Friday, May 15, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 15/5/ 2015 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை


36 வயதினிலே

புறம்போக்கு பொதுவுடைமை
சோன்பப்டி
லயன் (தெலுங்கு) (14 5 15)

பேயுடன் ஒரு பேட்டி காம பிசாசு

MADMAX FURY ROAD
# 15 5 2015


தியேட்டர்கள் கிடைக்காததால் சோன்பப்டி இன்று ரிலீஸ் இல்லை
36 வயதினிலே படம் பெண்களுக்கு அப்படி என்ன ஸ்பெஷல்? - Cineulagam
36 வயதினிலேநீண்ட இடைவேளைக்கு பிறகு ஜோதிகா நடிப்பில் வெளிவரும் படம் என்பதையும் தாண்டி பல விஷயங்கள் இந்த 36 வயதினிலே படத்தில் உள்ளது. ஜோதிகா தமிழ் சினிமாவில் யாருமே நிரப்ப முடியாத ஒரு இடத்தில் இருந்த போது, திருமணமாகி குடும்ப வாழ்வில் இணைந்தார்.
ஆனால், ஜோதிகாவை தமிழ்நாடு மக்கள் எப்போது மீண்டும் திரையில் பார்ப்போம் என காத்திருந்தனர். அவர்களுக்காகவே மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற How old are you? படத்தின் ரீமேக் உரிமையை சூர்யா வாங்கி ஜோதிகாவை நடிக்க வைத்துள்ளார்.
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோதிகா, ‘நம் திருமணத்திற்கு பிறகு பெயருடன் கணவர் பெயரும் இணைந்து விடுகின்றது, பிறகு நம் வாழ் நாள் முழுவதும் அவர்களுக்காகவே தான் இருக்கின்றோம், அதில் எந்த தவறு இல்லை, நம் குழந்தைகளை கவனித்து அவர்களை நல்ல முறையில் வளர்க்க வேண்டும்.

ஆனால், நம்மை 20 வருடங்களாக வளர்த்த நம் தாய், தந்தை பெயருக்கு என்ன செய்தோம் என்பதே இப்படத்தின் மைய கரு’ என்று கூறியிருந்தார். அவர் சொல்வதை கொஞ்சம் உற்று நோக்கினால் புரியும். இத்தனை நாட்கள் திருமணமான பெண்கள் அனைவரும் குடும்பம், குழந்தைகள் என இருந்து தங்கள் பெற்றோரை மறந்து சராசரி பெண்களை போல், ஏதோ சாதனை என்ற வார்த்தையே அவர்களுடையே அகராதியில் இல்லாதது போல் தான் வாழ்கின்றார்கள்.
அவர்களுக்கான படம் தான் இந்த 36 வயதினிலே, திருமணம் ஆன ஒவ்வொரு பெண்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது, அதுமட்டுமில்லாமல் திருமணம் ஆகாமல் இருக்கும் இளம் பெண்கள் கூட, பின்னாளில் யோசிப்பதற்கு பதிலாக தற்போதே நாம் செய்ய வேண்டிய சாதனைகள் நிறையவுள்ளது என கண்டிப்பாக இந்த படம் நினைக்க தூண்டும். பெண்களுக்கு பெருமை சேர்க்கும் இந்த 36 வயதினிலே படத்தை பார்க்க தவறாதீர்கள். உங்கள் வாழ்விலும் ஒரு மாற்றம் ஏற்படலாம்


‘36 வயதினிலே’ படத்தின் பாடல் வெளியீட்டிற்குப் பிறகு, ஜோதி காவைப் பேட்டி எடுப்பதற்காக அனைத்து ஊடகங்களும் வரிசைகட்டி நிற்கிறார்கள். ஆனால், ஜோதிகா முன்னணி நாயகியாக இருந்த காலத்தில் இருந்தே ஊடகங்களுக்கு அவ் வளவாகப் பேட்டி அளித்தது இல்லை. இப்போதும் அதே மாதிரிதான் இருக்கிறார்.

தன்னுடைய கணவர் தயாரித் திருக்கும் படம் என்பதால்தான் இசை வெளியீட்டு விழாவிற்கே வந்தார். ஆனால், தற்போது இருக்கும் காலகட்டத்தில் ஒரு படம் மக்கள் மத்தியில் எளிதாகச் சென்றடைய வேண்டும் என்றால் அதற்கு ஊடகங்களின் உதவி கண்டிப்பாகத் தேவை என்பதை அறிந்த ஜோதிகா, அவர்களைச் சந்திக்க கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார். ஆனால், அதற்கு நிபந்தனை விதித்துள்ளார். அதாவது, இரண்டு தொலைக்காட்சி மற்றும் இரண்டு தமிழ்ப் பத்திரிகை தவிர வேறு யாருக்கும் பேட்டி கொடுக்கமாட்டேன் என்று கூறிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றிற்கு ஜோதிகா பேட்டி அளித்திருந்தார். ஜோதிகா இப்படியிருக்க சூர்யாவோ எங்கு சென்றாலும் ‘36 வயதினிலே’ படம் பற்றிதான் வாய் வலிக்காமல் பேசிக்கொண் டிருக்கிறார் என்கிறது கோடம் பாக்க வட்டாரம்..


2  
'புறம்போக்கு என்கிற பொதுவுடைமை'.
'இயற்கை',' ஈ', 'பேராண்மை' படங்களுக்குப் பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் 'புறம்போக்கு என்கிற பொதுவுடைமை'.
இப்படத்தின் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தை எஸ்.பி.ஜனநாதனின் ‘பைனரி பிக்சர்ஸ்’ நிறுவனமும், ‘யுடிவி’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. வர்ஷன் இசையக்க படத்துக்கு என்கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். புறம்போக்கு திரைப்படம் தொழிலாளர் தினமான மே1-ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு இதே நாளில் கமல் ஹாசனின் ‘உத்தம வில்லன்’ படமும் ரீலிசாகும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் அன்றைய தினத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள ‘வை ராஜா வை’ படமும் களமிறங்கவிருக்கிறது. அதில் ‘உத்தம வில்லன்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருப்பதால் இப்படம் மட்டும் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. இதனால் வேறு வழியில்லாமல் ‘புறம்போக்கு’ படத்தின் ரிலீஸ் தேதியை மே 15-க்கு தள்ளி வைத்திருக்கிறார்கள் அப்படக் குழிவினர்.


3   சோன்பப்டி -  பெண் இயக்குநர். அதுவும் சினிமாவை ஒரு உதவி இயக்குநராக இருந்தெல்லாம் கற்றுக் கொள்ளாமல், நேரடியாக கேள்வி ஞானம் மூலமே கற்று களமிறங்கியிருக்கிறார் இந்த மதுரைக்காரப் பொண்ணு! எஞ்ஜினியரிங் பட்டதாரி.. கோல்ட் மெடலிஸ்ட். படித்த படிப்பை வைத்து வேலை தேடாமல், எப்போதும் பரபரப்பாக ஏதாவது ஒரு பணியை ரசித்து செய்ய வேண்டும் என்று ஆசையாம் சிவாணிக்கு. தாத்தா ஜீவரத்னம் ஒரு சினிமா தயாரிப்பாளர். 

அம்மாவோ கதாசிரியர். பிறகென்ன... சினிமா ரூட்டையே பிடித்துவிட்டார். அம்மா எழுதிய ஒரு கதையை சோன்பப்டி என்ற பெயரில் படமாக்குகிறார் சிவாணி. 'யாரிடமாவது போய்த்தான் சினிமா கற்க வேண்டும் என்றில்லை சார். நான் நேரடியாக பல இயக்குநர்களிடம் பேசியிருக்கிறேன். அந்த அறிவைக் கொண்டே படமும் எடுத்தேன். காட்சிகளைப் பார்த்த என் எடிட்டர் தணிகாசலம்... அட அறிமுக இயக்குநர் மாதிரியே இல்லையேம்மா," என்று ஆச்சர்யப்பட்டார். இது போதாதா?" என்கிறார் சிவாணி. கதை எழுதியதோடு, மகள் இயக்கும் படத்தைத் தயாரிக்கவும் செய்கிறார் சிவாணியின் அம்மா. இந்தப் படத்தில் வழக்கு எண், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களில் நடித்த ஸ்ரீ ஹீரோவாக நடிக்கிறார். நிரஞ்சனா ஹீரோயின். கதை என்ன என்று கேட்டால், "படம் மிகவும் சுத்தமான ஒரு குடும்ப பொழுதுபோக்குப் படமாக இருக்கும். அடிதடி, சண்டை.. அட ஒரு கொசுவைக் கொல்லும் அளவுக்குக் கூட வன்முறை இல்லாமல் இருக்கும்ங்க," என்கிறார் சிவாணி. நல்லது.. வாழ்த்துகள்!


தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் லயன்.
இதில் நாயாகிகளாக த்ரிஷா, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்துள்ளனர். சத்யதேவ் இதனை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் பாலகிருஷ்ணா போலீஸாக நடித்துள்ளார். நடிகர் பாலகிருஷ்ணாவின் 98வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மணிசர்மா இசையமைத்துள்ளார். ருத்ரபதி ரமணா ராவ் தயாரித்திருக்கிறார்.

தெலுங்கு திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இப்படம் உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கிறது. இதனிடையே படம் குறித்து லேட்டஸ்டாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகை த்ரிஷாவிற்கும், நடிகர் பாலகிருஷ்ணாவிற்கும் நெருக்கமான முத்தக்காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளதாம்.
இதுபற்றி இயக்குனர் சத்யதேவ், த்ரிஷாவிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் த்ரிஷாவோ மறுப்பு எதுவும் சொல்லாமல் அந்த காட்சியை நடித்து கொடுத்தாராம். திருமணம் நிச்சயம் ஆனாலும் த்ரிஷாவின் மவுசு குறையவில்லை மாறாக அதிகரித்துள்ளது. அதனால்தான் அவர் இன்னும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

MADMAX FURY ROAD


Mad Max: Fury Road (2015) Poster
An apocalyptic story set in the furthest reaches of our planet, in a stark desert landscape where humanity is broken, and almost everyone is crazed fighting for the necessities of life. Within this world exist two rebels on the run who just might be able to restore order. There's Max, a man of action and a man of few words, who seeks peace of mind following the loss of his wife and child in the aftermath of the chaos. And Furiosa, a woman of action and a woman who believes her path to survival may be achieved if she can make it across the desert back to her childhood homeland. 


பேயுடன் ஒரு பேட்டி காம பிசாசு


இது ஏதோ திகில் காமெடி கில்மா படம் போல. கூகுளில் விபரம் கிடைக்கலை

நன்றீ - தினமணீ  மாலை மலர் ,http://tamil.filmibeat.com/news/sivani-one-more-female-director-debut-with-sonpapdi-192847.html

0 comments: