Wednesday, May 07, 2014

கோ மாதா எங்கள் கோர்ட் மாதா

1. பொய் பித்தலாட்டத்தில் திமுக வை மிஞ்சிவிட்டது அதிமுக-குஷ்பு! # இதுக்குத்தான் தமிழ் முழுசாத்தெரியாதவங்களை பேசவிடக்கூடாதுங்கறது.மானம் போச்சே


===================


2  அஜீத் படத்தில் மீண்டும் விவேக் # வேகமும் விவேகமும் சேர்ந்தா யோகம் தான்


===================


3 தோப்புக்கரணம் போட்டாக்கூட அதிமுக, திமுக ஜெயிக்க முடியாது-ப.சி # குட்டிக்கர்ணம் போட்டாலும் தமிழ்நாட்டில் காங் ஒரு சீட் கூட வராது


==================4 அழகிரியின் புகாருக்கு கருணாநிதி பதில் கூறுவாரா?-ஜெ., கேள்வி # சசிகலா பிரச்னை வந்தப்போ நடராஜன் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொன்னீங்ளா?==================


5 இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; இந்த லேடி: ஜெ., # தன் முனைப்பு தன்னைச்சுடும்.எனவே தலைக்கனத்தை விடும்!


=================


6 அண்ணா என்ற பெயரை எடுத்துவிட்டு ஜெ தி.மு.க." என்று வைத்துக் கொள்ளுங்கள- மு க # பகுத்தறிவாளர் என்பதை மஞ்சள் துண்டு மவராசன்னு ஆக்குங்க -ஜெ


=====================


7  தமிழன் தாழ்ந்து போய்விட்டானா? தமிழன் மானம் இல்லாமல் போய்விட்டானா? - மு க # கண்ணாடி முன்னாடி நின்னு ஏன் தலைவரே புலம்பறீங்க?


==================8 பணத்திற்காக வாக்கினை விற்றால் வாழ்க்கையை விற்றதாக பொருள்: கருணாநிதி. # கூட்டணிக்காக கொள்கையை விற்றால் மானத்தை விற்றதாகப்பொருள்


================


9 எல்லாரிடமும் பணம் வாங்குங்கள்: ஓட்டு எனக்கு -்: அரவிந்த் கெஜ்ரிவால் |# தாலியை யார் கழுத்துல வேணா கட்டிக்கோ,ஆனா முதல் இரவை மட்டும் என் கூட==================


10 இனிமே பாரத்மாதாகீ ஜே கிடையாது.. பாரத் மாதாவே ஜெ தான்டா!'' - நாஞ்சில் சம்பத்! # கோ மாதா எங்கள் கோர்ட் மாதா ,வாய்தா வாங்கும் பிராடு மாதா


==============


11 எல்லோரும் காலைக் காட்டுங்க.. விழுந்து விழுந்து ஓட்டுக் கேட்ட ADMK MLA# தேர்தல் முடியும் வரை மக்கள் காலில் ,முடிந்த பின் தலைவி காலில்


=================

12 எனது பேச்சில் நயவஞ்சகம் இல்லை; மக்களை ஏமாற்றும் சிந்தனை இல்லை: ஜெ # எதிர்க்கட்சிக்கு டெபாசிட் கிடைக்கக்கூடாது எனும் நல்லெண்ணம் இருக்கிறது


==================


13 பிரசாரத்தில் சொதப்பிய ் தலைவர் -நடிகை நக்மா, நரேந்திர மோடி மீது் தாக்கு # ஏம்மா நக்மா.உங்க கட்சி நிர்வாகத்திலயே சொதப்பிடுச்சே?


==================


14 நடத்தையை உளவுபார்க்க மனைவியின் வயிற்றுக்குள் கண்காணிப்பு கருவி பொருத்திய கணவன் #,புரியாத புதிர் ரகுவரனையே மிஞ்சிய டவுட் டேவிட்


===================


15 ஒரு குற்றமும் செய்யாத அழகிரியை நீக்கியது ஓரவஞ்சனை’’: பிரேமலதா விஜயகாந்த் # கழகத்துல பதவி வேணும்னா ஏதாவது தப்பு தண்டா செய்யனும்.


====================


16 குஜராத்தைவிட தமிழ்நாடு சிறப்பாக உள்ளது மோடிக்கு, ராகுல் பதில் # குஜராத்ல தண்ணீர் பஞ்சம் ஜாஸ்தி ,தமிழ் நாட்ல மின்சாரப்பஞ்சம் ஜாஸ்தி


=================1 7 மான்கராத்தே படம் பாக்ஸிங்கை இழிவுப்படுத்துகிறது.சென்னை பாக்சிங் வீரர் வழக்கு # நல்ல வேளை.அண்ணன் பத்ரி படம் பாக்கலை


===================18 கலை, இலக்கியத்தைக் காக்க திமுக எடுத்த நடவடிக்கைகளை அதிமுக முடக்கிவிட்டது-முக #இல்ல தலைவரே.இன்னும் மானாட மயிலாட நல்லாப்போய்ட்டுதான் இருக்கு


===============19 நல்லெண்ண அடிப்படையில் மீத்தேன் திட்டத்தில் கையெழுத்திட்டோம்! - கருணாநிதி # சொத்து சேக்கலாம்கறது நல்ல எண்ணம் தானே அதை சொல்றாரு


======================20 
தமிழகத்தில் மோடி அலை இல்லை: கருணாநிதி பேட்டி # தலைவரே! தோல்விக்கடலில் மூழ்கிட்டு இருப்பவருக்கு வெற்றியின் அலை தெரிய வாய்ப்பில்லை


===========================

0 comments: