Friday, May 30, 2014

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 10 முன்னுரிமைகள்

முதல் 100 நாட்கள் ஆட்சியில் முன்னுரிமை அளிக்கவேண்டிய 10 முக்கிய விஷயங்களை அமைச்சர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அந்த 10 முன்னுரிமைகளாவன:

1.மக்களிடையே அதிகாரிகள் பற்றிய நம்பிக்கையை வளர்த்தெடுத்தல்.

2. புதிதான கருத்துக்கள் மற்றும் சுதந்திரமாக பணியாற்றுதலை வரவேற்பது.

3. கல்வி, சுகாதாரம், நீராதாரம், எரிசக்தி, சாலைகள் ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்தல்.

4. அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் மின் ஏலத்தை வளர்த்தெடுத்தல்.

5. அமைச்சகங்களுக்கு இடையிலான விவகாரங்களைக் கவனிக்க சிறப்பு ஏற்பாடு.

6. அரசு எந்திரத்தில் மக்கள் நலனுக்கான அமைப்பை ஏற்படுத்துதல்.

7. பொருளாதார விவகாரங்களுக்கு உடனுக்குடன் முன்னுரிமை அளித்தல்.

8. உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுச் சீர்திருத்தங்கள்.

9.அரசின் கொள்கையை குறித்த காலத்தில் செய்து முடித்தல்.

10. அரசுக் கொள்கைகளில் நிலையான போக்கைக் கடைபிடித்தல் மற்றும் திறமையாக செயல்படுதல்.
இந்த 10 முன்னுரிமைகளை பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் மாநில அரசுகள் முன்மொழியும் விவகாரங்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்குமாறு நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றச் செயல்பாடு குறித்து வெங்கையா நாயுடு கூறுகையில், பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூன் 4ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், சபாநாயகர் ஜூன் 6ஆம் தேதி தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிவித்தார். 


  • UNNIKRISHNAN THAMPI  from Kuwait
    நமஸ்தே ஜி மக்கள் குறை திர்க்கும் மோடி ஜி வாழ்த்துக்கள் -பாரத்மாதக்கி ஜெய் .
    about 16 hours ago ·   (1) ·   (1) ·  reply (0) ·  promote to News Feed
  • Thangadurai  
    Doing this 10 quote we are proved
    about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Ramesh Sargam at Deccan Chronicle Holdings Limited from Bangalore
    அமைச்சர்கள் செவி கொடுத்து கேட்டார்களா?
    about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • M.Siva  from Bangalore
    முதல்ல பெட்ரோல்,டீஸல்,காஸ் விலைகளை குறைத்து மக்கள் தலைமேல் சுமந்துள்ள பாரத்தை குறைத்தாலே இந்த மோடி ஆட்சிக்கு வெற்றிதான்.. செய்யமுடியுமா..?, இந்த 10 திட்டங்களும் செயல்படுத்த குறைந்தது ஒரு வருடமாவது வேண்டும்..100 நாட்களில் ஆரம்பிக்கதான்முடியும்..
    about 17 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Abdul Jailani  from Salem
    அறிவிப்பு நன்றாகவே இருக்கிறது. இது புதுமண தம்பதிகளின் தேனிலவு கால வாக்குறுதிகளாக இருந்துவிடக்கூடாது. உண்மையிலேயே செயல் படுத்தினால் நாடு சிறக்கும். வாழ்த்துக்கள்.
    about 17 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Donald  from Dubai
    சூப்பர்....
    about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • SRINIVASAN G  
    தங்க யு ஜி
    about 17 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • g.r.rajagopal  from Kolkata
    நல்ல தொடக்கம் காலாவகாசம் வேண்டும் நிர்வாக சீர்திருத்தம் அவசியம் பொறுத்திருந்து பார்ப்போம்.
    about 17 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • syed Ziaudeen  from Sharjah
    நீங்களும் இந்தியன், நானும் இந்தியன்.ஜாதி ,மதம் ,சிறுபான்மையினர், பெரும்பாயினர் -என்று பார்க்காமல் மக்களுக்காக சேவை செய்தீர்கள் என்றால் மக்கள் மனதில் இடம் பெறலாம் .சோனியா காந்தி இடம் மன்மோகன் சிங்க் ,கேட்டது மாதிரி மற்றவர்களிடம் கேட்கவேண்டாம் .இந்தியாவுக்கு வரும் காலங்கள் நல்லதாகவே நடக்க பிராத்தனை செய்வோம்
    about 17 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • ஜான்  from Bangalore
    விவசாயம் மற்றும் சுகாதாரம் போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை இல்லையா.
    about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Ragam Thalam  from Chennai
    நூறு நாட்களில் விலைவாசியை குறைத்தாலே மக்களின் 50% கவலை தீர்ந்துவிடும்.
    about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • ஜெ.பி  from Chennai
    அரசியல் வாதிகளை நம்பாமல் நேர்மையான அதிகாரிகளை துணைக்கு வைத்துகொண்டால் இந்த 10 விசயங்களையும் செவ்வனே திட்டமிட்டுள்ள நாட்களுக்குள் முடித்து வெற்றி பெறலாம் !ஏதேனும் ஒரு திட்டம் தொடங்கினால் எப்படியேனும் ஏதேனும் ஒரு விஷயம் ஒரு சாராருக்கு பாதகமாக இருக்கும் (உ .ம் உள்கட்டமைப்பு,நீராதாரம், சாலைகள்) அதை ஆராய்ந்து திறம்பட கையாண்டால் வெற்றி நிச்சயம் !
    about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • R.selvam  
    மக்களுக்காக சேவை செய்ய அழைக்கும் மோடிக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
    about 19 hours ago ·   (5) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Muthuaiyer  from Hyderabad
    இந்த 10 திட்டங்களும் நல்லவைதான். ஆனால் கால அவகாசம் கொடுத்திருப்பதுதான் குறைவாய் இருக்கிறது. ஆனால் இந்த அரசு இவற்றை திறம்படச் செய்யும் என்ற நம்பிக்கை கண்டிப்பாய் இருக்கு.
    about 19 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Prabhakar  from Muscat
    அரசியல்வாதிகளால் கேட்டு போனோம் என்று சொல்லும் அரசு அதிகாரிகளுக்கு மாறுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு. மக்களுக்காக சேவை செய்ய அழைக்கும் மோடிக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.
    about 19 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • A.Gomathinayagam  from Chennai
    பழைய அரசில் பணியாற்றிய அதிகாரிகள் தான் தொடர்கிறார்கள் 'அவர்களை கொண்டு விரைவாக மக்களுக்கு நன்மைகளைஅளிப்பது பெரிய சவால்
    about 19 hours ago ·   (2) ·   (1) ·  reply (0) ·  promote to News Feed
  • கா.சந்திரமோகன்.சேலம்.  
    இந்தியாவின் நிஜமான சூப்பர் ஹீரோவின் சிறப்பான பத்து அடிப்படை திட்டங்கள்.அருமை.
    about 20 hours ago ·   (1) ·   (6) ·  reply (0) ·  promote to News Feed
  • CHITHIRAI SELVAN  from Kovilpatti
    இந்த நிலைமை நீடிச்சா santhosam தான்
    about 20 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Gopinath Govindarajan at Advocate 
    மோடி அவர்களின் பத்து கட்டளைகளையும் செம்மையாகவும் விரைவாகவும் செயல்படுத்துவது அரசு அதிகாரிகளின் செயல்பட்டை பொறுத்துதான் உள்ளது. ஆகவே அரசு அதிகாரிகள் அனைவரும் நமது பாரத பிரதமரின் எண்ணங்களை வெறும் எழுத்து வடிவிலான அறிவிப்பாக நினைக்காமல் அரச கட்டளையாக பாவித்து செயல்படுத்தவேண்டும் – கோபிநாத், வழக்கறிஞர், கோவை
    about 20 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • THIRUMOORTHI  from Mumbai
    அறிவிப்பு நன்றாகவே இருக்கிறது. இது புதுமண தம்பதிகளின் தேனிலவு கால வாக்குறுதிகளாக இருந்துவிடக்கூடாது. உண்மையிலேயே செயல் படுத்தினால் நாடு சிறக்கும். வாழ்த்துக்கள்.
    about 20 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
    THIRUMOORTHI   Up Voted
  • abdul kareem  from Dubai
    காங்கிரசிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியா போன்ற உணர்வு ஏற்படுகிறது
    about 20 hours ago ·   (7) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • malarvel kai.aravinthkumar  from Salem
    புதிய இந்தியாவில் உள்ளாது போல் உள்ளது.
    about 20 hours ago ·   (3) ·   (2) ·  reply (0) ·  promote to News Feed
    indian  · இனியன்   Down Voted
  • சபரி ராஜ்  
    பிரதமரின் உத்வேகம் அனைத்து அதிகாரிகளுக்கும் இருக்க வேண்டும். அப்போது தான் திட்டங்கள் மக்களை சீக்கிரம் சென்றடையும்.
    about 20 hours ago ·   (4) ·   (1) ·  reply (0) ·  promote to News Feed
    sarguns   Down Voted
  • Mauroof Dubai  from Dubai
    மோடியின் 10 கட்டளைகள் - "நமோ தஸ்". இவர் சார்ந்த கட்சி கொள்கையின் படி இவை 11 கட்டளைகளாக வெளியிடப்பட்டிருக்க வேண்டும். விடுபட்டதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஆனால், அதை 11-வது கட்டளை என்று சொல்ல மாட்டேன். விடுபட்ட அந்த ஒன்றுதான் கட்டளை எண் 1. அறிவிக்கப்பட்ட/வெளியிடப்பட்ட 10 கட்டளைகளும் செவ்வனே நிறைவேற நம் (பாஜக-வின்) தாய்ச் சபை (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் நமது (பாஜக-வின்) அசூர வளர்ர்சிக்கு பேருதவியாய் இருந்துவரும் Corporate என்றழைக்கப்படும் பெருநிறுவனங்களின் ஒப்புதல் மற்றும் ஆதரவைப் பெற்றிட உறுதி பூணுதல்/அரும்பாடு படுதல்.
    about 21 hours ago ·   (5) ·   (18) ·  reply (0) ·  promote to News Feed
    indian   Up Voted
  • Natheem  from Chennai
    நீங்க சொல்ற இந்த 9, 10 பாயிண்ட் பத்தி சரியா புரியல? ஆர் எஸ் எஸ்-ஓட கொள்கைதான பி ஜே பி அரசோட கொள்கை. உங்களோட 3 முக்கிய கொள்கை 1- அயோத்தியில் ராமர்கோவில் கட்டனும் 2- காஸ்மிற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்குற 370 சட்டபிரிவை நீக்கணும் 3- சேது சமுத்திர திட்டத்த நிறைவேற்ற கூடாது. இதைதான உங்களோட கொள்கைன்னு சொல்றீங்க? முதல் 100 நாளோட அரசின் பணின்னு இத குறிபிற்றுகீங்க ஆனா அதுவே பி ஜே பி ஆட்சியோட கடைசி 100 நாலா இருக்கும் அத மறந்துராதிங்க.
    about 21 hours ago ·   (11) ·   (58) ·  reply (0) ·  promote to News Feed
    m Eleyas  Up Voted
    sabaaa  · Ravi Chandran  Down Voted
  • nagalakshmi  from Mumbai
    இவை அனைத்தையும் செய்து முடித்தால் மகிழ்ச்சி ....
    about 21 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • stanislas Perianayagam at Government from Mumbai
    மோடியின் பத்து முன்னுரிமைகளை இரண்டாக சுருக்கலாம்.முதலாவது,மக்களிடையே அதிகாரிகள் பற்றிய நம்பிக்கை .இரணடாவது அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை.எரிவதை இழுத்தால் கொதிப்பது நிற்கும் என்பது ஆட்சி முறைமைக்கு முற்றிலும் பொருந்தும்.முடிவுகளில் தவறுகள் நேரிடலாம்;நேரிடும்.எனினும் வெள்ளை உள்ளம் படைத்த அணுகுமுறை அனைத்து தரப்பையும் ஈர்க்க வல்லவை.ரகசியம் என்பதே சுயநலத்தின் விளைவாக மட்டுமே இருக்க முடியும்...
    about 21 hours ago ·   (1) ·   (0) ·  reply (1) ·  promote to News Feed
    • M.Siva  from Bangalore
      அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்..ஆனால் நல்ல முயற்சி.. வெற்றிபெற அனைவரும் முயற்சிக்கவேண்டும் ..
      about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Mohammed Nayeem  from Vellore
    Saying is Easy But doing is?
    about 22 hours ago ·   (5) ·   (2) ·  reply (1) ·  promote to News Feed
    Natheem   Up Voted

நன்றி - த இந்து

0 comments: