Saturday, May 03, 2014

கத்துனா குத்துவேன் , குத்துனா கத்துவேன் -அரவிந்த் கெஜ்ரிவால்

1. RB சவுத்ரி மைன்ட் வாய்ஸ் - தலைவா வால ஏற்பட்ட நட்டத்தைக்கூட தாங்கிட்டேன்.ஆனா நம்ம காசுல இவரு ஹனிமூன் கொண்டாடுனதை நினைச்சா # அமலாபால்


====================


2 ஜெ.க்கு வாய்தா ராணி விருது-விஜயகாந்த் # கொடுத்துக்கொடுத்து சிவந்த கரம் கேப்டனுக்கு பலரிடம் கொட்டு வாங்கி வாங்கி வீங்கிய சிரம் ஜெ க்கு=========================


3 தென் மாநில மின் தடையில் தமிழகம் முதலிடம்: # புரட்சித்தலைவியின் பொன்னான ஆட்சியிலே விரைவில் இந்திய அளவில் நெ 1======================


4  சொல்பேச்சு கேட்காத மகன் வீட்டுக்கு நான் செல்வதா? -கருணாநிதி # சொல்பேச்சுக்கேட்காத சுந்தரரே!மனம் வருந்திப்புலம்பறார் தந்தையரே!======================5 டில்லி தேர்தல் பிரசாரத்தில் கெஜ்ரிவாலுக்கு அடி : கன்னத்தில் அறைந்தார் ஆட்டோ டிரைவர் #,ரூம் போடச்சொன்னாராம்.அறை போட்டுட்டாரு=======================


6  தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழிக்க என் தம்பிக்கு ஒட்டு போடுங்க - பிரேமலதா" # உங்க தம்பி இப்போ உங்க குடும்பத்துல இல்லீங்க்ளா?========================


7 அக்கா கணவர் தனுஷை இயக்க ஆசைப்படும் 'கோச்சடையான்' சவுந்தர்யா # என் ஆசை மச்சான் ,சைக்கோவா நடிக்க ஆசைப்பட்டான்===========================


8 சொத்துக்குவிப்பு வழக்கை ஜெ இழுத்தடிப்பதா?: நீதிபதி காட்டம் # தன் மீது இருக்கும் எந்த வழக்கையும் இழுத்தடிப்பது அரசியல்வாதிக்கு இழுக்கு=========================9 பாரிஸை பின்னுக்கு தள்ளி உலகின் தலைசிறந்த சுற்றுலாத்தலமான இஸ்தான்புல் # ஹவுஸ் புல் ஆகிடும் இனி=======================


10 கோயில் கட்ட பூசாரி, தர்ம கத்தா போதுமே.. அரசியல் கட்சி எதுக்கு-? சி.பி.எம். # தாஜ்மகால் கட்ட கொத்தனார் சித்தாள் போதுமே ஷாஜகான் எதுக்கு?==============================11 விஜயகாந்தை யாரோ மந்திரிச்சு விட்டுடாங்க - நடிகர் மனோபாலா # முதல் மந்திரி ச்சு விட்டுட்டாங்கனு முழுசா சொல்லுங்க=======================


 12 என்னையும், என் தம்பி யாராலும் பிரிக்க முடியாது – அழகிரி: #பஞ்ச் டயலாக் பேசும்போது யோசிச்சுப்பேசனும்ங்ணா.பிரிச்சதே தம்பியும் அப்பாவும்தான்=======================


13 நான் கொலை செய்யப்படலாம்: அரவிந்த் கெஜ்ரிவால்! - # கத்துனா குத்துவேன் , குத்துனா கத்துவேன் காமெடி சீனை உல்டா பண்ணிட்டாரா?=======================


14 தண்ணீர் இலவசம்தான். பாட்டிலுக்குத்தான் காசு - ராமராஜன்# தமிழன் காலி பாட்டில் ,வாட்டர் கேனோட வரிசைல நிப்பான்.ஜாக்கிரதை்========================


15 பேசுகிறாரா பிதற்றுகிறாரா எனத் தெரியாததலைவர்விஜயகாந்த்: சீமான் # எப்டியோ அவராவது தலைவரா பார்ம் ஆகிட்டாரு.நாம இன்னும் குடும்பத்தலைவராத்தானே=======================


16 போயஸ் கார்டன் அருகே ஜெ.விடம் உதயசூரியனுக்கு ஓட்டு கேட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் # அண்ணன் வம்பழகன் வாழ்க.அம்மா.ஆடிப்போய்ட்டாங்களாம்=====================


17 இந்தியாவில் பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியது:#,இனி நாமும் கோடியில் ஒருவர் னு எல்லா FB கேடிகளும் சொல்லிக்கலாம்==========================


18 ஏதோ பெரிய வித்தைக்காரன் போலவே மோடியை பில்டப் செய்கிறார்கள். சோனியா எரிச்சல்# மோர் சாப்பிடுங்க.ஒன்ஸ்மோர் நீங்க வந்துடலாம்னு கனவு காணாதீங்க==========================


19 விஜய்யின் கத்தி படத்துக்கு எதிராக அணி திரளும் தமிழ் அமைப்புகள் # வழக்கமா ரிலீஸ்க்கு முந்தின நாள் தானே குழி பறிப்பீங்க?==========================20  அனைத்து கொள்ளையர்களும் தமிழகத்தில் பாதுகாப்பாக தங்கி உள்ளனர்-கனிமொழி# கோபாலபுரம் ,அறிவாலய்ம் பகுதிலயா மேடம்?========================

0 comments: