Thursday, May 22, 2014

சுத்தி வளைச்சுத்தான் பேசும் ஆண்களை பெண்ணுக்குப்பிடிப்பது ஏன்?ஒரு வெட்டி ஆராய்ச்சீய்!!

1. அத்தான்.இன்னியோட 3 மாசம் 10 நாள் ஆச்சு.அய்யய்யோ

! பதறாதீங்க.2014 ம் வருசம் பொறந்து 100 நாள் ஆச்சு னு சொல்ல வந்தேன்==================


2  மோடி - தாமரைக்கு உங்க ஆதரவு வேணும் .


ரஜினி - எங்க வீட்டுத்தோட்டத்தில் கூட தாமரைக்குளம் இருக்கு.பாடல் ஆசிரியர் தாமரைக்கு எப்பவும் ஆதரவுண்டு


======================


3 மோடி-BJPயை வெளிப்படையா ஆதரிக்க ஏன் தயங்கறீங்க ?ரஜினி - கோச்சடையான் மே 9 ரிலீஸ் ஆகனும்னு நினைக்கிறேன்.பிரச்னை "விஸ்வரூபம்"எடுத்துட்டா?


=================


4 மோடி - உங்க பவர் உங்களுக்கே தெரியல.ரஜினி - ஜெ பவர் என்ன?னு உங்களுக்குத்தெரில


==================


5 தலைவரே! மானாடாயிலாட ஏன் இன்னைக்கு இல்ல?,அட போப்பா.நாங்களே ஆடிப்போய் க்கிடக்கோம்


====================


சார்.ரஜினி வீட்டுக்கு ஏன் போனீங்க? மோடி - டீ குடிக்க. 


கேப்டன் வீட்டுக்கு ஏன் போகல? 


ட்ரிங்க்ஸ் குடிக்கற பழக்கம் இல்ல

============


7 மோடி - மத்தியில் கை வரனும்னு ஆசைப்படறீங்களா? தாமரை வரனும்னு ஆசைப்படறீங்ளா? 


விஜய் -தியேட்டர்ல தீபாவளி க்கு கத்தி வரனும்னு ஆசைப்படறேன்


==============

8 மோடி - க்யா ஆப் கோ ஹிந்தி மாலும் ஹை?ஜி! , விஜய் - ஜி அஜித் நடிச்ச படம்.நான் ஜில்லா ,துப்பாக்கி ,கத்தி # என்ன பேசி இருப்பாங்க?==============

9 சார்.முதுகுவலி ,காய்ச்சல் எல்லாத்தையும் தாண்டி ஆபீஸ் வந்திருக்கேன்
. சும்மாவா வந்தே? சம்பளத்துக்காகத்தானே வந்தே


==============10 விஜய் = மோடியை சந்திச்ச பின் என் மார்க்கெட் கிராப் ஏறி இருக்குமா?
அஜித் = தெரியல. இறங்குனவங்க தான் ஏறுவதைப்பத்தி கவலைப்படுவாங்க


======================


11  நிருபர் - மேடம், ஓட்டுப்போட்டாச்சா? விரலை காட்டுங்க . கிளாமர் நடிகை கிண்கிணி வள்ளி = சாரி, எனக்கு விரல் காட்டி நடிச்சு பழக்கம் இல்லை====================12 விஜய் - சார்.மோடியைப்பார்க்கனும் . செக்யூரிட்டி = சாரி சார்.இனி 5 வருசம் கழிச்சு நீங்க ஆதரவு தந்தா போதும்


========================13  வாயை மூடி பேசவும் படத்துல கமல் நடிச்சிருந்தா டைட்டில் ?" இதழ் மூடி முத்தம் தரவும்"==================14  நாளை நீ உங்கம்மா வீட்டுக்குப்போகக்கூடாது. நீங்க என்ன சொல்றது ? நான் என்ன கேட்கறது? இப்பவே போறேன்=====================


15  அத்தான். எந்த ஹேர் ஸ்டைல் ல பங்க்சனுக்கு வரட்டும்?ம். உன் " சவுரி" யம்==========================


16 நடிகை = நெ 1 ஹீரோயின் ஆகனும்னு பல மாமாங்கமா நினைச்ட்டு இருக்கேன்.நிருபர் = சும்மா அடிச்சு விடாதீங்க.1 மாமாங்கம் = 12 வருசம்.உங்க் வயசு 18


======================


17 டியர்.நீங்க எப்பவுமே சுத்தி வளைச்சுத்தான் பேசுவீங்களா?என் அருகில் நீ இருக்கையில் உன் இடையை சுற்றி வளைச்சு ப்பின் (தேவைப்பட்டா) பேசுவேன்


================


18  டியர்.ஆபீஸ் ல என்ன பண்ணிட்டிருக்கே? விளையாடாதே.உனக்கு எதிர் சீட்ல உக்காந்து SMS பண்ணிட்டு இருக்கேன்


======================


19 டியர்.உன் மேல் நான் நம்பிக்கை வெச்சிருக்கேன்


 சரி சரி .கையை எடுங்க


=====================20 30 வருசமா குடித்தனம் செஞ்ச மனைவியை ஏன் டைவர்ஸ் பன்றீங்க?ரஷ்யஅதிபர்புதின் = 31 வது வருட வெட்டிங் டே வை முன்னிட்டு 365 தினமும் உப்புமா ன்னா


=============================

0 comments: