Friday, May 22, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 22/5/ 2015 ) 10 படங்கள் முன்னோட்ட பார்வை

1 திறந்திடு சீசே
 2 விந்தை
3 டிமான்ட்டி காலனி
4 சிறுவாணி  
5 நண்பர்கள் நற்பணி மன்றம்
6 கமர்கட்டு
7 BIG GAME
8 SKINTRADE


10 #22 5 2015



1 திறந்திடு சீசே


ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அலாவுதீனின் அற்புத விளக்கு பூதம் போல ஒரு குணம் இருக்கும். இந்தக் குணம் அவர்களது வாழ்க்கையில் அவ்வபோதுதான் வெளிவரும். அது வெளிப்பட்ட நேரத்தில் அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு அதனால் என்ன நன்மை, தீமைகள் நடக்கின்றன என்பதை சுவாரசியம் நிறைந்த திருப்பங்களுடன் சொல்ல வருகிறது இந்த ‘திறந்திடு சீசே‘ திரைப்படம்.
சுதாஸ் புரொடக்சன் சார்பில் தயாரிப்பாளர் சுதா வீரவன் ஸ்டாலின் தயாரிக்கும் இந்த ‘திறந்திடு சீசே’ திரைப்படத்தை அறிமுக இயக்குனர் நிமேஷ் வர்ஷன் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியவர்.
தயாரிப்பாளர் வீரவன் ஸ்டாலின் இப்படத்தை தயாரிப்பதோடு, கதையின் நாயகனாகவும் அறிமுகமாகிறார். மேலும் தன்ஷிகா, அஞ்சனா கீர்த்தி, சி.எஸ்.கே. புகழ் நாராயணன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
குளஞ்சி குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, விஜய்யின் படத் தொகுப்பில், மோகன்ராஜின் பாடல் வரிகளுக்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளர்.
படம் பற்றி பேசிய இயக்குநர் நிமேஷ் வர்ஷன், “ஒரு மனிதன் அவன் இயல்பு நிலையில் இருந்து தவறும்போது ஏற்படும் நிகழ்வுகளை கதைக் கருவாகக் கொண்டு திரைக்கதை அமைத்துள்ளோம்.
இவ்வளவு வித்தியாசமான ஒரு கதையை தயாரிக்க முன் வந்ததோடு, மற்றவர்கள் ஏற்கத் தயங்கும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்த வகையில் தயாரிப்பாளருக்கு என் நன்றி.
தன்ஷிகா ஒரு திறமையான நடிகை என்பதில் யாருக்கும் இரண்டாவது அபிப்ராயம் இருக்கப் போவதில்லை. அதையும் மிஞ்சிய ஒரு நடிப்பை இந்தப் படத்தில் அவர் வழங்கி உள்ளார். சி.எஸ்.கே. புகழ் நாராயண் இந்தப் படத்தில் ரசிகர்களை கவரும் வகையில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அனைத்துத் தரப்பினருக்கும் பிடிக்கின்ற வகையில் முக்கியமாக இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் நகைச்சுவை கலந்த திரில்லர் படமாக இதனை உருவாக்கியுள்ளோம். இப்போது படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. படம் விரைவில் வெளியாகும்..” என்றார்.

2  விந்தை
Vindhai-Movie
காதல் 2014 படத்தையடுத்து அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “விந்தை“.
இந்தப்படத்தில் மகேந்திரன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். இவர் கம்பீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். நண்பர்கள் கவனத்திற்கு என்ற படத்தில் நாயகியாக நடித்தவர். மற்றும் மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், மகாநதி சங்கர், காதல் சரவணன், முத்துக்காளை, சிசர்மனோகர், டெலிபோன் ராஜ், நெல்லை சிவா, டி.ரவி, கவுதமி, செந்தி ஜெகநாதன், ஐசக், ஆதேஷ், சிவநாராயணமூர்த்தி, சுமதி, தவசி, சுப்புராஜ் நடிக்கிறார்கள்.
ரத்தீஷ்கண்ணா ஒளிப்பதிவை கவனிக்க வில்லியம்ஸ் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் லாரா. இவர் ஏற்கெனவே வர்மம் என்ற படத்தை இயக்கியவர்.
படம் பற்றி இயக்குனர் லாராவிடம் கேட்டபோது …..
இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கப் பட்டுள்ளது. சமீபத்தில் கொடைக்கானலில் மகேந்திரன் – மனீஷாஜித் பங்கேற்ற பாடல் காட்சியான “கனவில் ஓர் உருவமே! அது எனக்கு பிடிக்குதே“ என்று இருவரும் ஆடிப் பாட டான்ஸ் மாஸ்டர் சங்கர் நடன அமைப்பில் படமாகப்பட்டது.
இரண்டு மணிநேரம் சிரிப்புக்கு பஞ்சமிருக்காது. இன்றைய சினிமாவே மக்களை எண்டர்டைன் பண்ண வைக்க வேண்டும் என்ற பார்முலாவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. அதை தான் நானும் பாலோ செய்கிறேன். படத்தின் அணைத்து கட்ட வேலைகளும் முடிந்துவிட்டது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார் இயக்குனர் லாரா.

3 டிமான்ட்டி காலனி


வம்சம், மௌன குரு, தகராறு என படத்திற்கு படம் தன் கதாபாத்திரத்தை மாற்றி நடிக்கும் இளம் ஹீரோ அருள் நிதி.
இவர் தற்போது டிமான்ட்டி காலனி என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்க, கிபா இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.படத்தின் ரிலிஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்ப்பாரக்கப்படுகிறது.



 அருள்நிதியின் 'டிமான்ட்டி காலனி' இம்மாதம் ரிலீஸ்
சென்னை,மே 03 (டி.என்.எஸ்) ஒவ்வொரு படத்திற்கும் சில வித்தியாசங்களைக் காட்டும் அருள் நிதி, தற்போது பேய் படம் ஒன்றில் நடித்துள்ளார்.

'டிமான்ட்டி காலனி' என்ற இப்படம், 19-ஆம் நூற்றாண்டில் சென்னையில் ஆழ்வார்பேட்டையில் நடந்த திகில் சம்பவங்களை தொகுத்து, திருப்பங்கள் நிறைந்த படமாக உருவாக்கபப்ட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றிய அஜய் ஞானமுத்து என்பவர் இயக்கியுள்ள இப்படத்தை, மோகனா மூவிஸ் சார்பாக மு.க.தமிழரசு, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

ஆக்ஷன், திரில், சஸ்பென்ஸ், காமெடி என அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக உருவாகியிருக்கும் இப்படம் இம்மாதம் வெளியாகிறது.

இப்படத்தில் அருள் நிதிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார்? என்பதை படக்குழுவினர் சஸ்பென்ஸாக வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ஈரோடு  தேவி அபிராமி , சண்டிகா , அன்னபூரணி யில்  ரிலீஸ் 



4   கமர்கட்டு-
கமர்கட்டு என்ற சினிமாவில் பள்ளி சீருடையில் மாணவனும் மாணவியும் கட்டிபிடித்து இன்னும் பல தவறான பட ஸ்டில்கள் வெளியிட பட்டுள்ளது இது மாபெரும் சமூக சீரழிவு
சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனம் என வாதிடுபவர்கள் எப்படி அதுவே சமூகத்தின் ஒழுக்கத்தை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக மாறும் எனச் சிந்திக்க மறுக்கிறார்கள். ஒருவேளை சினிமா நேரடியாகச் சமூகத்தைப் பாதிக்கிறதென்றால் எப்படி அது வெறும் பொழுதுபோக்கு கருவியாக மட்டும் இருக்க முடியும்? ஓய்வாக இருக்கும்போது புத்தகம் வாசிப்பவர்களுக்கு வாசிப்பது ஒரு பொழுதைக் கழிக்கும் செயலாக இருக்கும். ஆனால், உண்மையில் வாசிப்பு அளிக்கக்கூடியது வெறும் ஒரு பொழுதைக் கழிக்கும் தருணம் மட்டுமா? எல்லாவற்றையும் பொழுதுபோக்கு என மேம்போக்காகச் சொல்லிவிட முடியாது. ஆனால், அதிமுக்கியமான சில செயல்களை ஒரு சிலர் தங்களின் ஓய்வான பொழுதுகளில் மேற்கொள்வதுண்டு. அதற்காக, அவை ஒரு பொழுதுபோக்குக்குரிய விசயமாகக் கருதிவிட முடியாது.


தான் இயக்கும் 'கமர்கட்டு' படத்தின் கதை, 'பசங்க', 'கோலி சோடா', 'வஜ்ரம்' படங்களின் சாயல் சிறிதும் வந்துவிடக்கூடாது என கவனமாக இருக்கிறார் இயக்குனர் ராம்கி (எ) ராமகிருஷ்ணன்.
வழக்கமாக ப்ளஸ் டூ படித்துவிட்டு கல்லூரி போவதற்கு முன்பு வயசு பருவத்திலும், வாழ்க்கையிலும் தடுமாற்றம், தடம் மாற்றம் ஏற்படும் அப்படிப்பட்ட சூழலில் சிக்கித் தவிக்கும் நான்கு பசங்களின் மன வோட்டத்தை மையமாக வைத்து 'கமர் கட்டு' கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேல் படத்தில் மது அருந்தும் காட்சியோ, புகைப் பிடித்தல், காட்சியோ ஒரு இடத்தில் கூட இடம்பெறவில்லையாம். வன்முறை காட்சிகளும் கிடையாதாம். இதற்கே கை குலுக்கலாம்.


ஈரோடு கிருஷ்ணா வில்  ரிலீஸ் 



5 நண்பர்கள் நற்பணி மன்றம்

ஸ்ரீஅண்ணாமலையார் மூவீஸ் என்ற பட நிறுவனம் சரர்பாக சி.மாதையன் தயாரிக்கும் படம் ‘நண்பர்கள் நற்பணி மன்றம்.’
இந்தப் படத்தில் செங்குட்டுவன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அக்சயா நடிக்கிறார். மற்றும் அன்பாலயா பிரபாகரன், இமான் அண்ணாச்சி, ‘ஆடுகளம்’ நரேன், சிங்கம்புலி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ரவி மரியா, முத்துகாளை, மகேந்திரன், நெல்லை சிவா, கூல் சுரேஷ், சார்மிளா, ராதா, ஜார்ஜ் மரியான் என்று பல நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராதாபாரதி. இவர் ஏற்கெனவே வைகாசி பொறந்தாச்சு, கிழக்கே வரும் பாட்டு ஆகிய படங்களை இயக்கியவர். நடிகர்கள் பிரசாந்த், சரவணன் ஆகியோரை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவரும் கூட. ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இப்படத்துக்கு செல்வா.ஆர்.எஸ் ஒளிப்பதிவை கவனிக்கிறார். 
படம் பற்றி இயக்குனர் ராதாபாரதி பேசிய போது, “நட்பு, காதல் இரண்டையும் மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கி உள்ளோம். சமீபத்தில் இந்த படத்திற்காக நட்பை மையப்படுத்தி
‘அண்ணன் தம்பிய கூப்பிட்டுப் பாரு
அக்காவையும் கூப்பிட்டுப் பாரு
மாமன் மச்சான கூப்பிட்டுப் பாரு
மாப்பிளையையும் கூப்பிட்டுப் பாரு
சொந்த பந்தத்தையும் கூப்பிட்டுப் பாரு
உதவின்னு கேட்டுப் பாரு
யாரு வருவாங்கன்னு கேட்டுப் பாரு?
நண்பன கூப்பிட்டு பாரு..!   
உயிரையே கொடுப்பான் பாரு..’ என்ற பாடல் காட்சி நாயகன் செங்குட்டுவன் ஆடிப் பாட படமாக்கப்பட்டது. கலகலப்பான படமாக நண்பர்கள் நற்பணி மன்றம் உருவாகி உள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது..” என்றார் ராதாபாரதி.



 சிறுவாணி

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மருதமலை பிலிம்சின் சார்பில் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் தயாரித்து இயக்கும் சிறுவாணி என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இது பிரபல நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் கைவண்ணத்தில் உருவான காதல் மற்றும் திகில் கலந்து கதை. இந்த படத்தில் நடிகர் சஞ்சய், நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் காதல் ஜோடிகளாக நடிக்கின்றனர்.
இவர்கள் இருவரும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவது போன்ற காட்சியை ஒளிப்பதிவாளர் கே.வி.ராமலிங்கம் படம் பிடித்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்பு குறித்த தகவல் அறிந்து அங்கு இளைஞர்கள் கூட்டம் குவிந்தது. அவர்கள் கதாநாயகி ஐஸ்வர்யா ஐஸ்கிரீம் சாப்பிடும் அழகை ரசித்து பார்த்தனர்.
இந்த படத்தில் இணை இயக்குனராக ராஜ்மோகன், ஆர்ட் டைரக்டராக சந்தோஷ் ஆகியோர் படப்பிடிப்பு பணிகளை மேற்கொண்டனர். ரேஸ்கோர்ஸ் பங்களாவில் புலிவேசம்  ஐசக், வாகை சூடவா, எலிசபெத் உடன் காதல் ஜோடிகள் பங்கேற்கும் காட்சி படமாக்கப்பட்டது.
நடிகர், நடிகைக்கு இயக்குனர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் காட்சிகளை விளக்கி கூறினார். தொடர்ந்து 25 நாட்கள் கோவையின் முக்கிய பகுதிகளில் சிறுவாணி படப்பிடிப்பு நடக்கிறது.

கோவை அ.தி.மு.க. பிரமுகர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் தயாரித்து இயக்கும் படம் ‘சிறுவாணி’. இந்த படம் விரைவில் வெளிவர தயார் நிலையில் இருக்கிறது. இந்த படத்துக்கு ராஜேஷ்குமாரின் க்ரைம் கலந்த கதை ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது.


படத்தில் சண்டைக்காட்சியை ஸ்பீடு சையத் அமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள முழு நீள சண்டைக்காட்சி ‘கில்லி’ பட ஸ்டைலில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஐசக் வில்லனாக கலக்கியுள்ளார்.



அதேபோல மிரட்டும் வில்லியாக சென்னையை சேர்ந்த எலிசபெத் நடித்துள்ளார். ‘தூள்’ படத்தில் சொர்ணக்கா கேரக்டர் போன்று ‘சிறுவாணி’ படத்தில் எலிசபெத்தின் கேரக்டர் பேசப்படும் என்கிறார் டைரக்டர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத்.




7  BIG GAME

When Air Force One is shot down by terrorists leaving the President of the United States stranded in the wilderness, there is only one person around who can save him -- a 13-year old boy called Oskari. In the forest on a hunting mission to prove his maturity to his kinsfolk, Oskari had been planning to track down a deer, but instead discovers the most powerful man on the planet in an escape pod. With the terrorists closing in 

Skin Trade (2014) Poster

Skin Trade (2014)




After his family is killed by a Serbian gangster with international interests, NYC detective Nick goes to S.E. Asia and teams up with a Thai detective to get revenge and destroy the syndicates human trafficking network.



  1. Terrifying apparitions hold a suburban family's youngest daughter captive, forcing the family to seek help from a paranormal expert to save the child before she disappears forever.
10 Yentha Vaadu Gaanie   ( என்னை  அறிந்தால்  தெலுங்கு )

0 comments: