Wednesday, May 14, 2014

மீனா என்ன சொன்னா?

1. தோசைக்கு 2 கரண்டி மாவு ,இட்லிக்கு 1 கரண்டி மாவு என்பதால் 5 தோசை சாப்பிடுபவன் இட்லி எனில் 10 சாப்பிட்டு கணக்கை நேர் செஞ்சுக்குவான்தமிழன்======================2 லைப்ரரில போய் எந்த புக்கை எடுத்தாலும் முதல் பக்கத்துலயே " இந்த நாவல் அறுவை" னு ஒன் லைன் விமர்சனம் பென்சிலில் எழுதி வெச்சிருக்கான் தமிழன்


=====================


3 காலையில் நூலகர் அடுக்கி வைத்ததை மாலையில் பரப்பி வைத்து விட்டுப்போய்டுவான் தமிழன் 


====================


4 தேர்தல் முடியும் வரை இலவசமா யாரும் எதையும் தரக்கூடாதுனு தேர்தல் கமிசன் சொன்னா நாங்க மட்டும் ஏன் ஓட்டை இலவசமாப்போடனும்னு கேட்பான் தமிழன்


===================


5 மின் வெட்டால் அதிமுக மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என இந்தியா டுடே கணித்துள்ளது.ஆனால் பெரிய பாதிப்பு இருக்காது என என் கணிப்பு  20 4 2014 )=====================


6 மின் வெட்டு பிரச்சனை இரு கழக ஆட்சியிலும் இருந்ததால் அது தேர்தலின் போக்கை மாற்றும் என பலரும் எதிர்பார்ப்பது தவறு என்பது என் கணிப்பு


================== 7 மத்தியில் மோடி பிரதமர் ஆவது உறுதி என்பதால் மோடிக்கு நெருக்கமாக ,நட்பாக இருக்கும் அதிமுக அல்லது பிஜேபி கூட்டணிக்கே வாக்களிக்கலாம்


=====================


8 ஹோட்டல் ல ஒரு செட் பூரி மட்டும் சாப்பிடும் தமிழன் அதையே வீட்ல சுட்டா.5 செட் அடுக்குவான் # பில் பயம் இல்லை==================


9 தற்கொலை எண்ணம் உள்ளவன் டக்னு பண்ணிக்குவான்.அனுதாபம் ,இரக்கம் ஆறுதல் தேடுபவன் FB யில் ஸ்டேட்டஸ் போடுவான்


====================


10 தமிழ் இனத்தலைவர் வலது கை மோதிர விரலில் ஒரு புது மோதிரம் போட்டிருக்கார்.இது தமிழ் நாட்டின் நன்மைக்காக ஜோதிடர் போடச்சொல்லி இருப்பாரோ?


====================


11 மீனா என்ன சொன்னா?னு SMS பண்ணா பாங்க்காங் போலாமாம்.மீனா வும் வருமா? னு SMS பண்ணி இருக்கேன் .======================


12 பிறந்தது பெண் குழந்தை எனில் பெற்றோருக்கான பொறுப்பும் ,கவனமும் ,எச்சரிக்கை உணர்வும் இரு மடங்கு அதிகம் தேவை==================


13 வெறும் வயித்துல ஒரு சொம்பு தண்ணி குடின்னா தமிழன் அதிகாலை 4 மணிக்கு முறுக்கு சாப்பிடறான்.அட கிறுக்கு புள்ளே! ;-))====================


14 இந்தப்பொண்ணுங்க எல்ல்லாம் டெய்லி ஐஸ்க்ரீம் சாப்பிட்டும் ஒல்லி கில்லியாவே இருப்பதன் மர்மம் என்ன?


====================15 மீன ராசி அன்பர்களே! உங்களுக்கு ராசியான கல் அம்மிக்கல்.எங்கே போனாலும் அதை ஒரு கட்டை பேக்கில் போட்டு எடுத்துச்செல்லவும்


==================

16 தமிழ் இனத்தின் நன்மைக்காக மஞ்சள் துண்டு அணிந்த பகுத்தறிவுப்பகலவர் இப்போ தமிழ்நாட்டின் நன்மைக்காக ராசிக்கல் மோதிரம் அணிந்திருக்கிறார்


====================


1 7வட இந்திய உணவு மோகத்துல 8 பூரி அசால்ட்டா அடிச்ட்டு தாகம் எடுக்காம இருக்க ஒரு குண்டா பழையசோற்றை மோரில் கரைச்சு அடிப்பவன் தான் தமிழன்==================


18 பால்கோவா கடைக்காரர்களுக்கு ஒரு மார்க்கெட்டிங் ஐடியா.கடை வாசலில் அமலா பால் போட்டோ வைக்கவும்.தமிழன் அதை அமலா பால் கோவானு நம்பி வாங்கிடுவான்


==================

19 இன்னைக்கு தெரியாம லேடீஸ் கர்ச்சீபை எடுத்துட்டு வந்துட்டேன்.ஆபீஸ்ல யாராவது கேட்டா சம்சாரம் நினைவுக்காகனு சமாளிச்சுடவேண்டியதுதான்


====================20 6 ஹேர்பின் போட்டு ஒத்தை ஜடையில் வரும் பாரம்பர்யப்பெண்ணை விட ஒத்தை க்ளிப் போட்டு லூஸ் ஹேரில் வரும் பெண் நம் மனசை லீசுக்கு எடுத்துடுது===========================

0 comments: