Thursday, May 14, 2015

முன்னாள் உலக அழகியின் முன்னாள் காதலர் இந்நாள் அனுபவம்

1. கமல்ஹாசன் தனது அடுத்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் #,எக்ஸஸைஸ் பன்னாம.விட்ருங்க.தொப்பை வந்துடும்.அசல் போலீஸ் கெட்டப் வந்துடும்


===============

2 தேர்வில் முறைகேடு; கேரள போலீஸ் ஐ.ஜி. பிடிபட்டார் # அண்ணன் +2 ல இருந்தே பிட் அடிச்ட்டு வந்திருக்காரு.இப்ப தான் மாட்டி இருக்காரு


================

3 தமிழகத்தின் அவல நிலைக்கு DMK,ADMK தான் காரணம்-அன்புமணி ராமதாஸ் #,கூச்சமே இல்லாம கூட்டணி அமைக்கும்போது இது தெரியலையா?


==============

4 மோடி எடுக்கப் போகும் முடிவைப் பாத்து இந்தியாவே சந்தோசப்படும் - தமிழிசை # படும்.சந்தோசப்படுமா?வருத்தப்படுமா?னு சொல்ல முடியாது உறுதியா

===================

5 ஜெ நினைத்தால் ஊழலை ஒழிக்க முடியும்..
கொங்கு ஈஸ்வரன். # நான் நினைச்சா நயன் தாராவை கல்யாணம் பண்ணிக்க முடியும்.ஆனா நினைக்க மாட்டேன்

================

6 தமிழகத்தில் பாஜக கொஞ்சம் பலவீனமாக உள்ளது -ஹெச் .ராஜா # சேலம் போனா சரி ஆகிடும்.ட்ரை த ட்ரை


=================


7 ராகுல் ஆராய்ந்து பேசுவதில்லை -தமிழிசை #அம்மணி எப்பவும் கீரை ஆய்ந்துக்கிட்டே தான் பேசும்.அறிக்கை விடும்


================

8 நில நடுக்கம் :இமயமலை நடனம் ஆடுவதை நான் பார்த்தேன் ஒரு மலையேற்ற வீரரின் வினோத அனுபவம் #நமீதா டான்ஸ்சை இந்திரவிழாவில் பார்த்துட்டாரா?


====================

9 பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லை-பொன்னார்
# எதுக்கும் அரசு பொறுப்பு இல்லைனு பொறுப்பில்லாம பேசாதீங்க


==================

10 வாசனை வளைக்க தமிழக பா.ஜ.க.வியூகம்:புதிய கூட்டணிக்கு வாய்ப்பு#தாமரையில் வாசனை இல்லைனு சேர்க்க ஐடியாவா ஜிகே வாசனை?


=================

11 கோர்ட்டுக்கு கோடை விடுமுறை லீவில் போகாமல் ஜெ. வழக்கில் தீர்ப்பு எழுதுகிறார் ஜட்ஜ்# கிரகம் சரி இல்லைன்னா சனீஸ்வரர் கரகம் வெச்சு ஆடுவாராம்


====================

12 இந்தியாவின் 2014 மிகவும் விரும்பப்பட்ட நடிகை 50 பேர் பட்டியலில் சன்னி லியோனுக்கு முதல் இடம் # இதான் இந்தியன் டேஸ்ட்டா?,சுத்தம்

================

13 சல்மான்கான் வழக்கில் பிற்பகல் 1.10 மணிக்கு தீர்ப்பு #,டைம் ஒரு குறியீடு.1,லட்சம் ரூ அபராதம்.10,வருசம் ஜெயில்


===================

14 சல்மான் கான் க்கு நெஞ்சு வலி.கோர்ட்டில் முறையீடு #,அதெப்பிடி தண்டனை கிடைக்குதுனு தெரிஞ்சா ஹார்ட் அட்டாக் வருது?

=================

15 தமிழகத்தில் தி.மு.க விஸ்வரூபம் எடுக்கும்... -ஸ்டாலின் # அதான் கமல் ஆல்ரெடி எடுத்துட்டாரே?பாகம் 1.2,னு.நீங்க வேற.எடுங்க


===================


16 சல்மான் கானுக்கு "5"ஆண்டுகள் சிறை தன்டனை அறிவிப்பு
# இவரும் ஒரு வகையில் அஞ்சான் தான்.அதான் அஞ்சு வருசம் தீட்டீட்டாங்க"


=================

17 சல்மான் கான் குற்றவாளியா?’... சோனாக்ஷி சின்ஹா அதிர்ச்சி! # ஏம்மா! ஜட்ஜே சொல்லிட்டாரு.எதுக்கு இந்த ஜெர்க்கு?


===============

18 ஜெ வுக்காக உயிர் தியாகம்: இதுவரை 225 குடும்பங்களுக்கு ரூ.6.77 கோடி நிதி உதவி..#,தற்கொலையை ஊக்குவிக்கும் போக்கு இது.சட்டப்படி தவறு


==============

19 நாளை பிளஸ்–2 தேர்வு முடிவு: எந்த பாடத்திற்கும் கருணை மதிப்பெண் இந்த வருடம் இல்லை..#" கருணை மலரா இருந்தாலும் கருணைமார்க் இல்லயாம்


======================


20 சல்மான் ஒரு நடிகர்... அதிகபட்ச தண்டனை வழங்காதீர்: வழக்கறிஞர் வாதம் !# முன்னாள் உலக அழகியின் முன்னாள் காதலர்னு வாதாடலை.நல்ல வேளை


==============

0 comments: