Thursday, May 21, 2015

சுப்பிரமணியன் சுவாமியை கழுவி ஊற்றிய ட்விட்டர்கள்

நெல்லையில் நடந்த திருமண விழாவை சிறப்பிக்க கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மணமகனிடம் தாலியை எடுத்து கொடுக்கும்போது, யாரும் எதிர்பாராத விதமாக மணமகளின் கழுத்தில் தாலி கட்ட முற்பட்டார். மாப்பிள்ளை உட்பட அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி.
மணமேடையில் சுவாரசியம் கூட்ட விரும்பிய சுப்பிரமணியன் சுவாமி 'அண்டர்-ப்ளே' பாணியில் நகைச்சுவையை அரங்கேற்றினார்.
அது நகைச்சுவைக்கானது என்றாலும், அதன் சீரியஸ் தன்மையை உணர்ந்த சந்திரலேகா, அதிர்ச்சியுடன் சுப்பிரமணியன் சுவாமியை தடுத்து, மாப்பிள்ளையிடம் தாலியை தரச் சொன்னார் பதற்றத்துடன். சிரித்துக்கொண்டே அப்படியே செய்தார் சுப்பிரமணியன் சுவாமி.
இந்த சலசலப்பு மிக்க நகைச்சுவை நிகழ்வின் வீடியோவும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரவியது.
#சுப்பிரமணியன்சுவாமி, #தாலி, #திருமணம் #JustMissedSaami என பல ஹேஷ்டேகுகள் இன்று களை கட்டின.
சுப்பிரமணியன் சுவாமியை சமுக வலைதளங்களில் கலாய்க்க தொடங்கினர் நெட்டிசன்கள். அத்தகைய கலாய்ப்புப் பதிவுகளின் தொகுப்பு...
ட்விட்டரிலிருந்து..
@$#0K ‏@ashoker_UHKH - அண்ணனுக்கு பிடிக்காதது இத்'தாலி மட்டுந்தாம்யா.. அது புரியாம..! #JustMissedSaami.
வரவனையான் ‏@varavanaiyaan - தாலி கட்டுறதே தப்புங்குறோம் இந்தாளு தாலியவே தப்பா கட்டுறாரு :'-)
சி.பி.செந்தில்குமார் ‏@senthilcp - ஜட்ஜ் = மணமகளுக்கு தாலி கட்டி கலாட்டா பண்ணீங்களா? கைதி = கலாட்டா பண்ணது நிஜம்.தாலி கட்ற கெட்ட பழக்கம் எங்க பரம்பரைக்கே இல்லீங்கோ.
ட்விட்டர்MGR ‏@RavikumarMGR - தாலி என்றால் என்னவென்றே தெரியாத நீங்கள் இன்று முதல் சின்னத்தம்பி என்று அழைக்கப்படுவீராக!#சு.சாமி.
anbudan BALA|எஅ.பாலா ‏@AmmU_MaanU - இது போல குழப்பம் வரக்கூடாதுன்னு தானே Mr.வீரமணி தாலி வேண்டாம்னு கதறுகிறார். கேக்கறீங்களா நீங்க ;-)
Mani ‏@manivel45 - #FBcomment #JustMissedSaami மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற சு.சுவாமி. இது அவரது சொந்த முயற்சி.இதற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை - தமிழிசை .
Muthu Gopalakrishnan ‏@muthugtamil - மணமகளுக்கு திடீரென தாலி கட்ட முயன்ற சு.சுவாமி..# மனசுல கொக்கி குமாரு என்று நினைப்பு போல..............
சாதி ‏@rvlkrr88 - மாப்ள இவருதான் ஆனா கழுத்தில் இருக்கும் தாலி கட்ட வந்தது என்னவோ சுவாமி #JustMissedSaami"
அனன்யா ‏@kumaresanvaidee - நல்ல வேளை மாமியார்க்கு தாலி கட்டமா போயிட்டரு! #தாலி.
விஷாலி ‏@visha_t - இனிமே யாராவது கல்யாணத்துக்கு அரசியல்வாதிய தலைமை தாங்க கூப்புடுவிங்க ?!??? #சுசாமி.
சி.பி.செந்தில்குமார் ‏@senthilcp - சார், முகூர்த்தம் 7 மணிக்கு. நீங்க 8 மணிக்கு வந்தாப்போதும். சு சாமி = ஏன்? தாலி கட்றப்ப குழப்பம் வந்துடக்கூடாதில்ல?
துரோணா ‏@guruDhrona- கண்ணதாசா, ஏசுதாஸா மொமெண்ட் #சுசாமி.
Mohamd Khader Meeran ‏@Lightoftrichy - மீண்டும் வராது எனும் போதிலும் சில தருணங்கள் வந்து போனதே வாழ்வில் வரம்.. :-) #justmissedsaami.
Shadow ‏@K7ganapathy -மாப்பிளையின் சுமையை குறைக்க முயன்ற என் தலைவனை பற்றி அவதூறு பரப்புவது கண்டனத்திற்குரியது.
Surendhar ‏@ssurenr - மாப்பிள்ளை சார், நாட்டாம பட மிகசர் கேரக்டர படத்துல தான் பாத்திருக்கேன். இப்ப தான் உண்மையா பாக்குறேன் . #JustMissedSwami
ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து....
கந்தா தங்கராஜ் - ஸ்டாலின் : சூனா சாமி தாலி பக்கத்துலயே வராம பாத்துக்குறது தான் இனி உன் வேல ‪#‎JustMissedSaami.‬
கந்தா தங்கராஜ் - சார் தாலி எடுத்து கொடுக்க சொல்ல உங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கோ, அதே மாதிரி தாலியை எடுத்து கட்டுற உரிமை எனக்கும் இருக்கு ‪#‎JustMissedSaami‬
Balabharathi Mla - என்னய்ய்யா இது! "தாலிக்கு " வந்த புதுபுது சோதனை...


நன்றி - த இந்து


 • மதுரை  
  மப்புல இருந்திருப்பார் தமிழ் நாட்டில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பது டாஸ்மாக் சரக்கு ஒன்று தானே.
  Points
  380
  about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • Gogulaa  
   என்னய்யா இது, ஜெயாவை எதிர்த்து வீராவேசமாக கிளம்பும் ஹீரோக்கள் எல்லாம் முடிவில் காமெடி பீசாகின்றனர், ஒருத்தர் கூட்டமாக டெல்லி சென்று "திரும்ப திரும்ப பேசுற நீ" "திரும்ப திரும்ப பேசுற நீ"ன்னு சட்டய கிழித்துக்கொண்டார், இவர் இப்படி, தளபதியை அன்புமணி கிழித்து தொங்கவிட்டார்.
   Points
   1005
   about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
   • Mohammed Nayeem  
    மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற சு.சுவாமி. இது அவரது சொந்த முயற்சி.இதற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை - தமிழிசை (சூப்பர் கமெண்ட் ஜி "Mani ‏@மனிவெல்45".)
    Points
    8645
    about 5 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
    உகதி · Nandhakumar  Up Voted
    • THAMEEZ Scribbles something comes in mind. 
     எல்லோரும் நீங்க உளருவீங்க அப்படின்னு சொல்லுவாங்க, டுபாகூர் அப்படின்னு கூட சொல்லுவாங்க . இப்பதான் சாம் தெரியுது நீங்க நிதானத்துல இருக்குறதே இல்லை அப்படின்னு.
     about 7 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
     Rasigan  Up Voted
     • உகதி  
      கல்யாணம் முடிந்து உடனே கிளம்பியிருந்தால் நல்லது. வேறென்ன சொல்வது.
      Points
      3080
      about 8 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
      vettupuliveeran  Up Voted
      • D.Thirumalai Kumar  
       இந்து குழுமமும் இப்படி செய்திட்டு மத்த செய்தி குழுமம்போல் வெளியிட்டு நாங்களும் வித்யாசம் இல்லை என வுனர்தீவிட்டது.
       Points
       19435
       about 8 hours ago ·   (0) ·   (4) ·  reply (1) · 
       kilikkaadu · prabu · vettupuliveeran · Rasigan  Down Voted
       • உகதி  
        கல்யாணத்தில் மாப்பிள்ளை தாலி கட்டுவது செய்தி அல்ல. சு.சாமி கட்டமுயன்றது தான் செய்தி.
        about 7 hours ago ·   (0) ·   (0) ·  reply (1) · 
        • kilikkaadu  
         இதைதான் சி பா அன்றைக்கே சொன்னாரு..நாயி மனிஷனை கடிச்சா அது சம்பவம்,ஆனா மனிசன் நாய கடிச்சா அது செய்தின்னு..