Monday, May 25, 2015

வீட்ல வடிவேலு வெளில விஜய்

1  லேடிdr லவ் பண்ணா 3  பயன்கள்
1 மெடிக்கல்  செலவு இல்லை
2 அடிக்கடி  புதுப்புது  நர்சை  சைட் அடிக்கலாம்
3 டிரஸ்  செலவு இல்லை,ஒன்லி ஒயிட் கோட்


==============


தகுந்த  வரன் அமையும் வரை ஒரு அம்மாவின் கவலை  மகளின் மாப்பிள்ளை  பற்றியும் , அமைந்த பின் காலம் முழுக்க மகள்  எப்படி சமாளிப்பாளோ  என்பதிலும்


==============


டிபியில் நான் போட்டிருக்கும் கோட் கோபிநாத் போட்டு மதுரை முத்து போட்டு ஈரோடு மகேஷ் போட்டு பின் துவைத்து அயர்ன் பண்ணி நான் போட்டது


============4 மோசமான ஆண்களால் ஏமாற்றப்படும் பெண்களின் எண்ணிக்கையை விட நல்ல பெண்களால் (சந்தர்ப்ப சூழ்நிலையால்)கை விடப்படும் நல்ல ஆண்களின் எண்ணிக்கை அதிகம்
===========5 அன்பெ லட்டு! நான் உன்னை கட் பண்ணிட்டா ( கை விட்டுட்டா) நீ கட்லட் ஆகி விடுவாயா?
==============
6 அடேங்கப்பா.பஸ்ல ஒரு பிகரு 10*3 சைஸ்ல செவ்வக வடிவ கொண்டை போட்டு 17 க்ளிப் குத்தி இருக்கு.நானா இருந்தா 34 சட்டை காயப்போட்டிருப்பேன்
============7 படிச்சுப்பார்த்து  ட்வீட் பிடிச்சிருந்து ஆர் டி  ஆனா  அது  ஆண்  ட்வீட்,ஆர் டி  பண்ணிட்டுப்பின்  படிச்சுப்பார்த்தா அது பெண்ணின் ட்வீட்

=================8  FBல  ஒரு பொண்ணு  சுடுதண்ணி  சொம்பு  ஃபோட்டோ  போட்டிருக்கு, ஒரு நெட் தமிழன்  உங்களால மட்டும் எப்டி இப்டி டேஸ்ட்டா சமைக்க முடியுது?ங்கறான்
================
9  எதுவும்  எழுதத்தோணலைன்னா மத்தவனெல்லாம்  கம்முனு இருப்பான். நெட் தமிழன்  மட்டும் ”எதுவும்  எழுதத்தோணலையே!”ன்னே  ஒரு ஸ்டேட்டஸ் போடுவான்
=================
10  பறவைகள்  சரணாலயமா ட்விட்டர் மாறிட்டு  இருக்கு -மைனா, பைங்கிளி ,மயில், வண்ண மயில்  வேற  வேற
================11  வாழ்வில் பலர் விட்டேத்தியாய் இருக்கக்காரணம் அவர்கள் அன்புக்கு உரியவர்கள்  விட்டுச்சென்றதால்
=================
12 உன்னிடம்  எனக்குப்பிடித்தது -  என் மனம் படிப்பது

பிடிக்காதது -  அடம்  பிடிப்பது


====================

13 எல்லோரும் அவசியம் தினம் விபூதி)இட வேண்டும் என சன்TVயில் சொல்லும் நெக்லஸ் மங்கையர்க்கரசி நெத்தில கிட்டக்கா போய் பார்த்தேன்.குங்குமம் ஒன்லி.

================

14  புதுமொழி

வீட்ல வடிவேலு
வெளில விஜய்
ஆபீஸ் ல சூர்யா
மாமியார் வீட்ல கார்த்தி # எலி ,புலி,சிங்கம் ,சிறுத்தை


============

15 நான் சின்னப்பையனா இருக்கும்போது பொண்ணுங்க 10 மணிக்கு கடையை சாத்திட்டு கிளம்பினதும் பசங்க நடுநிசிக்கீச்சு போடுவாங்க.இப்போ பசங்க தூங்கிடறாங்க


=================


16 காதலியிடம் சொல்லும் கவிதை க்கு பொய் அழகு.ஆனால் காதலியிடமே பொய் சொல்லாமல் இருக்கப்பழகு


===============17 பெண் தன் வாழ்நாளில் ஒரேமுறை தன் புருசன் காலில் விழுவாள் (கல்யாண மேடை)
ஆண் தன் மனைவி காலில் சண்டை வரும்போதெல்லாம் விழுவான் (வாழ்க்கை மேடை)

===========

18 சென்னிமலை காமாட்சி அம்மன் கோவிலில் மதியம் 12,டூ மாலை 4,அன்னதானம்.பார்சல் தானமும் உண்டு.அடுப்பை ஆப் பண்ணிட்டு அலை கடல் என வருவீர்!

=========

19. இன்னைக்கு சமைக்கத்தேவை இல்லை என்றதும் இந்தப்பொண்ணுங்க முகத்தில் தான் எத்தனை கொண்டாட்டம்

======

20 உக்கார வெச்சுப்பரிமாறுனாலே தமிழன் அன்லிமிட்டட் மீல்ஸ்.2 செட் சாப்பிடுவான்.பபே சிஸ்டமாம்.செத்தாண்டா சிவனான்டி.பார்வதி ஆண்ட்டி

========

0 comments: