Tuesday, May 27, 2014

THE PURGE (2013) -சினிமா விமர்சனம்


திரில்லர் படம்னா என்ன? நாம பார்த்த வரைக்கும்.

1.எதாவது ஒரு வீட்ல பேய் இருக்கும்.ஹீரோ அங்க குடி புகுந்து தன் பொண்டாட்டி பேய வச்சு இருக்கற பேயை விரட்டுவார்.

2.அக்‌ஷன் திரில்லர்ல எதாவது சேஸிங் இல்லனா ஃபைட்டிங், பர பர விறு விறு திரைக்கதை.

மேலே இருக்கற ரெண்டும் இல்லாம இது ஒரு புது மாதிரியான திரில்லர் படம். நல்லா வந்திருக்கு.இவன் ஏன் புது மாதிரியான விளக்கம் தர்றான்னு பாக்கறீங்களா? சும்மா... விமர்சனம் ரொம்ப குட்டி.. அதான் ஹி ....ஹி...

படத்தோட கதை என்னனா..... அமெரிக்க நாட்ல எல்லாரும் நல்ல வேலைல இருக்காங்க (நம்ம நாட்ல...?). வேலை இல்லா திண்டாட்டம் குறைவு. மக்கள் சந்தோஷமா வாழறாங்க.குற்றமே நடக்கறது இல்ல. அதுக்கு என்ன காரணம்னா... நம்ம நாட்ல வருஷம் ஒரே ஒரு நாள் மழை பெய்யற மாதிரி அங்க வருஷம் ஒரு நாள் PURGE கொண்டாடறாங்க.



அதாவது அன்றைக்கு ஒரு நாள் மட்டும் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை போலிஸ், அவசர உதவி எல்லாம் அவுட்.இந்த நேரத்துல எது செஞ்சாலும் அது குற்றம் இல்ல. அத ஒரு புகாரா எடுத்துக்க மாட்டாங்க. போட்டு தாக்கலாம்.இது மட்டும் நம்ம நாட்டுல இருந்தா...? இப்படிபட்ட நேரத்தில் நம்ம ஹீரோ கம் குடும்பம் ஒரு ஆளுக்கு உதவ போய் மாட்டிக்கறாங்க. ஒரு கும்பல் பல கொடூர ஆயுதங்களுடன் வீட்டுக்கு வெளில நின்னுட்டு அவன விடலனா நாங்க உங்களையும் உங்க குடும்பத்தையும் விடலங்கறாங்க. ஹீரோ கம் குடும்பம் தப்பிச்சுதா? அந்த ஆள விட்டாங்களா விடலயா? திரையில் காண்க.

இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணியிருக்கலாமோன்னு தோணுது . மற்றபடி புதிய கதை மற்றும் புதிய களம்.வெல் டன்.



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்:

1.அதிகம் செலவு இல்லாமல் படத்தை முடித்தது. ஆறு, ஏழு கேரக்டர்கள் மற்றும் ஒரே ஒரு வீடு அவ்ளோதான் படத்தின் பட்ஜெட்.

 2.முற்றிலும் மாறுபட்ட கதையை கொண்டு ஒரு மாறுபட்ட படத்தை கொடுத்தது.

3.ஹீரோவின் மகளாக வரும் அம்மணி நல்ல ஃபிகர்.

4.ஹீரோவின் மகனாக வருபவரின் நடிப்பும் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை தற்காத்துக் கொள்ளும் திறனும் நன்றாக படமாக்கப்பட்டுள்ளது.

5.படம் முழுவதும் இருட்டில் நடந்தாலும் காட்சிகளை தெளிவாக காட்டியது. (ஐ மீன்... ஆக்‌ஷன் காட்சிகள்)  

6.பெயருக்கு ஒரு ட்விஸ்டை வைத்து மேனேஜ் செய்தது.



இயக்குநரிடம் சில கேள்விகள் :

1.ஒண்ணு சீன் வைங்க இல்ல வைக்காம போங்க. அதென்ன பழக்கம் இருந்தும் இல்லாம ஒண்ணு?

2. அந்த ஆள ஏன் கொலை பண்ண முயற்சி பண்றாங்க? தேவை இல்லாம       ஆதரவா இருந்த ரெண்டு பேர் ஏன் ஹீரோவுக்கு எதிரா மாறாங்க?

3.ஒரே இடம் ( லொக்கேஷன்) அதுவும் இருட்டில் என்பதால் ஒரு கட்டத்தில் செம சலிப்பு. 

4.க்ளைமேக்ஸ் நன்றாக இருந்தாலும் இதில் என்ன சொல்ல வர்றாங்க என்பதை கணிக்கமுடியவில்லை. 

5.சீன் வைக்க சான்ஸ் இருந்தும் ஏன் வைக்கல?  







மொத்தில் THE PURGE புதுமை விரும்பிகளுக்கு மட்டும்.பெண்கள், குழந்தைகள் பார்க்கலாம் ஆனால் அவர்களுக்கு பிடிக்காது.



டிஸ்கி 1 : THE PURGEன்னா சுத்தப்படுத்துதல்னு அர்த்தம்.

diski 2 -  THIS REVIEW WAS TYPED & MADE BY  MR KARTHICK , MY SISTER'S SON

0 comments: