Monday, May 25, 2015

ஏ தேன் தோட்டத்து ஆவாள் க்குப்போட்டியா

1. ஒரு 23 1/2 வயசுப் பொண்ணு சோப்பு டப்பா ல மொட்டுலி விட்டுட்டு இருக்கு.குழந்தை மனப்பான்மையை வெளிப்படுத்துதாம்.அன்பே ஜெனிலியா!

========

2. தெள்ளத்தெளிவா தமிழ் ல நிஷானு நேம்போர்டு.வெச்சிருந்தாக்கூட டொக் டொக் னு கதவைத்தட்டி மேடம் ,உங்க பேரு நிஷாவா?னு கேட்பான் நெட் தமிழன்

=======

3 பொண்ணுங்க த்தூ னு துப்புனாக்கூட அசராம இன்னொரு முறை துப்புங்கனு ஒன்ஸ்மோர் கேட்கவும் ஒரு கூட்டம் இருக்கு.

=========

4 மென்சனுக்கு பதில் சொல்லும்போது கூட நெட் தமிழன் மென்சன் போட்டவருக்கு எத்தனை பாலோயர்ஸ் இருக்காங்கனு எண்ணிப்பார்த்துக்கறான்.எண்ணிப்பாருங்கள்.

==============

5 எஸ் பி ஜனநாதனின் ஈ படத்தை யாராவது அப்டியே ரீமேக் பண்ணா இந்த உலகம் " ஈ அடிச்சான் காப்பி"னு சொல்லும்

=======

6 அன்று சரத்குமார் சித்தப்பா பெருந்துறை ஈமு கோழி க்கு விளம்பரம் செஞ்சாரு.
இன்று சித்தி ராதிகா சென்னை அமிர்தாவுக்கு விளம்பரம்.அம்புட்டுதான்.

========

7 16 வயசில் இருந்தே பேய்ப்படம் பார்த்துப்பார்த்து நீ பழக்கப்படுத்திக்கொண்டால் திருமணம் ஆன பின் உன் மனைவிக்கு பயப்பட மாட்டாய்!

=========

8. இந்த காதலிங்க (1) எல்லாம் 1 நாள் கூட பேசாம இருக்க முடியாதும்பாங்க.ஆனா ஊடல் காலங்களில் 10 நாள் பேசாம இருப்பாங்க.எப்டி அது மட்டும்?

====

9. பக்கத்து வீட்டில் இருந்து எங்கள் வீட்டை எட்டிப் பார்க்கும் மலர்க்கொடி ,பனிமலர்,பூங்கொடி னு எனக்கும் க்ளிக் போட ஆசைதான்.ஆனா பயம்!

========

10 பஸ்சில் ஏறியதும் மைசூர்சான்டல் ,சந்த்ரிகா ,லக்ஸ் ,லிரில் ,விவா ,சிந்த்தால் சோப்களின் வாசம் மல்லிகை வாசத்தையும் தாண்டி நாசியை ஊடுருவுகிறது

=======

11 தன் துணையிடம் பிணக்கு ஏற்பட்டால் எத்தனை வருடம் ஆனாலும் பெண்ணால் தனியாக வாழமுடியும்.அந்த மனோதிடம் ,மன உறுதி ஆணுக்கு இருக்காது

=========

12 அன்பே!
குமாரசாமி போல் அனுசரித்துப்போகாமல்
குன்ஹா போல் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டாதான் இருப்பேன் என அடம் பிடித்தால் எப்படி?

=======

13 ஏ தேன் தோட்டத்து ஆவாள் க்குப்போட்டியா இன்னும் ஒரு தமிழன் கூட ஏதேன் தோட்டத்து ஆதாம் பாதாம் னு அக்கவுன்ட் ஓப்பன் பண்ணலையா?

==========

14. மனைவியோ ,காதலியோ உங்கள் தன்மானத்தைத்தாண்டி ஒரு படி கூட இறங்கிக்கெஞ்சிக்கொண்டு இராதீர்!

=========

15 சலுகைகள் தரும் சந்தோசத்தில் "நீ பலவீனமானவன்(ள்)தான்" என்று குத்தப்படும் முத்திரைகள் கூட எவருக்கும் உறைப்பதில்லை.

==========

16 FB ல ஒரு பொண்ணு நான் பெங்களூர்க்குப்போறேன் இப்போன்னு ஸ்டேட்டஸ் போட்டிருக்கு.இப்டி மொட்டையா போட்டா தமிழன் எப்டி பாலோ பண்ணுவான்?

========

17 அந்தஸ்த்து பார்க்காமல் பிகரிடம் பழகு..
பந்தோபஸ்துக்கு அண்ணனோ அப்பாவோ உடன் வந்தால் ஓடிவிடு

========

18 காதலியிடம் /மனைவியிடம் சில்மிஷம் செய்யும்போது காலங்காத்தாலயேவா?என சலித்துக்கொண்டால் காலங்காத்தாலயே வா என வம்பு செய்!-கொல்லிமலை சித்தர்

=========

19 ஒருத்தன் வாட்சப் ல வந்து =தா தா அப்டின்னான்.என்னான்னு கேட்டா சமந்தா புது வீடியோ க்ளிப் தா அப்டினு அர்த்தமாம்.அடேய்

========

20 மாடர்ன் மகாலட்சுமி யார் தெரியுமா?தலைக்கு குளிச்சுட்டு நெற்றி நிறைய குங்குமம் வெச்ட்டு சிஸ்டம் முன் அமர்ந்து FB ல ஸ்டேட்டஸ் போடுபவரே!

=========

0 comments: