Thursday, May 08, 2014

இது மரியாதை நிமித்த முத்தமே -நடிகை நக்மா !!!!!???

1. தி.மு.க. காலாவதியாகி விட்டது: நாஞ்சில் சம்பத் .# அதிமுக பாடாவதி ஆகிடுச்சே .கரன்ட் ஸ்டேட்டஸ் தெரியாம கரன்ட் பாலிடிக்ஸ் பேசக்கூடாது


=================


2 என்னை சந்தித்தால் தி.மு.க.விலிருந்து கருணாநிதி நீக்கப்படுவார்: மு.க. அழகிரி.#,வாய்ப்பை நழுவ விட்றாதீங்க்.நீங்க போய் அவரை சந்திங்க.


==================


3 கோவாவில் முந்தைய வாக்குப்பதிவு சாதனைகள் முறியடிப்பு.#,வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்க அதிகரிக்க ஆளுங்கட்சிக்கு ஆப்பு.இது தேர்தல் விதி


==================


4 'ரஜினிஜி' யை சந்திப்பது ஏன்? மோடி விளக்கம் # அப்டியே தாமரை என்ற பொருள் தந்தும் கமல்ஜியை ஏன் சந்திக்கலை?னும் விளக்கம் சொல்லிடுங்க ஜி


=================


5 காவிரி நதிநீர் பிரச்சனையில் துரோகம்: பா.ஜ.க. மீது ஜெ. கடும் தாக்கு! # எங்கியோ போற மாரியாத்தா இங்கே வந்து ஏறாத்தாங்கற கதையா இருக்கே=================6 தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் பறக்கும் தலைவர்கள். முதலிடத்தில் லாலு! # அப்போ தங்கத்தலைவிக்கு அடுத்த இடம்தானா?விடாதீங்க மேடம்


=================


7 தேர்தலுக்கு பின்கட்சி வழங்கும் எப்பொறுப்பையும் ஏற்க தயார்: அத்வானி.# பந்தக்கால் நட்டதும் பந்தில உக்காந்தா எப்டி? முதல்ல மேரேஜ் முடியட்டும்


=================


8 மோடி பிரதமரானால் விலைவாசியை கட்டுப்படுத்துவார்: அன்புமணி # கூட்டணிக்கட்சிங்க அடிச்சுக்காம கட்டுப்படுத்தவே நேரம் சரியா இருக்கும் பாருங்க


==================


9 என்னை மோடி சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி விளக்கம் # நான் ரஜினியை சந்தித்ததில் சினிமா (த்தனம்)இல்லை -மோடி


=================


10 பெரியவர்களை மதிக்க கற்றுகொள்ள வேண்டும்: கருணாநிதி # அழகிரி அண்ணே ! கேட்டுக்கிட்டீங்களா? இது நமக்குத்தான்


=================


11 அடுத்தவர்களின் மீது பழி போடுபவது ஜெ., வழக்கம் :கருணாநிதி # சொந்த மகன் மீதே பழி சொல்வது நம் வழக்கம் ?


================


12 குடிசைகளுக்கு சுற்றுலா செல்லும் ராகுல் : மோடி # இல்லியே ! பங்களா தேஷ் கூடப்போய் அங்கயும் கூழ் சாப்ட்டாரே?


================


13 தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை-ஜெ! .# அப்போ நீங்க இப்போ தமிழ் நாட்லயே இல்லை.கொடநாட்ல டேராவா?


=================


14 அஜித்க்கு தமிழ்நாட்ல 3.5 கோடி ரசிகர்கள் உண்டு - செய்தி # அப்போ மோடி யின் அடுத்த மரியாதை நிமித்தமான சந்திப்பு அஜித் கூடவா?


================


15 தமிழகத்தில் ஜெ அலை வீசுகிறது;- திருப்பூரில் சரத்குமார் # வெய்யில் தான் பயங்கரமா வீசுது


================


16 அதிமுகவை சிதைக்கும் ஜெ.: கருணாநிதி ஆதங்கம்@ மதுரை # தலைவரே! முதல்ல அழகிரியை கவனிங்க.திமுக வை சிதைச்சுடப்போறாரு


==============


17 தமிழகம் இருளில் தவிக்கிறது: கருணாநிதி # தலீவரே !இருட்டுக்கு பிள்ளையார் சுழி போட்டதே நாம தானே?நம்ம ஆட்சில தானே மின் வெட்டு ஆரம்பிச்சுது?


=================


18 நடுரோட்டில் நடிகை நக்மாக்கு முத்தமிட்ட MLA வால் பரபரப்பு!. # இது மரியாதை நிமித்த முத்தமேனு இரு தரப்பும் அடிச்சு விடும் பாருங்க


================


19 மோடி என் வீட்டில் டீ குடித்தார் - ரஜினி # நீங்க அல்வா குடுத்ததா கேள்விப்பட்டோம்.


==================


20 காதலிப்பது போல் நடித்து ஏமாற்றக்கூடாது - ஹன்சிகா # தப்பு உங்க சைடுலயும் இருக்கு.உங்க பர்ஸ்ட் லவ் ஒரு செகண்ட் ஹேன்ட் பர்சனிடம்


==========================
0 comments: