Wednesday, May 20, 2015

8.5% விஷம் தான் கலந்திருக்கு தப்பில்லை

1  டியர், என் கண்ணீரைத்துடைச்சு விட நீங்க தான் வரனும்.
நான் ஆஃபீசில் இருந்து வர 7 மணி நேரம் ஆகும், உங்கம்மாவுக்கு ph பண்ணி இருக்கேன்

===============

2 டேய்.ஏன்டா படிக்கலை?
டாடி.படிச்ட்டு பின் பேசினா படிச்ச திமிர்ல பேசறியா?ம்பீங்க.எதுக்கு வம்பு?


================

3 மிஸ் !,ட்வீட்டப்க்கு திருச்சி வர்றீங்களா?
பொண்ணுங்க யாராவது வந்தா நானும் வர்றேன். இப்டியே 318 பேரும் சொன்னா எப்டி?


=================

4 ஜட்ஜ் = 66 கோடி திருடி இருக்கே,உனக்கு 100 கோடி  அபராதம்
 கைதி = யுவர் ஆனர் , 166 கோடியை உங்களுக்கு குடுத்துடறேன், ரிலீஸ்  பண்ணிடுங்க 


=================


5  தலைவரே! ஜெ ரிலீஸ் ஆனதால  நீங்க  ஏன் சந்தோசமா இருக்கீங்க? 
 இனி நான் அடிச்ச 200 கோடி, ஆ ராசா  அடிச்ச 1 3/4 லட்சம் கோடி எல்லாம் நமக்கே


=================

6 ஜட்ஜ் =  நீதிமன்றத்தீர்ப்பை  விமர்சிக்கக்கூடாது
ஆம் ஆத்மி = சிவாஜி  நடிச்ச  தீர்ப்பு படத்தைக்கூட  விமர்சிக்கலை, இனி, போதுமா?


===============

7  ஜட்ஜ்  அய்யா  நீங்க  ஏன் உத்தம  வில்லன்  ஆனீங்க?

 இனிமே இப்படித்தான்.


=============

8  நீ எவ்ளவ் திருடுனே?
திருடன் 1 = 5000 ரூ உனக்கு 2 வருசம் ஜெயில் , 2500 ரூ அபராதம். நீ? திருடன் 2 = 66 கோடிங்க நீ ரிலீஸ்டு,சி எம்

=============

9 உங்க கிட்டே 250 கோடி சொத்து இருக்கு. எதுக்கு 25 லட்சம் ரூபா லோன் கேட்கறீங்க?
சொத்துக்குவிப்பு வழக்கில் மாட்டினா கடன் இருக்குனு தப்ப

===============



10 தலைவரே! கவலைப்படாதீங்க! நீதி நிச்சயம் ஒரு நாள் வெல்லும்,
என் கவலையே அதுதான். நாங்க மாட்டிக்குவோமோ?


===============

11 16 வயசுல நான் அமலா மாதிரி இருந்தேன்
ஓஹோ அப்போ 32 வயசுல அமலா பால் மாதிரி இருந்தீங்களா? என்னம்மா கலர் கலரா ரீல் விடறீங்க?

================

12 டியர்.நீங்க இதுக்கு முன்னால தப்பு ஏதும் பண்ணலையே?
நீதி அரசர் சொன்னது போல் 10% அளவு அனுமதிக்கப்பட்ட அளவு தப்பு பண்ணி இருக்கேன்


=================


13 கல்தோசை் ஊத்தாப்பம என்ன வித்யாசம்?்
வீட்டில் சுடும் சைசுக்கு இருந்தா அது கல் தோசை.நமீதா ரேஞ்ச்க்கு மொத்தமா இருந்தா அது ஊத்தப்பம்


================


14 யுவர் ஆனர் எனக்கு சாதகமா தீர்ப்பு வேணும்.
10% வெட்டுங்க.உங்க வீட்டுக்கே வந்து தீர்ப்பு சொல்றேன்.நீங்க கோர்ட்க்கே வர வேணாம்


==================

15 ஜட்ஜ் = பட்டப்பகல்ல ஏன் திருடுனே?
கைதி= ராத்திரியோட ராத்திரியா லஞ்சம் குடுத்து ஹோல்சேலா நீதியை வாங்கிடலாம்னாங்க


=============


16 சாமி நம்பிக்கை உங்களுக்கு இருக்கா? இல்லையா?

குமாரசாமி மேல நம்பிக்கை இருக்கு.நன்றி மறக்காதவர்.வாக்கு தவறாதவர்


===============


17 மேடம்,உங்க படைப்பில்  மாஸ்டர் பீஸ் எது?


இதோ இந்தபையன் பாரி, இவனுக்கு நான் சுட்டுப்போடும்  பூரி 2ம்  என்னோட மாஸ்டர் பீஸ் தான்



==================

18   மாப்ளைக்கு 100 கோடி சொத்துன்னு பொய் சொல்லீட்டீங்க.பேங்க் லோன் தான் 100 கோடி வாங்கி இருக்காராம்.
யோவ்.அதான் யா சொத்து.ட்ரெண்ட் தெரியாதா?


==============


19 என் தங்கச்சிட்ட ஐ லவ் யூ சொன்னீங்க்ளா?
சும்மானாச்சுக்கும் முத்தம் குடுத்தீங்களா? சும்மானாஇச்சுக்கும்


===================\\20


20 சார்.இந்த பால் உங்களுக்குத்தான்
குடிங்க. அய்யோ.நான் மாட்டேன்.அதுல விஷம் கலந்திருக்கு. சார். 8.5% விஷம் தான் கலந்திருக்கு.அது தப்பில்லை


===================

0 comments: