக்கும். அதற்கு முக்கிய காரணம் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர். அவருடைய மெனக் கெடல் இந்தப்படத்துக்கு பெரிய பலம். மற்றபடி இது பேய் படமா? ஆக்‌ஷன், திரில்லர் வகையா? என் றெல்லாம் நிறைய சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது. அதற் காகத்தான் டீஸரைக்கூட அப்படி, இப்படி இருக்கட்டும் என்று ரிலீஸ் செய்திருந்தோம். எல்லோருக்கும் பிடித்த கமர்ஷியல் விஷயங்கள் கொண்ட படமாக இது இருக்கும்.
படத்தில் நயன்தாராவின் பங்களிப்பு பற்றி அதிகம் தெரியவில்லையே?
திறமையான நடிகை. ‘கோவா’ படத்தில், கவுரவ வேடத்தில் நடிக்க வேண்டும் என்று போனில் கேட்ட தற்கே, மறுக்காமல் வந்து நடித்து கொடுத்தார். இந்தப் படத்தில் நாய கியாக எந்த அளவுக்கு ‘மாஸ்’ காட்ட வேண்டுமோ, அந்த அளவுக்கு சிறப்பாக நடித்துக் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் வெளிவரும் படங்கள் பெரும்பாலும் மற்றொரு படத்தின் காப்பியாகவோ அல்லது பாதிப்புடனோ இருக்கிறதே?
தேநீர் கடைக்குச் செல்கிறோம். அங்கே ஒரு விஷயத்தை நான்கு நண்பர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள். அடுத்து, ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது அதில் ஒரு சில இடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத் தும். அதை பெரிதாக்கி நம் வாழ்க் கையோடு இணைத்து ஒரு படைப்பாக கொடுக்க முயற்சிக்கிறோம். இது இயல்புதான். சிறு வயதில் ‘ஜட்ஜ் மெண்ட் நைட்’ என்றொரு படத்தை பார்த்தேன். நான்கு பேர் ஒரு கும்பலிடம் மாட்டிக்கொள்வார்கள். அந்தப் படம் அப்படியே மனதில் இருந்தது. ‘சரோஜா’ படம் எழுதியபோது அந்த தாக்கம் வந்து ஒட்டிக்கொண்டது. ஆனால், அதை எழுதும்போது மீண்டும் அந்தப்படத்தை பார்க்க வேண் டும் என்று தோன்றவில்லை. சின்ன வயதில் மனதில் பதிந்த அந்த நினைவை மட்டும் வைத்து எழுதி னேன். இங்கே நம் ஸ்டைலில், எப்படி சொல்ல வேண்டுமோ அந்த விதமாக சொன்னோம். இதுவும் ஒருவித இன்ஸ்பிரேஷன்தான்.
பெரிய பட்ஜெட் படங்கள்தான் சிறிய முதலீட்டு படங்களை வெளிவர விடுவதில்லை என்று கோலிவுட்டில் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளதே?
சிறிய பட்ஜெட் படங்களை திரை யரங்குக்கு சென்று பார்க்க ரசிகர்கள் தயாராக இல்லை. அதுதான் முதல் பிரச்சினை. இங்கே மக்களை திரையரங்குக்கு கொண்டு வருவதே பெரிய வேலையாக இருக்கிறது. இதுபோன்ற சூழலில் ஒரே நாளில் ஏழெட்டு சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆனால் என்ன செய்ய முடியும். ‘சென்னை 28’, ‘சரோஜா’ படங்களை ரிலீஸ் செய்ய பெரிய சிரமங்களை நாங்களும் எதிர்கொண்டோம். படத்தை விற்க முடியவில்லை. யுவனின் இசை பிடித் திருந்ததால் ரசிகர்கள் உள்ளே வரத் தொடங்கினார்கள். அப்படி உள்ளே வந்தவர்களுக்கு படம் பிடித்ததால் அது சரியான இடத்தை போய் சேர்ந்தது.


நன்றி = த இந்து

0 comments: