Sunday, May 31, 2015

டி எம்மில் செப்பிடு வித்தை

1  அன்பே! நீ  என்னை  ஃபாலோ பண்ணிட்டே இருக்கியே? நீ நான் செய்த பாவமா? புண்ணியமா?=============தீவிரமான  கமல் ரசிகன் யார்  தெரியுமா? பாபநாசம்  படத்துல வரும் போலீஸ்  ஆஃபீசர்   ஆண்ட்டிக்கு  கமல் கிஸ் சீன்  உண் டா? என எதிர்பார்பவனே!
==============
நேற்று வரை  மக்கள் முதல்வர் 

 இன்று மாநில முதல்வர்
நாளை மக்கள் முதல்வர் # வாழ்க்கை ஒரு வட்டம்


=============

வெள்ளி அன்று பதவி ஏற்பு , அடுத்த  நாளே சிம்ம ராசியை சனிஸ்வரர் உக்கிரமா பார்க்கறார்

==============

ஒரு ஏ சென்ட்டர் பிகரு டி சர்ட் ல FIXED னு வாசகம் எழுதி வெச்சிருக்கு.நிச்சயதார்த்தம் ஆகி இருக்குமோ?===========6 கரண்ட் ரீடிங் எடுக்கற மாதிரி டெய்லி நைட் படுக்கும்போது எத்தனை பாலோயர்ஸ் ?காலைல எத்தனை அன் பாலோ னு குறிச்சு வெச்சுக்கிட்டிருக்கேன்
=============7 வாழ்க்கைல கோல் ரொம்ப முக்கியம் தான்.ஆனா டபுள் சைட் கோல் /சேம் சைடு கோல் போடக்கூடாது
==============8 தீர்க்க சுமங்கலியாக வாழ நினைக்கும் பெண்கள் குடிகாரனை மாப்பிள்ளையாக ஏற்காதீர்கள்
============9 மரத்தை வெட்டுபவனைக்கூட மன்னிக்கலாம்.ஆனால் உலகில் தூய காற்றை தன் சிகரெட் புகையால் சீரழிப்பவனை மன்னிக்கவே கூடாது=============10 குடிகாரன் தன் உடம்பையும் தன் குடும்பத்தின் எதிர்காலத்தையும் தான் சீரழிக்கிறான்.ஆனால் ஒரு சிகரெட் பிடிப்பவன் உலகில் உள்ள காற்றை சீரழிக்கிறான்
===========11 மோடியின் வெளிநாட்டு பயணங்களால் நாட்டுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்பட்டுள்ளது : அருண் ஜெட்லி"# எந்த நாட்டுக்கு? அவர் விசிட் அடிச்ச நாட்டுக்கா?
==============12 உன் அன்புக்கு உரியவர் உன்னை விட்டுவிலக நினைக்கையில் இது வரை நீ பார்க்காத அவரது இன்னொரு முகத்தைக்காண்பாய்!=============13 புரட்சித்தலைவி நன்றிக்கடன் செலுத்தவேண்டியவர்கள்

1 எம் ஜி ஆர்
2 குமாரசாமி

===============

14 அப்பாக்கள் 2 வகை

1 தான் இருக்கும்போதே தன் சிம்மாசனத்தில் மகனை அமர வைத்து அழகு பார்ப்பவர்
2 அப்படிச்செய்ய மனம் வராதவர்=============

15 லட்சுமியை எப்பாடுபட்டேனும் நீ வளைத்துப்போட்டுவிட்டால் சரஸ்வதி ,நீதி தேவதை ,அதிர்ஷ்டதேவதை மூவரையும் சுலபமாக கரெக்ட் பண்ணிடலாம்

==============

16 ஒரு தனி நபரின் அபிலாஷை ஒரு மாநிலத்தின் தலை எழுத்தையே நிர்ணயிக்கும் சக்தி படைத்தவையாக மாறக்கூடும் #,எம் ஜி ஆர் ,ஜெ

===============

17 அரசாட்சி புரிவோர்க்கு மனசாட்சி சொல்வதைக்கேட்க நேரம் இருக்காது


=============

18 நீ எவ்வளவு பெரிய திருடனாக இருந்தாலும் வெள்ளை வேட்டி , வெள்ளை சட்டை அணிந்து கொண்டால் மக்கள் உன்னை நம்பி ஏமாந்து விடுவார்கள்

==============19 டி எம்மில்  3  பேருகிட்டே  பேசிக்கிட்டே  டி எல்லில் 4 பொண்ணுங்க கிட்டே  பேசுவது  எப்படி? என் ற  செப்பிடு  வித்தையை மாப்பி நீ  செப்பிடு
===================20 நீதிதேவதையை விலைக்கு வாங்கியவர்களைப்பார்த்து காலதேவன் அர்த்த புஷ்டியுடன் சிரிப்பான்


=============

0 comments: