Tuesday, May 06, 2014

திண்டுக்கல் ரீட்டா vs கேப்டன்

1. திருமணத்தையே மறைத்தவரா நாட்டை வழிநடத்துவது? - மு.கருணாநிதி ! தலைவா !முன்னாடி கண்ணாடி.பின்னாடிபோய் பழசை எல்லாம்நினைத்துப்பார்க்கவும்


================


2 திருமணமானதையே மறைத்த மோடிக்கா உங்கள் ஓட்டு? -கலைஞர் # ஊழலை மறைச்சவருக்கே ஓட்டு போட்டோம்.பர்சனல் மேட்டர் பத்தி எங்களுக்கு என்ன கவலை? தலைவா!


=================


3 புதிய கட்சிகளை வாக்காளர்கள் ஆதரிக்கக் கூடாது: கருணாநிதி:" # பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கை விதி தலைவா!


==================


4  பதி தர்மத்தை மறந்தவரால் ராஜ தர்மத்தை நிறைவேற்ற முடியுமா?: காங்கிரஸ்.. # 3 பத்தினி கட்டிய பத்தியக்காரரோட கூட்டணி வெச்சது எப்படிங்க்ணா?


===================


ஜெயலலிதா மகிமையால் அதிமுகவில் சேர்ந்தேன்-ஜெ.கெ.ரித்தீஷ் # போட்டு விடுங்க பாட்டை.தாயி மகமாயி,உன் மகிமையே மகிமையம்மா


=============

6 ஒரு பெண் பிரதமரானால் நாட்டுக்குப் பெருமை!- நடிகை குஷ்பு # யாரோ ஒரு லேடி பி எம் ஆவதை விட மோடி பி எம் ஆவது கோடி பெருமை


=============

7 மயிலாப்பூர்வாசிகள் அறிவாளிகள் ஏன்னா நான் கூட மயிலாப்பூர்தான் -கார்த்திக்# ஊர்ப்பேர்லயே ஆப்பு இருக்கே ?அடடே!================


நான் பாட்டு பாடுனா நீ அம்மாவுக்கு ஓட்டு போடுவியா-ராமராஜன்#  கீழே கிடக்கும் கல்லை வேணா எடுத்துப்போடுவேன்


=================


என்னுடன் ஒரே மேடையில் மோடி விவாதிக்க தயாரா-கார்த்திக்# அவர்பேசறஹிந்தி உங்களுக்குப்புரியாது,நீங்க பேசற வெத்தலைத்தமிழ் யாருக்குமே புரியாது


=================


10 அம்மா பிரதமராக சிவனிடம் வேண்டுகிறேன் -மதுரை ஆதினம்# அப்படி ஆகிடக்கூடாதுன்னு நாங்க பார்வதியை வேண்டிடறோம்.,சக்தி பெரிதா? சிவம் பெரிதா?


===============


11  அம்மா கொடுத்த மாடு தினமும் 500ரூபா கொடுக்கும்-ராமராஜன்#  பசு பால் தானே கொடுக்கும்? சலவை பண்ணின நோட்டுமா கொடுக்கும் ? 


==================


12 இந்தியாவின் பசியை போக்கியவர் சோனியா-தங்கபாலு#  ப. சி யை முதல்ல துரத்துங்க , பாதி பாவம் குறையும் 


=====================


13  கேப்டன் - என் சைடுல இருக்கற 2 லைட்டையும் இப்போ போட்டு விடறேன்.2 நிமிஷம் தான். பார்க்கறவங்க பார்த்துக்குங்க # திண்டுக்கல் ரீட்டானு நினப்பு 


===================


14 தனித்துப் போட்டியிடுவதால் காங்கிரசுக்கு கூடுதல் பலம் கிடைக்கும்! - கார்த்திக் #  இனியா வே தனியாWAY போனாலும் அது பலவீனம் தான்
===================


15 தமிழகத்தில் திமுகவை மீண்டும் தலை தூக்கவிடக்கூடாது-சரத்குமார் #  “இலை”யைத்தூக்க விடக்கூடாதுன்னு சிலர் “தல”யைத்தலைதூக்க விடக்கூடாதுனு சிலர்
================


16 சூர்யா நடிகரா,?
எனக்கு
தெரியாதே-
கரினா கபூர் # நோஞ்சானா(ளா) இருந்தா காம்ப்ளான் விளம்பரம் பாருங்க.அஞ்சான் யார்னு தெரியும்


=====================


17 அம்மா குடிநீர் விற்பனையால் திமுக மினரல் வாட்டர் நிறுவனத்திற்கு பாதிப்பு- ஜெ #நாம எந்த்திட்டம் போட்டாலும் அய்யாவுக்கு ஆப்பு வைக்கிறமாதிரி


=====================


18 மோதிரம் சின்னம் கிடைத்ததன் மூலம் திருமாவுக்கு விரைவில் திருமணம் நடக்கும் - கருணாநிதி. # பகுத்தறிவுப்பகலவர் காரமடை ஜோசியர் ஆகிட் டாரே?
==========================


19 தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை மின்சார தட்டுப்பாடு -ஜெ # இரட்டை இலைக்கு ஓட்டுப்போடமாட்டோம்னு சொல்லலை.போட மனசு வர்லைடாரே!


====================


20 நாட்டின் பிரதமராக மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது-கலைஞர்.. # அவர் ஒரே ஒரு மனைவி தான் கட்டி இருக்காரு தலைவரே! இந்த ஒரு தகுதி போதாதா?


=======================

0 comments: