Tuesday, May 12, 2015

சிங்கப்பூர்லதான் அந்த வர்ஷாப்புள்ள இருக்கு, கண்டுபிடிச்சுட்டேன்

1  பணக்காரர் வீட்டுக்குழந்தைக்கு ட்யூசன் எடுக்க அவர்கள் வீட்டுக்கே ஆசிரியர் போவது லட்சுமி வீட்டுக்கு பணியாளாய் சரஸ்வதியை நியமிப்பது போல்==============2 ஆண்களுக்கு அபிமான நடிகை என்பது பத்தோட 11,பெண்களுக்கு அபிமான நடிகர் என்பது அவர்கள் ஆதர்ச நாயகர்.============3 எல்லா அம்மாக்களின் பாதங்களிலும் பணி வெடிப்பு இருக்கும்.ஒரு அம்மாவின் முகத்திலும் குழந்தைக்கு பணிவிடை செய்வதில் களைப்பு இருக்காது
===========4 உன் உழைப்பாலோ அதிர்ஷ்டத்தாலோ நீ கோபுர உச்சிக்குப்போய் விட்டால் முதலில் உன் பெற்றோரை உடன் அழைத்துச்செல்.=============5 உனக்கு முன்னால் நடந்து செல்லும் பிகர் உன்னைத்திரும்பிப்பார்க்க வேண்டுமா? சும்மா கை தட்டு போதும்=============6 கமல் படம் ஓடவில்லை எனில் இழப்பு கமலுக்கு அல்ல.அது மக்களின் ரசனைக்கான வீழ்ச்சி
=============7 பெண்களே! கூந்தல் நுனியை வளர்ச்சிக்காக அமாவாசை அன்று கட் பண்ணி விடுங்க.கூந்தல் வளரும்.கட் அழகி மருவி கட்டழகி பட்டமும் கிட்டும்===============
8 அறிவு ஜீவிகளை விட தம் உள்ளத்துக்கு நெருக்கமான எளிமையானவர்களையே இந்த உலகம் கொண்டாடும்.உதா = கமல் ,ரஜினி
===========9 நரை முடி மறைக்க டை அடிச்சுக்கோ இல்லை டூ விட்ருவேன் என்ற காதலியின் செல்ல மிரட்டல் தான் டூ ஆர் டை / டை ஆர் டூ
==============10 அழகான தப்பு என்பது என்ன?

அழகான காதலியின் சம்மதத்துடன் செய்யும் சைவத்தப்பு # முத்தம்

=============

1 1 கவிதை ஏதோ சொல்லுறேனியே எங்க?? :P"னு பிகர் கேட்டா நீயே ஒரு கவிதை .உன் கிட்டே எப்டி சொல்ல இன்னொரு கவிதை?ம்பான் நெட் தமிழன்


==============

12 தமிழ் நாட்டில் உள்ளூரில் இருக்கும்போதே 10 நிமிசத்துக்கு 11 பொண்ணுக்கு குட்மார்னிங் வைப்பவனா சிங்கப்பூர் போய் சில்மிஷம் பண்ணாம இருப்பான்/ர்


==============

13 தோல்வி  அடைந்தால்  அவமானம்  என்று  நினைப்பதுதான்  பல போட்டிகளில் பலர்  பங்கேற்காததற்குக்காரணம்.உண்மையில் பங்கேற்புதான் முதல் வெற்றி


============

14 ட்விட்டர்ல/ FBல  இருக்கற பொண்ணுங்க பாதிப்பேர் ( அவங்க ) கன்னத்துல கைவெச்சாமேனிக்குதான் இருக்காங்க, வீட்ல  பெரியவங்க எதும்  சொல்லமாட்டாகளா?


=================

15  பெண்களுடனான  விவாதத்தில்  மென்சன் போட்டு பேசும்போது  ஒருமுறைக்கு  இரு முறை  உங்கள்  வாக்கிய  அமைப்பு , பிழையற்ற  தமிழ்  இவற்றை  செக்செய்க


==============


16  உலகில் மிச்சமுள்ள  ஒரே ஒரு  ரயில் எஞ்சின் டிரைவர் தான்தான் னு நினைச்சுக்கிட்டு என்னயா நான் இல்லாமவே ஒரு ட்ரேன் ஓடிட்ருக்கும்பார் தமிழச்சி


===================


17 உங்களுக்குக்கீழ் பணி புரிபவர்களுக்கு உங்கள் உடையே மரியாதை ,கண்ணியம் தரும் காரணி ! பின் உங்கள் மவுனம்.


===============

18 நேர்முகத்தேர்வுக்குச்செல்கையில் உன்னிடம் இருக்கும் சிறந்த.உடையை உடுத்து.உன்னிடம் இருக்கும் சிறந்த திறமையை பின் வெளிப்படுத்து

==================

19 பிடிக்கிறதோ,இல்லையோ உங்கள் உயர் அதிகாரிக்கு தினம் ஒரு வணக்கத்தை வைத்து விடுங்க.உங்கள்.வன்மத்தை வணக்க்த்தில் வெளிப்படுத்தத்தேவை இல்லை

===============

20 இந்தப்பொண்ணுங்க எல்லாம் திடீர்னு அண்ணா குட் நைட் னு சொல்லிடறாங்க.அண்ணானு கூப்பிட்ட பின் அது எப்டி குட் நைட் ஆகும்? ஞே!

==============


0 comments: