Saturday, May 31, 2014

பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் திரைக் கொண்டாட்டம்

பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு சிறிய நகரான கான் நகரில் நடக்கும் இந்தத் திரைப்பட விழாவுக்கு இன்றைக்கு உலகமெங்கும் மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட ஆஸ்கார் விழாவுக்கு நிகராக கான் திரைப்பட விழா உலக சினிமா ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு களையும் பெற்றுள்ளது. இவ்வளவு பெரிய இந்த விழா உருவானதற்கு ஒரு முக்கியமான அரசியல் பின்னணி உள்ளது. 



1932-ல் முசோலினியின் இத்தாலியில் வெனிஸ் நகரத்தில் ஒரு திரைப்பட விழா தொடங்கப்பட்டது. இந்தத் திரைவிழா அந்தக் காலகட்டத்தில் மிகப் பெரிய திரை விழாவாகப் புகழ்பெற்றிருந்தது. வெனிஸ் திரைப்பட விழா விருது அந்நாளைய சினிமா கலைஞர்களின் கனவாக இருந்தது. இந்த விழாவில் பங்கேற்பதை மற்ற நாடுகள் கெளர வமாகக் கருதின. ஆனால் இந்த விழா பிரபலமடைந்த சில நாட்களில் நடுவர்கள், ஜெர்மானிய, இத்தாலிய பாசிசக் கூட்டணி ஆதரவானவர்களுக்குச் சாதகமாகச் செயல்படத் தொடங்கினர். 



1938-ம் ஆண்டு நடந்த விழாவில் பிரெஞ்சு இயக்குனர் ழான் ரென்வாவின் படமான La Grande Illusion விழாவின் உயரிய விருதான முசோலினி கோப்பையைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது இந்தப் படம் போருக்கு எதிரான கருத்து களை முன்வைக்கும் படம். ஆனால் ஜெர் மனியப் படமான Olympiaவுக்கும் இத்தாலி யப் பட மான Luciano Serra, Pilotக்கும் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்தப் படம் ஹிட்லரின் நாஜிப் படைகளின் வெற்றி களைப் போற்றும் வகையில் எடுக்கப் பட்டது. இதற்குப் பின்னால் முசோலினி யின் அழுத்தம் இருந்ததாகச் சொல்லப் பட்டது. இந்த விருது அறிவிப்பு வெளியான தும் பிரான்ஸ் விழாவில் இருந்து வெளி யேறியது. பிரான்ஸுக்கு ஆதர வாக பிரிட்டிஷ், அமெரிக்க நடுவர் கள் ராஜினாமா செய்தனர். ஆனால் திரைப்பட விழாக் குழு அதற்கெல்லாம் செவி சாய்க்கவே இல்லை. La Grande Illusion படத்திற்கு இத்தாலியும், ஜெர்மனி யும் தடைவிதித்தன. 



இந்தக் காலகட்டத்தில்தான் பிரான் ஸைச் சேர்ந்த சினிமா ஆர்வலர்கள் சிலர், அரசியல் சார்பில்லாத ஒரு திரைப்பட விழா திரைப்பட வளர்ச்சிக்கு அவசியம் என நினைத்தனர். அப்படியான விழாவை பிரெஞ்சு அரசாங்கமே நடத்த வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் முசோலினிக்குப் பயந்து பிரெஞ்சு அரசு அந்தக் கோரிக்கையை உடனடியாகப் பரிசீலிக்கவில்லை. ஆனால் பிரிட்டிஷ், அமெரிக்கா நாடு களும் இக்கோரிக்கையை ஆதரித்தன. 



பிரெஞ்சு சினிமாவின் முக்கியமான ஆளுமைகளான பிலீப் எர்லாங்கர், ராபார்ட் பேவா ல பிரட், லூயீஸ் லுமியார் ஆகியோர் கொடுத்த நெருக்கடியால் வேறு வழியில்லாமல் பிரெஞ்சு அரசு அதற் குப் பச்சைக்கொடி காட்டியது. அதன் பிறகு விழா நடைபெறும் நகரமாக கான் தேர்ந்தெடுக்கப்பட்டது. முதல் விழா 1939-ம் ஆண்டு செப்டம்பர் 1-ல் தொடங்கி இன்று வரை நடைபெற்று வரு கிறது. சில ஆண்டுகளில் இடையில் உலகப் போராலும், பொருளா தாரக் காரணங்களுக்காவும் நிறுத்தப் பட்டிருந்தது. 




ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் நூற்றிற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படுகின்றன. உலகின் மிகப் பெரிய திரைத் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது. 


அரசியல் விருப்பு/வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு முழுக்க, முழுக்க கலைக்கெனத் தொடங்கப்பட்ட இந்த விழா, இன்று உலகின் திரை ஆர்வலர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்துக்கொண்டிருக்கிறது. 


நன்றீ-த இந்து

0 comments: