Wednesday, May 13, 2015

ஒட்டகத்தில் பாலைவனத்தில் பட்டபகலில் கில்மா, அய்யோ அம்மா!!

1  சமுக வலைதளங்களில் என்னை விமர்சனம் பண்ணினால் கேஸ் போடுவேன்-எச்.ராஜா # அப்போ  கோர்ட்ல ஜட்ஜ்  விமர்சனம்  பண்ணுவாரே அப்போ என்ன செய்வீங்க?============

அக்கா என அழைத்தால் பிடிக்கும்!- ஹன்சிகா சிறப்பு பேட்டி # அடங்கொக்கா  மக்கா


========================

3  திருச்சி மலைக்கோட்டைக்கு லிஃப்ட் வசதி: ஆய்வுப் பணியில் அறநிலையத்துறை # சாமியே  படி ஏறிப்போகுதாம், ஆசாமிக்கு லிஃப்ட் வேணுமாம்


===============

வனத்துறை, போலீஸ் அதிகாரிகள் செம்மர கடத்தலுக்கு ஒத்துழைப்பு: விசாரணையில் அம்பலம் # இப்போஎப்டி?தம்மைத்தாமே என்கவுண்ட்டர்ல சுட்டுக்குவாங்களா?

===================


5  காங்கிரஸுடன் கூட்டு சேர தயார்; ஆனால் நாடாளுமன்றத்துக்குள் மட்டும்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியெச்சூரி#  ஹூம், இதெல்லாம் ஒரு பொழப்பு=================

மும்பையில் காவல் உயர் அதிகாரியை சுட்டுக் கொன்று சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை # டார்ச்சர்  பண்ணும்  ஹையர் ஆஃபீசர்களுக்கு ஒரு எச்சரிகை=============================

7  தேர்வு எழுத மாட்டுக்கு அனுமதிச்சீட்டு: காஷ்மீரில் வினோதம் #  ஹால் டிக்கெட்டை தொலைச்சுட்டா நல்ல மாட்டுக்கு ஒரு சீட்டு அப்டிம்பாங்களோ?


=================]
8  ஓடிப்போன காதலி கூட திரும்பி வருவாள் ஆனால் போன கரண்ட் வராது - குஷ்பு # இப்போ  நீங்க  ஆட்சியைக்கிண்டல் பண்றீங்களா?பெண்களைகிண்டல் பண்றீங்களா?=================


9  திமுக தலைமை எழுச்சி பெறுகிறது......
கனிமொழி. #  எழுச்சிக்கலைஞர்  விஜய்காந்த் உடன்  கூட்டணி  என்பதை  பூடகமா சொல்றார் போல 


====================


10 ஒழுங்கா பணம் கூட எண்ணத் தெரியாதவரை கட்டிக்கிட்டு என்ன செய்ய’... கல்யாணத்தை நிறுத்திய பெண்@ உ பி # எண்ணிப்பாருங்கள்.இது தேவையா? மாப்பு


=============

11 சிவகங்கை: கூட்டுறவு வங்கியில் ரூ.1 கோடி நகை கொள்ளை # கூட்டுறவே நாட்டுயர்வுன்னு புரிஞ்சுக்கிட்ட கவர்மெண்ட் திருடன் போல


===============

12 சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யும் இயக்கம் திமுக... ஸ்டாலின் # ஊழல் பண்றதை எல்லாம் மேடை போட்டு சொல்லிட்டா இருக்க முடியும்?


===============

13 குடிபோதையில் வாகனம் ஓட்டினால் இனி  6 மாதம் "மாமியார்' வீடுதான் -செய்தி  # அங்கெயும்  போய்  தமிழன்  மச்சினி எங்கே?னு ஜெயிலர்ட்ட கேட்பான்


===================


14 தமிழகத்தை சீரழித்ததில் திமுகவுக்கும் பங்கு உண்டு- ஸ்டாலினுக்கு அன்புமணி திறந்த மடல்# பாமக வுக்கு  எப்பவும்,  தன்னடக்கம்  ஜாஸ்தி


===================15 ஆம்ஆத்மியை ஒழித்து வி வேண்டும் என்ற கொள்கையை மீடியாக்கள் எடுத்துள்ளன-கெஜ்ரிவால்#உங்க கட்சியை  ஒழிச்சாலும்,கட்சிச்சின்னத்தை ஒழிக்க முடியாது


============================


16  போதையில் இருந்தபோது தவறு நடந்து விட்டது: நீலப்படத்தில் நடித்த செக் ஆசிரியை# இதுல ட்விஸ்ட் என்னான்னா பாப்பா டெய்லி போதைலதான் இருக்கும்


===================

17 இங்கிலாந்தில் மெட்ரோ ரெயில் மீது பி.எம்.டபிள்யூ கார் மோதியது...# கார் ஸ்பாட்லயே XYZ ஆகி இருக்குமே?


===================18 அக்னி நட்சத்திரத்தின் முதல் நாளே 101 டிகிரி வெயில்..# உலகின் ஹையஸ்ட் டிகிரி ஹோல்டர் சூரியன் தான் போல


==================


19 ஜெயலலிதா முதல்வராக வேண்டி கூட்டுறவு வங்கி இயக்குனர் தற்கொலை!# யாருக்கோ சிஎம் பதவி வேணும்னு இவர் ஏன் சிவலோல பதவி அடைஞ்சாரு?

==============


20 ஒட்டகத்தின் மீது இருந்தாலும், கணவருடன் மனைவி உறவு வைக்க வேண்டும்... மத தலைவர் சர்ச்சை பேட்டி # ஒட்டகத்தைக்கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ


==================கோலாலம்பூர்: ஒட்டகத்தின் மீது பயணப்படும்போது, கணவன் கேட்டாலும், உடனே செக்ஸ் வைத்துக்கொள்ள கடமைப்பட்டவர்தான் மனைவி என்று மலேசிய இஸ்லாமிய தலைவர் பெரக் முப்தி தாம் சகாரியா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மனைவியை கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வதை தவறு என்று சட்டத்தில் வரையறுக்க வேண்டும் என்று மலேசியாவில் பெண்கள் ஆதரவு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. மனைவியை பலவந்தம் செய்வது பலாத்காரமாக கருதப்பட வேண்டும் என்பது பெண்கள் அமைப்பின் கோரிக்கையாகும். ஆனால் இதற்கு சகாரியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திருமண உறவுக்குள் நடைபெறும் பாலுறவில் பலாத்காரம் என்ற வார்த்தைக்கே இடமில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், கணவன் ஆசைப்பட்டு கேட்கும்போது, செக்ஸ் வைத்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்லும் உரிமை மனைவிக்கு கிடையாது. ஒட்டகத்தின் மீது பயணித்துக் கொண்டிருக்கும்போது, கணவன் செக்ஸ் வைக்க ஆசைப்பட்டாலும், உடனே அதை நிறைவேற்றுவதே மனைவியின் பணியாகும் என்றுதான் இறைதூதரும் கூறியுள்ளார். மாதவிடாய் சமயத்தில் மட்டுமே மனைவியுடன் உடலுறவு வைத்துக்கொள்ள கூடாது என்று குர்ரான் கூறியுள்ளது. உடல் நலம் சரியில்லாவிட்டாலும், சமீபத்தில்தான் குழந்தை பெற்றிருந்தாலும், கணவருடன் செக்ஸ் வைத்துக்கொள்ள மனைவி மறுக்கலாம். பிற சமயங்களில் கணவனின் விருப்பத்தை மனைவி நிறைவேற்றியே தீர வேண்டும் என்றார். இதுகுறித்து அனைத்து பெண்கள் ஆக்ஷன் சொசைட்டி அமைப்பு இதுகுறித்து கூறுகையில், "மனைவியை கட்டுப்படுத்தும் லைசென்ஸ் கணவரிடம் இருப்பதாக கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. திருமண பந்தத்தில் ஈடுபடுவதாலேயே, ஒரு பெண்ணின் உடலில் அவளுக்கு அதிகாரம் இல்லை என்றும், கணவன் அவளது உடலை உரிமை எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்வதும் சரியில்லை. திருமண பந்தந்தத்தால், ஒரு பெண் தனது அடிப்படை மனித உரிமையை இழக்க முடியாது" என்றுள்ளது.

நன்றி -ஒன் இண்டியா

0 comments: