Friday, May 01, 2015

சன்யாசி 4 நாள் பழக்கத்தில் கரெக்ட் பண்ணிய கண்மணி யார்?

1  டியர்!உன் வெறுப்பின் காரணமறியேன்,
என் காதலுக்கு மட்டும் பதில் சொல்!


அட  போம்மா. படிக்கும்போது  டீச்சர்  கேட்ட கேள்விக்கே  பதில்  சொல்லல


============


2 ஏய்  மிஸ்டர்!  நீ எனி ஹெல்ப்  ஷாலினி வகையறாவா? 

  ஹலோ ! ஏகப்பட்ட  உதவி  செஞ்சிருக்கேன். மெனி  ஹெல்ப்  ஷாலினி டைப்


===================


3  மேடம், உங்க  பேரு  கார்குழலியா?

  வாவ்! எப்டி  தெரியும்?

  காரை விட்டு  இறங்கும்பொது  உங்க  சவுரியை  பத்திரமா  கார்லயே  வெச்சுடறீங்களே?====================


4 டியர்! நான்  எப்பவும்  அம்மா செல்லம்.

 அப்டியா?  நான்  உன்னை  அம்மா ஆக்கப்போகும்  செல்லம்!=====================


5  காஞ்சனா - கண்மணி  எது  பெஸ்ட்?

காஞ்சனா  முன்  பாதி  நல்லாருக்கு , கண்மணி முன் பின்  நல்லாருந்தாலும்  முன்னமே  பார்த்த ஃபீலிங்


======================

6  கடவுளே! எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை ,வேதனை, ஊராரின்  போதனை?

 அட போம்மா, உன்னோட பெரிய  ரோதனை! ========================


7  
மேடம், உங்க  வீட்ல  சைல்டு  லேபர்  யாராவது  வீட்டு வேலை  செய்யறாங்களா?

சாரி  சார், என் புருஷன்  மட்டும் தான்  வேலை  செய்யறார்
=================


8 ரொம்ப அமைதியானவங்க எல்லாம் பயங்கர ரொமாண்டிக் கா  இருப்பாங்களா  டாக்டர்?


ஆமா மேடம். இன்னைக்கு  நீங்க  மல்லிகைப்பூ வைக்கல போல?==================


9  கவுரி, அந்தப்புதர் கிட்டே  போகாத.

 அய்யய்யோ, என் பாய்  ஃபிரண்ட்ஸ்  எல்லாரும்  அங்கே தான் வெய்ட் பண்றாங்க.போகலைன்னா  பாவம்  ஏமாந்துடுவாங்க=====================


10 மிஸ்!, காலை வணக்கம் சொல்லி Good night போட்டோவ போட்டிருக்கீங்க"?
இங்கே கொசுத்தொல்லை ஜாஸ்தி.குட்நைட் போட்டா ஓடிடும்


================
11 டியர்.நான் உயிரோட இருக்கும்போதே எனக்கு தாஜ்மஹால் கட்டுங்க.
ம்.உங்கப்பா உயிரோட இருக்கும்போதே உயில் எழுதச்சொல்லு


=================


12 அத்தான்.பிரசவ வைராக்யம்னா என்ன?
வருசா வருசம் சொந்த சம்சாரத்தை பிரசவத்துக்கு ஹாஸ்பிடல் அனுப்பும் வைராக்யம்


====================

13 டியர்.எதுனா பேசு.

நீங்க பேச மாட்டீங்களா?

நான் செயல் வீரன்.பேசிட்டு இருக்க மாட்டேன்.


===================

14 டாக்டர்  ! கொடுக்காப்புளி  அதிகம் சாப்ட்டா  காது  சரியாகேட்காதா?

கொடுக்காப்புளியோ , கோணப்புளியங்காவோ மத்தவங்களுக்குக்கொடுக்காம  சாப்ட்டா கெடுதல்


========


15  சார், உங்க  படத்துல  ஃபாரீன்  பட தாக்கம்  தெரியுதே?

 ஒரு  ரகசியம்  சொல்றேன். இது பாரீன்  பட  தழுவல் தான். யார்ட்டயும்  சொல்லிடாதீக


====================


16  ஜட்ஜ் =மேடம், உங்க  வீட்டுக்காரர்  திருடரா?

கைதி =இதுவரைக்கும்  நீ  திருடுனதே இல்லையா? உத்தமனா இருந்தா மட்டும் கேள்வி  கேள்

===================17  குளத்து மீன்லாம் சாப்ட்டு வருஷ கணக்காகிட்டு

மேடம், ஒரு  பக்கா  பொரி 10  ரூபாதான் வாங்கிப்போடுங்க. சந்தோஷமா  சாப்பிடட்டும்


யோவ்======================


18  ஏன் டேன்ஸ் மாஸ்டர் எல்லாம் குட்டையாதான் இருப்பாங்களா


நெட்டையா இருந்தா ஹீரோயினையே ஆட்டையைப்போட்டுடாறாங்களே?""


==============

19 டேய்.ஏண்டா ரிப்ளை பண்ண லேட்?எவ கூட கடலை?


சாரி டியர்.ஆபீஸ் ஒர்க் .பை த பை நீ ஏன் லேட் ரிப்ளை?
நெட் கட்================

20 ஏய் மிஸ்டர்.4 நாளாதான் உன்னை தெரியும்.ஐ லவ் யூ சொல்றே?


மிஸ்!42 நாள் ல எடுத்த படமே ஹிட் ஆகுது.ஓகே சொல் கண்மணி===================

0 comments: